Home கல்வி செய்திகள் தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையை சீரமைப்பதில் தமிழக அரசு மும்முரம்

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையை சீரமைப்பதில் தமிழக அரசு மும்முரம்

0

📌சென்னை: தமிழகபள்ளி கல்வித்துறை சீரமைப்பதில் தமிழகஅரசு மும்முரம் காட்டி வருகிறது. பள்ளி கல்வி இயக்குநர் பதவி நீக்கப்பட்டதுடன், புதியதாக ஆணையர் நியமிக்கப்பட்டு, அவருக்கு அதிக அதிகாரங்களை தமிழகஅரசு வழங்கி உள்ளது.

📌ஒரு நாட்டின் வளர்ச்சியில் கல்வி மற்றும் சுகாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதை கருத்தில்கொண்டு, மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை செயலாற்றி வருகிறது. தற்போதைய கொரோனா அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதைத்தொடர்ந்து கல்வித்துறையிலும் அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது.

📌தமிழக மக்களுக்கு அத்தியாவசிய மற்றும் அடிப்படையான தேவையான கல்வியை வழங்குவதில் தமிழகஅரசு தீவிரம் காட்டி வருகிறது. பள்ளி கல்வித் துறையில் பெரும் சீரமைப்பை ஏற்படுத்தி வருகிறது. அதன் முதல்படியாக, பள்ளி கல்வி இயக்குநர் பதவி நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக ஆணையர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

📌தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தின் செயலாளராக இருந்த கே.நந்தகுமார் இடமாற்றம் செய்யப்பட்டு பள்ளி கல்வி ஆணையராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பள்ளிக் கல்வித்துறை சீரமைப்பதற்காக அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது ஒரு சிறந்த முறையாக வரவேற்க படுகிறது.

📌ஆனால், ஆசிரியர் கூட்டமைப்புகள், சங்கங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகஅரசின் இந்த நடவடிக்கையைத் திரும்பப் பெறுமாறு தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

📌அதுபோல, டி.என்.ஜி.டி.எஃப்.பொதுச் செயலாளர் பேட்ரிக் ரேமண்ட் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக துறையில் பணியாற்றியவர் மற்றும் துறைக்கு வழிகாட்டக்கூடிய ஒருவர். தலைமை நிர்வாகிகள், டி.இ.ஓக்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் தினசரி அடிப்படையில் ஒருங்கிணைப்பதில் ஒருங்கிணைந்த இயக்குநர் பதவியை நீக்குவது அதிகாரத்தை மையப்படுத்துவது நல்லதல்ல, ”என்று தெரிவித்து உள்ளார்.

📌தமிழக உயர் மற்றும் உயர்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம், பள்ளிக்கல்வி இயக்குனர் பதவியை நீக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

📌இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கல்வித்துறை அதிகாரி ஒருவர், பள்ளி கல்வி ஆணையர், ஒரு ஐ.ஏ.எஸ் கேடர் பதவி, அனைத்து அதிகாரங்களுடனும் இருக்கும், மேலும் பள்ளி கல்வி இயக்குநர் பதவி இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!
Exit mobile version