Home Uncategorized ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET 2026) உத்தேச விடைகள் Tentative Answer Key |...

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET 2026) உத்தேச விடைகள் Tentative Answer Key | PAPER 1 & 2

0

TEACHERS RECRUITMENT BOARD 2026 – TET PAPER 1 AND 2 TENTATIVE ANSWER KEY

ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியீடு – பத்திரிகை செய்தி.!!

ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB), தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) தாள் – I க்கான OMR அடிப்படையிலான தேர்வினை 04.07.2026 அன்றும், தாள் – II க்கான தேர்வினை 05.07.2026 அன்றும் நடத்தியது. தற்போது, ஆசிரியர் தேர்வு வாரியம் இதற்கான தற்காலிக விடைக்குறிப்பை ஆட்சேபனைத் தெரிவிக்கும் வசதியுடன் (Objection Tracker) வெளியிட்டுள்ளது.

இந்த ஆட்சேபனைத் தெரிவிக்கும் வசதி மூலம், தேர்வர்கள் தற்காலிக விடைக்குறிப்புடன் கூடிய முதன்மை வினாத்தாளைப் (Master Question Paper) பார்வையிடலாம். தேர்வர்கள் தங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், அதை TRB இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் ஆட்சேபனைத் தெரிவிக்கும் வழிமுறை மூலமாக மட்டுமே, 15.07.2026 முதல் 22.07.2026 வரை குறிப்பிட்ட காலத்திற்குள் தெரிவிக்கலாம். தேர்வர்கள் தங்களின் ஆட்சேபனை அல்லது கோரிக்கைகளை முதன்மை வினாத்தாளின் (அதாவது வினா எண் மற்றும் விருப்பங்களின்) அடிப்படையில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆட்சேபனைகள் எதற்கும் தேர்வர்கள் தரப்படுத்தப்பட்ட (Standard Books) புத்தகங்களிலிருந்து மட்டுமே ஆதாரங்களை வழங்க வேண்டும். வழிகாட்டிகள் (Guides), குறிப்புகள் (Notes) மற்றும் இணையதள முகவரிகள் போன்ற ஆதாரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) ஏற்றுக்கொள்ளாது.

மின்னஞ்சல் (E-mail), கூரியர் (Courier), அஞ்சல் (India-post) அல்லது நேரில் அளிக்கும் விண்ணப்பங்கள் உள்ளிட்ட வேறு எந்த வடிவத்திலான கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தகுந்த ஆதாரங்கள் இல்லாத கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது; அவை உடனடியாக நிராகரிக்கப்படும்

error: Content is protected !!
Exit mobile version