வியட்னாமில் புதிய ஹைபிரிட் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!

0
197

வியட்னாமில் கண்டறியப்பட்டுள்ள ஹைபிரிட் கொரோனா வைரஸ் காற்றில் பரவும் தன்மை கொண்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Corona Virus: வியட்னாமில் புதிய ஹைபிரிட் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!

வியட்நாம் நாட்டில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் இது மிகவும் ஆபத்தான வேகத்தில் பரவி வருவதாகவும் வியட்நாம் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் தோன்றியதாக கருதப்படும் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு முதல் உலக நாடுகளை புரட்டிப் போட்டுள்ளது. இதன் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் முழு ஊரடங்கை அமல்படுத்தி கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்தன. இந்தியாவிலும் கடந்த ஆண்டு இறுதிவாக்கில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தது,

இருப்பினும் கொரோனா தொற்றின் உருமாறிய வகை பிரேசில், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் கண்டறியப்பட்டது. இந்தியாவிலும் இது போன்ற உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது இரண்டாவது அலை பாதிப்புக்கு வித்திட்டுள்ளது. மேலும் முந்தைய பாதிப்பைக் காட்டிலும் இரண்டாவது அலை பரவல் பல மடங்கு பாதிப்புகளை ஏற்படுத்தியதுடன், உயிரிழப்புகளையும் அதிக அளவில் ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா வைரஸ்


இந்நிலையில் வியட்னாமில் புதியதாக உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக வியட்நாம் சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.

இது குறித்து பத்ரிகையாளர்களிடையே பேசிய வியட்னாம் சுகாதாரத்துறை அமைச்சர் Nguyen Thanh Long வியட்னாமில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸானது, இந்திய மற்றும் பிரிட்டன் வகை கொரோனா வைரஸின் ஹைபிரிட் வகை என கூறினார். மேலும் இதன் மரபணு குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட போது அது பிற கொரோனா வைரஸின் வகைகளைக் காட்டிலும் இதனுடைய பரவும் வேகம் மிக அதிகமாக இருப்பதாக கூறினார்.

உலக சுகாதார அமைப்பால் இதுவரை உலகில் பிரேசில், இந்தியா, பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 4 கொரோனா வைரஸ்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் வியட்னாமில் 7 வகை கொரோனா வைரஸ் வேரியண்ட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது மிகவும் ஆபத்தானதாக இருப்பதாக வியட்னாம் சுகாதாரத்துறை அமைச்சர் Nguyen Thanh Long தெரிவித்தார். கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளையும் வியட்னாம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.