Railway Velaivaippu 2021: தென்னக ரயில்வே (Southern Railway) தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது 2021 – ஆண்டுக்கான ஆக்ட் அப்ரென்டிஸ்கள் என்னும் ஆக்ட் தொழில்பழகுநர்களை அமர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 3378 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியும் விருப்பமும் உள்ள அனைத்து விண்ணப்பதாரர்கள் 30.06.2021 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த தென்னக ரயில்வே வேலைவாய்ப்பு 2021 அறிவிப்புப்படி 10-ம் வகுப்பு மற்றும் ITI-பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் (Merit List) மூலம்விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.