Home தெரிந்து கொள்வோம் நமக்கு விக்கல் எதனால் ஏற்படுகிறது தெரியுமா…? மூளை செய்யும் மாயாஜாலம்…

நமக்கு விக்கல் எதனால் ஏற்படுகிறது தெரியுமா…? மூளை செய்யும் மாயாஜாலம்…

0
        நமக்கு அடிக்கடி விக்கல் ஏற்பட்டிருக்கும் எப்போதாவது நமக்கு ஏன் விக்கல் ஏற்படுகின்றது என்பதை யோசித்தது உண்டா?. உண்மையில் விக்கல் வருவதற்கான காரணத்தை கேட்டீர்கள் என்றால் அசந்து போவீர்கள். 
       நமது உணவுக்குழல் நமது சுண்டுவிரல் அளவுக்கு மெல்லியதாக இருக்கும். அந்த மெல்லிய பாதை வழியாக குறிப்பிட்ட அளவு உணவினை மட்டுமே அனுப்ப முடியும். 
          ஆனால் நாம் சில நேரங்களில் அளவுக்கு அதிகப்படியான உணவினை அதில் திணிக்கும் பொழுது உணவு, அந்த மெல்லிய பாதையில் சிக்கிக் கொள்கிறது. உணவு குடலில் உணவு சிக்கியிருப்பதை நமக்கு உணர்த்துவதற்கு எந்த ஒரு வசதியும் இல்லாததால் அங்கு இருக்கக்கூடிய செல்கள் உடனடியாக இந்த செய்தியை மூளைக்கு வழங்குகிறது. 
        மூளை உடனடியாக உதரவிதானத்தை தொடர்புகொண்டு உணவுக்குழலில் சிக்கியிருக்கும் உணவினை அகற்றுவதற்காக ஒரு விசையை அழுத்த சொல்லும். மூளையின் உத்தரவின் படி உதரவிதானம் சுருங்கி மேல் நோக்கி காற்றினை செலுத்தும் நிகழ்வே விக்கல் எனப்படுகிறது. 
         மேலெழும்பி வரும் காற்றினால் உணவு திவலைகள் அகற்றப்படும் இல்லை என்றால் நமக்கு வெளியில் சப்தமாக வரும். சப்தம் வருவதைக் கண்டவுடன் நாம் உணவு குடலில் உணவு சிக்கி இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு தண்ணீர் பருகுவோம். 
error: Content is protected !!
Exit mobile version