மே 26ல் Super Blood Moon வானியல் நிகழ்வு தோன்றும்…

0
197

மே 26ம் தேதி நிகழும் சந்திரகிரகணம் – சிவப்பு நிறத்தில் தோன்றப்போகும் நிலவு…

வருகிற 26 ஆம் தேதி நிகழும் சந்திரகிரணத்தின் போது, நிலவு சிவப்பு வண்ணத்தில் தோன்றும்.

சூரிய குடும்பத்தில் உள்ள பூமி, சூரியனை சுற்றி வருவதோடு, தன்னைத்தானேயும் சுற்றி வருகிறது. பூமியின் துணைக் கோளான சந்திரன், பூமியை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி நேர்கோட்டில் வரும்போது, சந்திரகிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டு, வருகிற 26 ஆம் தேதி நிகழும் சந்திரகிரகணம் மிக சிறப்பானது.

அதாவது, நீள்வட்டபாதையில் பூமியை சுற்றும் சந்திரன், பூமிக்கு மிக அருகில் வரும்போது, இந்த சந்திரகிரகணம் நிகழ்கிறது. அப்போது, சந்திரன் மீது சூரியனின் கதிர்கள் விழுவதை பூமி முற்றிலுமாக தடுக்கிறது. இதனால் சந்திரன் இரத்த சிவப்பு நிறத்தில் தோன்றுகிறது. இது வானியல் விஞ்ஞானிகளால் Super Blood Moon என அழைக்கப்படுகிறது.

இந்த வானியல் அதிசயத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். இந்த சந்திரகிரகணம் சுமார் 3 மணி நேரம் நடைபெறுகிறது. முழு சந்திர கிரகணம் சுமார் 15 நிமிடங்கள் நீடிக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.17 மணிக்கு தொடங்கும் சந்திரகிரகணம், இரவு 7.19 மணிக்கு நிறைவடைகிறது. இந்திய நேரப்படி பகலிலேய முழு சந்திரகிரகணம் நடைபெறுவதால், அதை முழுமையாக பார்க்க முடியாது.

எனினும், வடகிழக்கு மாநிலங்களில் மாலையில், சந்திரகிரகணம் நிறைவடையும் நேரத்தில் இதை பார்க்க வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வானில் தோன்றும் அதிசய நிகழ்வை பெரும்பாலான இந்திய மக்கள் பார்க்க முடியாதது என்பது வருத்தமான செய்தியாகும்.