உங்கள் தொகுதி வேட்பாளர்களை அறிந்து கொள்ளும் வசதி இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதள பக்கத்தில் உள்ளது. எந்த மாநிலம், எந்த தொகுதி என்பதை கிளிக் செய்தால், வேட்பாளர்களின் விவரம் முழுமையாக வரும். வேட்பாள்ர்கள் தாக்கல் செய்த சொத்து விவரங்கள், குற்ற வழக்குகள் உள்ளிட்ட பட்டியலை பார்க்க முடியும். இந்திய தேர்தல் ஆணையத்தின் https://affidavit.eci.gov.in/candidate-affidavit என்ற இணையதளப் பக்கத்தில், உங்கள் மாநிலம் மற்றும் தொகுதி ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து அதன் கீழே இருக்கும் ‘Filter’ என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.
உங்கள் பார்வைக்கு அதன் கீழே உங்கள் தொகுதியில் எந்தெந்தக் கட்சி சார்பில் யார் யார் போட்டியிடுகிறார்கள் மற்றும் சுயேட்சையாகவும் யார் யாரெல்லாம் போட்டியிடுகிறார்கள் என்ற விபரம் இருக்கும்.
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வேட்பாளரது ப்ரொபைலில் கிளிக் செய்தால், அவர்களைப் பற்றிய விபரங்கள் அனைத்தும் உங்கள் பார்வையில் தெரியும். வேட்பாளர்களின் வேட்புனுவை டவுன்லோடு செய்யவும் முடியும்.
உதாரணமாக தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில் சேப்பாக்கம் தொகுதியை தேர்வு செய்தால் அங்கு போட்டியிடும் வேட்பாளர்கள் லிஸ்ட் வரும். குடும்ப சொத்துக்கள் அவர்கள் தாக்கல் செய்த வேட்புமனுவில் இருந்து, அவர்களைப் பற்றிய சொத்து விபரங்கள், அவர்கள் மேல் குற்ற வழக்குகள் பதியப்பட்டிருந்தால் அதனைப் பற்றிய விபரங்கள், மற்றும் அவர்களது குடும்பத்தின் மொத்தச் சொத்து விபரங்கள் உட்பட அனைத்து விபரங்களையும் அறியலாம்.
உங்கள் தொகுதி வேட்பாளர்களின் பற்றி ஆன்லைனில் அறிந்து கொள்ள கீழ்கண்ட CLICK பட்டனை கிளிக் செய்யவும்