பொறியியல் பட்டதாரிகளுக்கு ஊதியத்துடன் APPRENTICE பயிற்சி| BHEL TRICHY

0
470
BHEL
BHEL

பாரத் ஹெவி எலெக்ட்ரிகல் லிமிடெட் நிறுவனம் , திருச்சியில் Graduate Apprentice  பயிற்சிக்கு திறமையும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வளைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

நிறுவனம்BHEL
பணியின் பெயர்Graduate Apprentice
ஊதியம்Rs. 9,000 /-Per Month
பணியிடங்கள்66
கடைசி தேதி14.04.2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
தகுதிகள் :

Board of Apprenticeship Training (Southern Region) விதிகளுக்கு உட்பட்டு BHEL நிறுவனம் புதிதாக பட்டப்படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கு ஒரு ஆண்டிற்கான Apprenticeship பயிற்சியை வழங்குகிறது.

குறைந்தபட்ச கல்வித் தகுதி:
Board of Apprenticeship training (BOAT)ஆல் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் அல்லது தொழில்நுட்ப பிரிவில் (ENGINEERING or TECHNOLOGY) பட்ட படிப்பை முடித்தவர்கள் இதற்க்கு விண்ணப்பிக்கலாம். கடைசி மூன்று வருடமான 2018, 2019 or 2020ல் பட்ட படிப்பை படிப்பை (SANDWICH COURSES ARE NOT ELIGIBLE AS PER BOAT) முடித்தவர்கள் மட்டுமே இதற்க்கு விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள்.

உடற் தகுதி : As prescribed in Clause 4 of Apprenticeship Rule 1992, and amendments thereof if any

முந்தைய பயிற்சி : ஏற்கனவே apprenticeship பயிற்சியில் உள்ளவர்கள் அல்லது முடித்தவர்கள், இதற்க்கு விண்ணப்பிக்க முடியாது.

BOAT ,Government of India portalல் ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மட்டுமே இதற்கு விண்ணபிக்கலாம். விண்ணப்ப படிவத்தில் BOAT பதிவு என்னை பூர்த்தி செய்ய வேண்டும்.( BOAT Portal www.mhrdnats.gov.in )

முக்கிய தேதிகள்

1. ஆன்லைன் விண்ணப்பம் ஆரம்பம் : 01/04/2021

2. ஆன்லைன் விண்ணப்பம் முடிவு : 14/04/2021

3. தேர்ந்தெடுகப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு : 16/04/2021

4. சான்றிதழ் சரிபார்ப்பு : 21/04/2021 முதல்

விண்ணப்பிக்கும் முறை.

1. https://trichy.bhel.com என்ற இணைய முகவரிக்கு செல்ல வேண்டும.

2. “Apprenticeship Application Portal (TRICHY)” ல் கிளிக் செய்ய வேண்டும்.

3. “Register” என்ற இணைப்பில் செல்லவும்.

4. எல்லா நிபந்தனைகளையும் படித்து ஏற்றுகொண்டால் “l agree” என்பதை கிளிக் செய்யவும்.

5. படிவத்தை நிரப்பி “REGISTER” என்பதை கிளிக் செய்து சமர்பிக்க வேண்டும்.

6. One Time Password (OTP) உங்கள் மொபைல் மற்றும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும். அதைக் கொண்டு புதிய கடவுச் சொல்லை (New password) உருவாக்க வேண்டும்.

இந்த புதிய கடவுச்சொல்லைக் கொண்டு Login செய்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.

7. கீழ்கண்டவற்றை Scan செய்து upload செய்யவும்.

i) passport size photograph

ii) signature (கையெழுத்து)

iii) Bank passbook front page (வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம்.)

iv) Aadhaar card (ஆதார் அட்டை)

v) 10th mark sheet (பத்தாம் வகுப்பு மதிப்பண் சான்றிதழ்)

vi) உங்கள் பொறியியல் அல்லது தொழில்நுட்ப பிரிவு படிப்பின் Consolidated mark sheet.

தேர்வு செய்யும் முறை :

உங்கள் final/semester தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மெரிட் லிஸ்ட் தயார் செய்யப்பட்டு தேவைக்கேற்ற எண்ணிக்கையில் நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். shortlisted செய்யப்பட்டப் candidates சான்றிதழ் சரிபார்ப்பிற்காக HRDC,BHEL,Trichy க்கு அழைக்கப்படுவார்கள். தேதி மற்றும் நேரம் பின்னர் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிப்பவர் கவனத்திற்கு:

Online Application Closing Date: 14/04/2021

தகுதியுள்ள நபர்கள் முதலில் Ministry of Education/GOl portal – www.mhrdnats.gov.in பதிவு செய்து 16 இலக்க apprenticeship registration number-ஐ குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.BHEL portalல் விண்ணப்பிக்கும் போது இந்த பதிவு எண் அவசியம்.

www.mhrdnats.gov.in -ல் பதிவு செய்தவர்கள் BHEL Trichy portalல் விண்ணப்பிக்க இந்த இணைப்பில் செல்லவும் link – https://trichy.bhel.com.

ஆன்லைன் வழி விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் பயன்பாட்டில் உள்ள மொபைல் எண் மற்றும் மின்னஞ்சலை கொடுக்க வேண்டும்.ஏனெனில் அனைத்து அறிவிப்புகளும் உங்களுக்கு மின்னஞ்சல் மற்றும் மொபைல் மூலமாகவே அனுப்பப்படும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம். ஆன்லைன் விண்ணப்பத்தின் நகலை சான்றிதழ் சரிபார்ப்பின் போது சமர்பிக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நபர்களின்பெயர் பட்டியலை https://trichy.bhel.com (Click Our services->Apprenticeship Application Portal) ல் சென்று உங்கள் மின்னஞ்சலை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.