கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க 5 சுவாசப் பயிற்சிகள்!

0
446

வேகமாக பரவி வரும் சார்ஸ் கோவிட் வைரஸ் 2 நுரையீரலையும், சுவாசப் பாதையையும் தாக்குகிறது. இதனால், சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு, ஆக்சிஜன் பற்றாக்குறை உருவாகி உயிரிழப்பை சந்திக்க நேரிடுகிறது. போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் பல்லாயிரக்கணாக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். போதிய மருத்துவ கட்டமைப்பு இல்லாததால் அனைவருக்கும் சிகிச்சை என்பது சாத்தியமில்லாததாக மாறியுள்ளது. நெருக்கடியான இந்த நேரத்தில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. வீட்டிலேயே மூச்சுப்பயிற்சிகள் செய்வதன் மூலம் நுரையீரலின் செயல்பாட்டை அதிகரித்து ஆக்சிஜன் ஓட்டத்தையும் அதிகரிக்க முடியும்.

ஆழ்ந்த சுவாசம்

ஆழ்ந்த சுவாச பயிற்சிகளை மேற்கொள்ளும்போது சுவாசப் பாதை மற்றும் நுரையிரலின் செயல்பாடுகள் மேம்படும். ஒருவேளை உங்களின் சுவாசப் பாதையில் அழற்சி ஏதேனும் இருந்தால், ஆழ்ந்த சுவாசத்தின் மூலம் தடுக்கப்படுகிறது. சளியின் அளவை குறைப்பதிலும், தொற்றுநோயை எதிர்கொள்ளவும் சுவாசப் பயிற்சிகள் தேவை. மிக ஆபத்தான நிலையில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு வாய்வழி சுவாசம் மூலம் உயிரைக் காப்பாற்ற முடியும்.

இவைமட்டுமல்லாது, மன அழுத்தம், பதட்டம் ஆகியவற்றில் இருந்து மீள்வதற்கு சுவாசப் பயிற்கள் உதவுகின்றன. கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், ஆழந்த சுவாசப் பயிற்சிகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கின்றனர். வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும் நோயாளிகள் யோகாசனம் மற்றும் மூச்சு பயிற்சிகள் செய்துவரும்போது, நுரையிரல் பலமடையும். மூச்சுப் பயிற்சிகள் உங்களை கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக காப்பாற்றது என்றாலும், அதற்கு எதிராக போராடக்கூடிய ஆற்றலைக் கொடுக்கும். உடனடி ஆக்சிஜன் தேவை என்ற நிலையை குறைக்கிறது.

டயாபிராக்மடிக் சுவாசம்

தொப்பை சுவாசம் (belly breathing) என்றும் அழைக்கப்படுகிறது, இந்த பயிற்சியைச் செய்வது உதரவிதானத்தின் (diaphragm) செயல்பாட்டை மேம்படுத்தவும், நுரையீரலின் அடிப்பகுதிக்கு அதிக காற்றைப் பெறவும் உதவுகிறது. இதைச் செய்ய, நிதானமாக உட்கார்ந்து கொள்ளுங்கள் அல்லது வசதியாக படுத்துக் கொள்ளுங்கள். நன்றாக ஓய்வெடுத்து, உங்கள் மேல் முன் பற்களுக்கு பின்னால் நாவின் நுனியை வைக்கவும். உங்கள் முதுகை நேராகவும் கண்களை மூடிக்கொள்ளுங்கள். சாதாரணமாக சுவாசிக்க முயற்சிக்கவும். பின்னர் உங்கள் மார்பில் ஒரு கையும், உங்கள் வயிற்றில் ஒரு கையும் வைக்கவும். உங்கள் மூக்கு வழியாக ஆழமாக சுவாசிக்கவும். அப்போது, உங்கள் விலா எலும்புகளை விரிவுபடுத்தி, வயிறு வெளிப்புறமாக விரிவடைவதை உணரவும். காற்றை மெதுவாக வெளியிடும்போது, வயிறு உட்புறமாக செல்ல வேண்டும். இந்த சுவாசப் பயிற்சியை 10 முறை செய்ய வேண்டும்.

பர்ஸ் லிப் சுவாசப் பயிற்சி

நுரையீரலில் இருக்கும் அசுத்தமான காற்றை வெளியேற்றும் மிகச்சிறந்த பயிற்சியாகும். ரிலாக்ஸான ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். மெதுவாக காற்றை மூக்கின் வழியாக உள்ளிழுக்க வேண்டும். அப்போது, எண்களை மனிதில் எண்ணிக்கொள்ளுங்கள். காற்றை உள்ளிழுக்கும்போது வாய் மூடியிருக்க வேண்டும். பின்னர், வாயை பர்ஸ் போல் குவித்து மெதுவாக உள்ளிழுத்த காற்றை வெளியிட வேண்டும். உள்ளிழுத்த காற்றின் நேரத்தைவிட, காற்றை வெளியிடும்போது கூடுதலான நொடிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கொட்டாவி to சிரிப்பு

இந்த சுவாசப் பயிற்சி உங்களின் இதய தசைகளை விரிவடைய செய்து, ஆக்சிஜன் ஓட்டத்தை அதிகரிக்க உதரவிதானத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. அமைதியான இடத்தில் முதுகை நேராக வைத்து அமர வேண்டும். தற்போது கைகளை அகலமாக மேல உயர்த்தி மேல பார்த்தவாறு வாயை விரித்து கொட்டாவி விட வேண்டும். பின்னர், கைகளை தொடைக்கு கொண்டு வந்து சிரிக்க வேண்டும்.

பிரணாயாமா

மிகச்சிறந்த சுவாசப் பயிற்சிகளுள் பிராணாயாமாவும் ஒன்று. நுரையீரலை வலுப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை இந்த பயிற்சி கூட்டும். சுவாசத்தை நெறிப்படுத்தும். பிராணாயமா செய்யும் போது வயிறு காலியாக இருக்க வேண்டும். கால்களை பின்னல்போட்டு (cross Leg), நேராக அமர வேண்டும். தலையை உயர்த்தி ஆழமாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும். பின்னர் மெதுவாக உள்ளிழுத்த காற்றை வெளியே விட வேண்டும். இதனை தொடர்ந்து 10 முறை செய்ய வேண்டும்.

அனுலோம் விலாம்

அனுலோம் விலோம் சுவாசப் பயிற்சி மூலம் நுரையீரலில் இருக்கும் நச்சுவை வெளியேற்றலாம். அதிகப்படியாக சுரக்கும் திரவங்களை கட்டுப்படுத்தி, நுரையீரலுக்கு தேவையான ஆக்சிஜனேற்ற ரத்தத்தை சீராக்குகிறது. நுரையீரலையும் வலுப்படுத்துகிறது. கால்களை பின்னல்போட்டு அமர வேண்டும். கைகளை முழங்கால் மீது வைத்துக்கொள்ளுங்கள். கண்களை முடியபிறகு, வலது கையை எடுத்து வலது பக்க மூக்கை அடைதுவிடுங்கள். இடதுபுற மூக்கின் வழியாக மூச்சை ஆழமாக 4 முறை உள்ளிழுக்க வேண்டும். தற்போது இடது மூக்கை அடைத்து, வலது மூக்கின் வழியாக உள்ளிழுத்த மூச்சை மெதுவாக வெளியே விட வேண்டும். காற்றை உள்ளிழுத்த நேரத்தை விட வெளிவிடும்போது கூடுதல் நொடிகள் எடுத்துகொள்ள வேண்டும். சாப்பிடுவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாக இந்த பயிற்சி செய்ய வேண்டும்.

முன்னெச்சரிக்கை

மூச்சுப்பயிற்சிகள் நுரையீரலை பலப்படுத்தி, சுவாச கோளாறுகளில் இருந்து விடுபட உதவுகிறது. கடுமையான நோய் தொற்று இருப்பவர்கள் மருத்துவரின் அறிவுரைப்படி மட்டுமே மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். சாதாரண காய்ச்சல் மற்றும் லேசான அறிகுறி இருப்பவர்கள் முழுமையான பயிற்சியை மேற்கொள்ளலாம். ஆக்சிஜன் அளவு குறைவதுபோன்ற உணர்வு ஏற்பட்டால் மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். சிகிச்சையில் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் புதிதாக முயற்சி செய்ய வேண்டாம்.