1. கூற்று : முகமது பின் துக்ளக் தங்க நாணயங்களை வெளியிட்டார். காரணம் : இது நாட்டில் செல்வச் செழிப்பு இருந்ததைக் காட்டுகிறது.
3. கூற்று : அல்பரூனி ஒரு கற்றறிந்த அறிஞர் காரணம் : இவர் சமஸ்கிருதம் மற்றும் இந்தியத் தத்துவங்களையும் கற்றார்.
4. அயல்நாட்டு வரலாற்றுத் தொகுப்பாளர்களின் குறிப்புகள் சாதாரண மக்களின் வாழ்நிலை குறித்து ஏராளமான செய்திகளைத் தருகின்றன.
5. கூற்று : முகமதுகோரி தனது தங்க நாணயங்களில் பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதிப்பித்தார். காரணம்: இத்துருக்கிய படையெடுப்பாளர் மத விசயங்களில் தாராள மனப்பான்மை கொண்டவராய் இருந்தார்.
6.கூர்ஜரப் பிரதிகாரர் மரபினைத் தோற்றுவித்தவர்
7. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்ந்து, சரியான கூற்று கூற்றுகளைக் கூறவும். 1. தர்மபாலர் தலைசிறந்த சமண மத ஆதரவாளர் ஆவார். 2. அவர் நாலந்தா பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தார் 3. தர்மபாலருக்குப்பின் அவரது மகன் தேவபாலர் ஆட்சிக்கு வந்தார்
8. கூற்று : தரெய்ன் போரின் வெற்றிக்குப் பின் முகமது கோரி கஜினிக்குத் திரும்பினார். காரணம் : தனது நாட்டின் எல்லையில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்திய துருக்கியரையும், மங்கோலியரையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
9. கூற்று : இரண்டாம் தரெய்ன் போரில் பிருதிவிராஜ் தோல்வியடைந்தார். காரணம் : ராஜபுத்திரர்களிடையே ஒற்றுமை இல்லை.
10. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. அவற்றில் எது/எவை சரியானவை என்பதைக் கண்டறியவும். i. ரக்ஷாபந்தன் என்ற மரபானது ராஜபுத்திரர்களுடையது. ii. வங்கப் பிரிவினையின் போது ரவீந்திரநாத் தாகூர் பெருமளவில் மக்கள் பங்கேற்ற ரக்ஷாபந்தன் விழாவைத் தொடங்கினார். iii. இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிரிப்பதற்காக ஆங்கிலேயர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிரானதாக இது திட்டமிடப்பட்டது.
11. பிற்காலச் சோழர்கள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை? i) அவர்கள் ஓர் உள்ளாட்சித் துறைத் தன்னாட்சி அமைப்பைக் கொண்டிருந்தனர். ii) அவர்கள் வலுவான கப்பற்படையைக் கொண்டிருந்தனர். iii) அவர்கள் பௌத்தத்தைப் பின்பற்றினர். iv) அவர்கள் பெரிய கோவில்களைக் கட்டினர்
12. கீழ்க்காணும் நிகழ்வுகளைக் கால வரிசைப்படி எழுதவும். 1) மாறவர்மன், வீரபாண்டியனைக் கூட்டு அரசராகப் பணியமர்த்தினார். 2) உள்நாட்டுப்போர் தொடங்கியது. 3) மதுரையில் ஓர் இஸ்லாமிய அரசு உருவாக்கப்பட்டது. 4) மாறவர்மன் குலசேகரனுக்கு இரண்டு, மகன்கள். ஒருவர் வீரபாண்டியன் மற்றொருவர் சுந்தர பாண்டியன். 5) சுந்தரபாண்டியன் அலாவுதீன் கில்ஜியின் உதவியை நாடினார். 6) மாலிக்கபூர் மதுரையின் மீது படையெடுத்தார்.
A.1,2,3,4,5,6
B. 2,4,6,1,3,5
C.4, 1, 2, 5, 6, 3
D.1,3,5,2,6,4
None 13. பாண்டியர் காலத்துக் கடல்சார் வணிகம் பற்றி புகழ்ந்துள்ளவர்
14. நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்ட பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
15. சுந்தர பாண்டியனின் ஆட்சியின்போது அவருடன் கூட்டு அரசர்களாக ஆட்சி செய்தவர்கள்? 1. விக்கிரம பாண்டியன் 2. வீர பாண்டியன் 3. நெடுஞ்செழியன் சரியானவற்றை தேர்ந்தெடு
16. மம்லுக் என்ற அராபிய வார்த்தையின் பொருள்……………………..
17. கூற்று 1 : துருக்கிய பிரபுக்கள் ரஸ்ஸியாவுக்கு எதிராகக் கலகம் செய்து அவரைக் கொலை செய்தனர். கூற்று 2 : ரஸ்ஸியா ஒரு எத்தியோப்பிய அடிமையைத் தனது தனி உதவியாளராக நியமித்து அவரைப் பெரிதும் நம்பினார்.
18. கூற்று(A): ஏற்கெனவே செங்கிஸ்கானால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டிருந்த குவாரிஜம் ஷா ஜலாலூதீன் என்பார் இல்துமிஷிடம் அடைக்கலமும் பாதுகாப்பும் கேட்டிருந்தார். காரணம்(R): அவருடைய வேண்டுகோளை ஏற்க மறுத்ததன் மூலம் இல்துமிஷ் மங்கோலிய ஆபத்தைத் தவிர்த்தார்.
19. மாலிக்காபூர் தென்பகுதியை நோக்கி படையெடுக்க தொடங்கிய ஆண்டு?
20. தக்காண விசயங்களில் தலையிடக்கோரி பாமினி இளவரசர் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்ள பிரோஷ்ஷா மறுத்துவிட்டார்.
21. தவறான கூற்றினை கண்டறி
22. சமஸ்கிருத மொழியில் கிருஷ்ணதேவராயரால் எழுதப்பட்ட நாடகத்தின் பெயர்……………..
23. கீழ்காணும் கூற்றுகளை ஆய்க. பொருத்தமான விடையை (✓) டிக் இட்டு காட்டவும். I. சுல்தான்களின் சூழ்ச்சிகளால் விஜயநகர அரசு வீழ்ச்சியுற்றது. II. விஜய நகர அரசை தோற்றுவித்தவர் மூன்றாம் முகமது. III. மகமது கவான் கவிஞரும் உரைநடை எழுத்தாளருமாவார். IV. அலாவுதீன்-ஷசன் 20 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
24. விஜயநகர அரசர்கள், பாமினி சுல்தான்கள், ஒடிசாவைச் சேர்ந்த அரசர்களுக்கிடையே மோதல்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது__________. 1. கிருஷ்ணா-துங்கபத்ரா நதிகளுக்கு இடைப்பட்ட செழிப்பான பகுதி 2. கங்கை-யமுனை நதிகளுக்கு இடைப்பட்ட செழிப்பான பகுதி 3. கிருஷ்ணா – கோதாவரி நதிகளுக்கு இடைப்பட்ட கழிமுகப்பகுதி
25. துக்ளக் அரசர்களிடம் பணி செய்து வந்த ஹரிஹரர், புக்கர் ஆகியோரை, அப்பணியை கைவிட்டு நாட்டை முஸ்லிமகளின் ஆதிக்கத்திலிருந்து மீட்குமாறு அறிவுறுத்தியவர்
26. சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்க I. கம்ரான் ஆப்கானியரின் மகனாவார் ஹசன் சூரி பீகாரில் உள்ள சசாரத்தின் ஆட்சியாளர் ஆவர். II. அக்பர் இந்துக்களின் மீதான ஜெசியா மற்றும் பாதயாத்திரை வரியை ரத்து செய்தார். III. ஒளரங்கசீப் தமது மூன்று சகோதரர்களை கொன்றுவிட்டு, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார். IV. இளவரசர் அக்பர், சிவாஜியின் மகனான சாம்பாஜியோடு தக்காணத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டார்.
27. முகலாய மாமன்னர்களில் கடைசி அரசர் ……………..
28. கூற்று 1: ஷெர்ஷா, பீகாரில் சசாரம் பகுதியை ஆண்டு வந்த ஹசன் சூரி என்னும் ஆப்கானியப் பிரபுவின் மகனாவார். கூற்று 2: ஷெர்ஷா, தமது குறுகிய கால ஆட்சியில் வங்காளம் முதல் சிந்துவரை (காஷ்மீர் நீங்கலாக) பரவியிருந்த ஒரு பேரரசை உருவாக்கினார்.
29. __________ ஐ அக்பர் கைப்பற்றியதால் அக்கடல் பகுதியில் வாணிகம் மேற்கொண்டிருந்த அரேபியரையும், ஐரோப்பியரையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்.
30. கூற்று 1: அக்பர் அனைத்து மதங்களைச் சார்ந்தோரையும் சமமாகவும் பெருந்தன்மையோடும் நடத்தினார். கூற்று 2: சூபி துறவியான சலீம் சிஸ்டியும், சீக்கிய குருவான ராம்தாசும் அக்பரின் அளவில்லா மதிப்பையும் மரியாதையையும் பெற்றிருந்தனர்.
31. கூற்று : மகாராஷ்டிராவில் பரவிய பக்தி இயக்கம், மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது. காரணம் : மராத்திய மக்களிடையே ஒற்றுமையைக் குறிப்பாக சமூகச் சமத்துவத்தை மேம்படுத்தியது.
32. கூற்று 1: பாறைகளும், குன்றுகளும் அடங்கிய மராத்திய நாட்டின் நிலப்பகுதி, அந்நிய படையெடுப்பாளர்களிடமிருந்து மராத்தியருக்குப் பாதுகாப்பளித்தது. கூற்று 2: மராத்திய நாட்டின் புவியியல் கூறுகள் கொரில்லாப் போர் முறைக்கு உகந்ததாய் விளங்கியது.
33. தேஷ்முக்குகள் கிராமங்களில் வாழ்ந்தனர், அவர்கள் 20 முதல் 200 வரையிலான கிராமங்களில் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
34. ஒளரங்கசீப் சிவாஜியை அழித்தொழிக்கவும், பீஜப்பூரை இணைக்கவும் _________ என்ற ராஜபுத்திரத் தளபதியின் தலைமையின் கீழ் முகலாயப் படையை அனுப்பிவைத்தார்.
35. சரியான கூற்றைத் தேர்ந்தெடு. (சிவாஜியின் மூன்று வட்ட அரசியல் முறை) 1. முதல் வட்டத்தில் மக்களின் மீது அக்கறை கொண்ட அவர் எந்த வகையிலும் மக்கள் துன்புறுத்தப்படுவதை அனுமதிக்கவில்லை. 2. இரண்டாவது வட்டத்தில் சிவாஜி மேலாதிக்கம் செலுத்தினாலும் நேரடி நிர்வாகத்தை மேற்கொள்ளவில்லை. கொள்ளையடிக்கப்படுவதிலிருந்தும், சூறையாடப்படுவதிலிருந்தும் மக்களைக் காப்பாற்றினார். 3. மூன்றாவது வட்டத்தில் கொள்ளயடிப்பது மட்டுமே சிவாஜியின் நோக்கமாக இருந்தது,
36. தமிழகத்தில் 7 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட பக்தி இயக்கம் கீழ்க்கண்டவற்றுள் எதனை உள்ளடக்கியது?
37. சரியான இணையைத் / இணைகளைத் தேர்ந்தெடுக்கவும்: ஆதி சங்கரர் – சங்கராச்சாரியார், இராமானுஜர் – அத்வைதம், திவ்விய பிரபந்தம் – நாயன்மார்கள், கபீர் – சீக்கியர், கிர்பான் – குறுவாள்
38. கீழ்க்காண்பவருள் யார் தன்னை தாய் யசோதாவாக பாவித்துக் கொண்டு கிருஷ்ணனில் மேல் பாடல்களைப் புனைந்துள்ளார்?
39. “இந்துக்களும் இஸ்லாமியரும் கடவுளை வெவ்வேறு பெயர்களில் அழைத்தாலும் இருப்பது ஒரேயொரு கடவுள் மட்டுமே” என்று கூறியவர் யார்?
40. புலவர்களாகவும் ஞானிகளாகவும் இருந்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் சாதியை அடிப்படையாகக் கொண்ட சமூகநிலைகளைச் சாடியதோடு அல்லாமல் ஆண், பெண் சமத்துவத்தை முன்னிறுத்தியதற்கான காரணம்?
41. சரியான வாக்கியங்களைக் கண்டுபிடி 1. மிகப்பெரும் கருங்கல் பாறையின் மீது புடைப்புச் சிற்பமாக அர்ச்சுனன் தவமிருக்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. 2. பல்லவர் காலகட்டடக்கலைப்பாணியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. 3. பின்ளையார்பட்டியிலுள்ள குகைக்கோவில் பிற்கால பாண்டியரின் பங்களிப்பாகும். 4. மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்களான சேதுபதிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளனர்.
42. கூற்று : கி.பி. 1009ல் தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டி முடிக்கப்பட்டது. காரணம் : இது ராஜேந்திர சோழன் காலத்து செல்வப் பெருக்கச் சாதனைகளுக்குப் பொருத்தமான நினைவுச் சின்னமாகும்.
43. பஞ்ச பாண்டவ இரதங்கள் என்றழைக்கப்படும் திரௌபதி இரதம், தர்மராஜா இரதம், பீமரதம், அர்ச்சுன இரதம், நகுல சகாதேவ இரதம் ஆகியன எதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன?
44. கடற்கரைக் கோவில் வளாகம் உட்பட மாமல்லபுரத்திலுள்ள நினைவுச் சின்னங்களும் கோவில்களும் மொத்தமாக உலகப் பாரம்பரிய இடமென யுனெஸ்கோவால் (UNESCO) எந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது?
45. உலகிலேயே மிகவும் நீளமான வில் பிரகாரங்கள் என்று சொல்லப்படுபவை எங்கு அமைந்துள்ளது?
46. சரியான கூற்றினைக் / கூற்றுகளைக் காண்க i) பெரும்பாலான பல்லவ அரசர்கள் சமணர்களாவர். ii) விகாரா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு வாழ்விடம்’ அல்லது ‘இல்லம்’ என்று பொருள். iii) அழகுமிக்க சுவரோவியங்கள் விஜயநகர ஆட்சிக்காலத்தில் வரையப்படவில்லை. iv) ஆசீவகர்கள் வினைப்பயன். மறுபிறவி, முன் தீர்மானம் ஆகிய கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
47. கூற்று 1: திகம்பரர் சுவேதாம்பரர் ஆகிய இரு பிரிவினருமே ஆகம சூத்திரங்களைத் தங்களின் அடிப்படை நூல்களாக ஏற்றுக்கொண்டனர். கூற்று 2: ஆகம சூத்திரங்களின் உள்ளடக்கம், கொடுக்கப்படும் விளக்கம் ஆகியவற்றிலும் இரு பிரிவினரும் ஒத்து காணப்பட்டனர்.
48. கழுகுமலை குடைவரைக் கோவில் யாரால் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது?
49. தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
50. சித்தன்னவாசலில் உள்ள கற்படுக்கைகளில் அளவில் பெரிதாக இருக்கும் ஒன்றில்__________ நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் – பிராமிக் கல்வெட்டு உள்ளது.