
🔹SPECIAL TET/SGT/TNPSC தேர்வுக்கு சமூக அறிவியல் பாடத்தினை படிப்பது எப்படி?🔹
⏩6-வது முதல் 10-வது வரை: இந்தப் பாடப்புத்தகங்களை வரி விடாமல் படிப்பது அவசியம்.
⏩படிக்கும் முறை (Smart Study)
⏩சிறு குறிப்புகள் (Short Notes): முக்கியமான வரிகளை அண்டர்லைன் செய்து கொள்ளுங்கள். அண்டர்லைன் செய்த பின்னர் அதற்கு கீழே 1,2,3 என எண்களை இட்டுக் கொள்ளுங்கள்.. எப்படியும் ஒரு பாடத்திற்கு 75-150 வரை அண்டர்லைன் செய்து எண்கள் இட்டு இருப்பீர்கள். அடுத்த முறை படிக்கும் பொழுது அண்டர் லைன் செய்தவற்றை மட்டும் படித்தால் போதுமானது.
⏩வரைபடப் பயிற்சி (Maps): ஆறுகள் பாயும் திசை, மலைத்தொடர்கள், மண் வகைகள் மற்றும் சரணாலயங்களை வரைபடம் மூலம் படியுங்கள். அது நீண்ட காலம் நினைவில் இருக்கும்.
⏩காலக்கோடு (Timeline): முக்கியமான போர்கள், உடன்படிக்கைகள் மற்றும் நிகழ்வுகளை ஒரு தாளில் காலவரிசைப்படி எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
⏩திருப்புதல் மற்றும் மாதிரித் தேர்வுகள்
வாரத்திற்கு ஒருமுறை படித்தவற்றைத் திரும்புப் பாருங்கள்.
⏩அடிக்கடி Online Test அல்லது மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்ப்பது உங்கள் வேகத்தையும் துல்லியத்தையும் அதிகரிக்கும்.
⏩ சமூக அறிவியல் பாடங்களை பொறுத்தவரை வரி வரியாக படித்து மையக்கருத்தினை உட்கொண்டால் மட்டுமே தேர்வில் கேட்கப்படும் வினாக்களுக்கு சரியான பதிலை வழங்க முடியும்
⏩உங்களால் வரி வரியாக படிக்க முடியவில்லையா?:
1) சமூக அறிவியல் ஒன் லைனர்-ஐ படியுங்கள் .. அதனை படித்த பின்னர் பள்ளி மாணவர்கள் வைத்துள்ள (EC,DON, DOLPHIN) கையேடுகளை வாங்கி அதில் உள்ள கூடுதல் வினாக்களை ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள். நிச்சயம் அது பயனுள்ளதாக இருக்கும்.
2)பின்னர் பாடப்புத்தகத்தில் உள்ள BOOK BACK வினாக்களை நன்கு படித்துக் கொள்ளுங்கள்
3) பின்னர் சமூக அறிவியல் பாட புத்தகத்தில் உள்ள அட்டவணை பகுதி குறிப்புகளை நன்கு படித்துக் கொள்ளுங்கள்.
6th-10th Social science book back questions pdf

