Home கல்வி செய்திகள் கொரோனா – கல்வித்துறை கட்டுப்பாடுகள் என்னென்ன? – முழு விவரம்

கொரோனா – கல்வித்துறை கட்டுப்பாடுகள் என்னென்ன? – முழு விவரம்

0

கொரோனா – கல்வித்துறை கட்டுப்பாடுகள் என்னென்ன? – முழு விவரம் 

+2 மாணவர்களுக்கான தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தப்படும் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. இருப்பினும், +2 மாணவர்களுக்காக தற்போது நடைபெற்று வரும் செயல்முறைத் தேர்வு மட்டும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்படும்.



1 .கல்லூரி/பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணைய வழியாகவகுப்புகளை எடுக்க வேண்டும்.


2. அரசு மற்றும் தனியார் கல்லூரி/பல்கலைக்கழக தேர்வுகள்இணையவழியாக    மட்டுமே நடத்தப்பட வேண்டும்.

3. கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், இணைய வழியாக மட்டுமே பயிற்சி வழங்க அனுமதிக்கப்படுகிறது.

4. கோடை கால முகாம்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.

கரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்படுவதை கண்காணிக்க மாவட்டம் தோறும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும். கரோனா நோய்த்தொற்று சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

error: Content is protected !!
Exit mobile version