Today History 17.01.2021

0
226
நிகழ்வுகள் : 17.01.2021
👉 1991ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி வளைகுடாப் போர் ஆரம்பித்தது.

எம்.ஜி.ராமச்சந்திரன் பிறந்தநாள் இன்று….
👉 புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி இலங்கையில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் மருதூர் கோபாலன் ராமச்சந்திரன்.
👉 இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். மேலும் இவர் 1977ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை தொடர்ந்து மூன்று முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர்.
👉 சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமானார். பிறகு அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
👉 1960ஆம் ஆண்டு இவர் பத்மஸ்ரீ விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்டார். இவர் பாரத ரத்னா விருது, அண்ணா விருது, வெள்ளியானை விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.
👉 மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி, தன்னுடைய 70வது வயதில் மறைந்தார்.

பெஞ்சமின் பிராங்கிளின் பிறந்தநாள் இன்று….
🌹 ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கிய மூத்த தலைவர் பெஞ்சமின் பிராங்கிளின் 1706ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பிறந்தார்.
🌹 இவர் ஓர் அரசியல் தலைவர் மட்டுமல்ல, ஒரு எழுத்தாளர், அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் என பல துறைகளில் ஈடுபட்டுள்ளார்.
🌹 இவர் Poor Richards Almanack என்ற புகழ்பெற்ற இதழை இவ்வுலகுக்குத் தந்தவர்.
🌹 மின்சாரம், பற்றியும் இடி மின்னல் பற்றியும், புகழ்பெற்ற ஆராய்ச்சிகளை செய்து இடி தாங்கியையும், வெள்ளெழுத்தக் கண்ணாடியையும் (bifocal glasses) மற்ற பல கருவிகளையும் கண்டுபிடித்தவர்.
🌹 அறிவியல் துறைக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய பிராங்கிளின் 1790ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி தனது 84வது வயதில் மறைந்தார்.