Home 10th 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்குவது என்பது குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனை…

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்குவது என்பது குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனை…

0

  தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். SSLC மாணவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்குவது என்பது குறித்து தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் செயலாளர் தீரஜ்குமார், ஆணையர் நந்தகுமார், தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தற்போது உள்ள சூழலில் பொதுத்தேர்வு நடத்த வாய்ப்பு உள்ளதாக என்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வு நடத்துவது பற்றி அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். தினசரி கொரோனா தொற்று 35 ஆயிரத்தை தாண்டகிறது. எனவே எவ்வித தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

error: Content is protected !!
Exit mobile version