1. ____________ பாகுபாட்டை தடை செய்கிறது.
2. "சமத்துவம் என்பது சமமாக நடத்துவது மட்டுமல்ல வெகுமதி அளிப்பதிலும் சமத்துவம் இருப்பதாகும். முதலாவதாக சமூக சிறப்புரிமை இல்லாததும் இரண்டாவதாக போதுமான வாய்ப்புகள் அனைவருக்கும் வழங்கப்படுவதும் ஆகும்." என்று கூறியவர்
3. கீழ்க்கண்டவைகளில் எது அரசியல் சமத்துவம் ஆகும்?
4. பாலின சமத்துவம் என்பது பெண்கள், ஆண்கள் சிறுவர், சிறுமியர் ஆகியோர் சமமான உரிமைகள் வாய்ப்புகள் பெற வேண்டும் என்று கூறுவதோடு அவர்கள் ஒன்று போல நடத்தப்பட வேண்டும் என __________ கூறுகிறது.
5. மக்களாட்சிக் கோட்பாடுகளான சுதந்திரம், சமத்துவம் ஆகியவை ___________ இன் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் போது மட்டுமே பொருளுடயவையாக இருக்கும்.
6.குடிமக்கள் அனைவரும் அரசியல் வாழ்வில் தீவிரமாக பங்கெடுப்பதற்கு சமமான வாய்ப்பினை பெற்றிருத்தல் வேண்டும் என்ற உரிமை ____________ என்பதன் அடிப்படையில் மக்களுக்கு கிடைக்கின்றது.
7. ____________ ஆம் ஆண்டின் தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி ஒதுக்கப்பட்ட சின்னங்கள் அல்லது ஒதுக்கப்படாத சின்னங்கள் என இருவகை உண்டு.
8.எது / எவை சரியான கூற்று / கூற்றுகள்.
9. கூற்று : சில கட்சிகள் இணைந்து கூட்டணி அரசாங்கத்தை அமைக்கின்றன. காரணம் : பலகட்சி அமைப்பில் சில நேரங்களில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை ஒரு கட்சி பெறுவதில்லை.
10. கூற்று 1: அரசியல் கட்சிகள் என்பவை தன்னார்வத்தோடு ஏற்படுத்தப்பட்ட தனி மனிதர்களின் அமைப்பு ஆகும். கூற்று 2: அரசியல் கட்சிகள் பரந்த கருத்தியல் அடையாளங்களோடு சில கொள்கைகளை ஏற்றுக்கொண்டு சமூகத்திற்கான திட்டங்களையும் நிரல்களையும் வடிவமைக்கின்றன.
11. அரசியல் கட்சிகளின் இயல்புகளில் தவறானது எது? 1. பொதுவான குறிக்கோள் மற்றும் பகிர்ந்தளிக்கப்பட்ட மதிப்பீடுகளை கொண்ட மக்கள் குழுக்களாக இருக்கின்றன. 2. தனக்கென கொள்கை மற்றும் திட்டங்களை கொண்டிருக்கின்றன. 3. அரசியல் அமைப்பின் வழியாக ஆட்சியை கைப்பற்ற முயல்கின்றன. 4. தேசிய நலன்களை வலியுறுத்த முயற்சி செய்கின்றன.
12. கூற்று 1: இந்திய தேர்தல் ஆணையம் அரசியலமைப்பு சாராத அமைப்பு ஆகும். கூற்று 2: தேர்தல் ஆணையத்தின் தலைமை இடம் புதுதில்லியில் அமைந்துள்ளது.
13. கூற்று : உற்பத்தியில் உழைப்பு என்பது ஒரு செயல்படு காரணியாகும். காரணம் : நிலமோ, மூலதனமோ உழைப்பு இல்லாமல் அதிக உற்பத்தியை அளிக்க இயலும்.
14. கீழ்க்கண்டவற்றுள் இரண்டாம் நிலை உற்பத்தியில் அடங்கும் தொழில்கள் எவை? 1. மாவிலிருந்து ரொட்டி தயாரித்தல் 2. இரும்புத் தாதுவிலிருந்து பயன்படக்கூடிய பொருள்களைத் தயாரித்தல் 3. பொறியியல் துறை சார்ந்த பணிகள் 4. போக்குவரத்து
15. கீழ்க்கண்டவற்றுள் சேவைத் துறை உற்பத்தியில் அடங்கும் நிறுவனங்கள் எவை? 1. வாணிகம் 2. காப்பீடு 3. போக்குவரத்து 4. சட்டம் 5. உடல்நலப் பாதுகாப்பு
16. கீழ்க்கண்டவற்றுள் மூலப்பொருள்களிலிருந்து பெறப்பட்ட உற்பத்திக் காரணிகள் எவை? 1. நிலம் 2. உழைப்பு 3. முதலீடு 4. அமைப்பு
17. கூற்று 1: நிலம் என்ற உற்பத்திக் காரணியைப் பெறுவதற்கு மனிதன் எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. கூற்று 2: நிலம் மனிதனின் பரிணாம வளர்ச்சி தொடங்குவதற்கு முன்பே தோன்றியதாகும்.
18. தவறான இணையைக் கண்டுபிடி.
19. கூற்று : இந்தியா கூட்டாட்சி முறை அரசாங்கத்தை கொண்டது காரணம் : இந்திய அரசியலமைப்பின் அதிகாரம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
20. முதலமைச்சராக விரும்பினால் i. இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும் ii. 30 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் iii. சட்டமன்ற உறுப்பினராக அல்லது சட்டமேலவை உறுப்பினராக இருந்தால் 30 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும்.
21. கூற்று : மாநில நிர்வாகத்துறையின் உண்மையான தலைவர் முதலமைச்சர் ஆவார் காரணம் : பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவர் முதலமைச்சராக அறிவிக்கப்படுகிறார்.
22. உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எந்த வயது வரை பதவியில் இருப்பார்?
23. மாநில அரசாங்கத்தின் அனைத்துச் நிருவாகத்துறை நடவடிக்கைகளும் யாருடைய பெயரால் நடைபெறுகின்றன?
24. பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவரை அழைத்து, மாநில அரசாங்கத்தை அமைக்குமாறு அழைப்பு விடுப்பவர் யார்?
25. கூற்று : அச்சு ஊடகம் மக்களின் பல்கலைக்கழகம் என கருதப்படுகிறது. காரணம் : பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குவதிலும், கல்வியறிவு ஊட்டுவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது மற்றும் பொதுமக்களின் பாதுகாவலனாகவும் செயல்படுகிறது.
26. கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும் A) ஊடகம் என்பது பொதுவாக ஒருவருக்கொருவர் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் சாதனம் ஆகும் B) ஊடகம் மிகவும் சக்திவாய்ந்த நிறுவனமாகும் C) ஊடகம் மக்களிடம் பொது கருத்தை உருவாக்குவதில் முக்கிய பங்குவகிக்கிறது D) ஊடகத்திற்கு எந்த பொறுப்பும் கிடையாது
27. கூற்று : நெறிமுறை என்பது நம் வாழ்க்கையை வாழ தீர்மானிக்கும் மதிப்பீடுகளின் தொகுப்பாகும். காரணம் : இவை முறையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிக அவசியமாகும்.
28. கீழ்க்கண்டவற்றுள் ஊடகத்தின் செயல்பாடுகள் எவை?
29. அச்சு இயந்திரம் ____________ ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
30. ஜனநாயகத்தின் முதுகெலும்பு எது?
31. பொருத்தமான பதிலைத் தேர்வு செய்க கூற்று (கூ) : உலகின் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் பெண்களுக்கு அதிகாரமளித்தல் இலக்கை அடைய உண்மையிலேயே செயல்படுகின்றன. காரணம் (கா) : உலகில் பெண்களை மேம்பாடு அடையச் செய்யாமல் உலக அமைதியையும், செழிப்பையும் நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.
32. பெண்களின் கல்வியறிவு விகிதம் குறைய காரணமாக அமையாதது எது?
33. இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புத்துறை அமைச்சர் …………………….
34. கூற்று 1: பெண்கள் சமத்துவத்திற்கான போராட்டமானது எந்த ஒரு பெண்ணியவாதிக்கோ அல்லது ஏதேனும் ஒரு அமைப்பிற்கோ சொந்தமானது அல்ல. கூற்று 2: பெண்கள் சமத்துவத்திற்கான போராட்டமானது மனித உரிமைகள் பற்றிய அக்கறை கொண்டவர்களின் கூட்டு முயற்சியாகும்
35. கீழ்க்கண்டவற்றுள் மேம்பாட்டிற்கான முக்கிய காரணிகளாக கருதப்படுபவை எவை? 1. கல்வி 2. பாலினப் பாகுபாடு பார்க்காதிருத்தல் 3. சாதி, சமய பாகுபாடுகளின்மை 4. இன பாகுபாடு
36. கூற்று 1: கல்விபெறும் பெண் குழந்தை, தாயான பின்பு பிள்ளைகளுக்கும் குடும்பத்தாருக்கும் அரவணைப்பை வழங்குவதன் மூலம் சமுதாயத்திற்குச் சிறப்பு சேர்க்கிறார். கூற்று 2: பெண் குழந்தைகளின் அவசியத் தேவையான கல்வி, அறிவினை பெறவும் அவர்களின் திறனை மேம்படுத்தவும் அதனால் சமூகத்தில் அவர்களின் தகுதி நிலை உயரவும் அவர்களின் சுய முன்னேற்றத்திற்கும் உறுதுணையாய் இருக்கின்றது.
37. பொருத்தமான பதிலைத் தேர்வு செய்க கூற்று (கூ) : இப்போது அனைத்து மனிதாபிமான நடவடிக்கைகள் அனைத்திலும் பெண்கள் ஒருங்கிணைகிறார்கள். காரணம் (கா) : சமூகத்தின் அனைத்து மோதல்களிலும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள்.
38. கூற்று (கூ) : பெண்களுக்கு எதிரான வன்முறை சாதி, மதம், வர்க்கம், வயது மற்றும் கல்வியை கடந்து நடைபெறுகிறது. காரணம் (கா) : வீட்டு வன்முறைகள், கருக்கலைப்பு, பெண் சிசுக் கொலை, வரதட்சணை கொலை, திருமணம் மூலம் கொடுமை, சிறுவருக்கு நிகழும் கொடுமைகள் என வெளிப்படுகிறது
39. "நமது எதிர்காலம் பெண்களை உதாசீனப்படுத்துவோர் கையிலில்லை. அது நமது மகன்களைப்போல் பள்ளிக்குக் கல்வி கற்கச் செல்லும் நமது மகள்களின் கனவுகளில் உள்ளது. அவர்களே, இவ்வுலகத்தில் தாங்கி நிற்கும் வல்லமைக் கொண்டவர்" என கூறியவர்
40. கூற்று 1: ஆள் கடத்தலில் அதிகம் பாதிக்கப்படுவது படிப்பறிவு இல்லாத பெண்கள் மற்றும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்களேயாகும். கூற்று 2: இளம்பெண்களுக்கு அடிப்படைத் திறன்கள் மற்றும் அவர்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதினால் ஆள்கடத்தல்கள் கணிசமாக குறைக்கப்படும் என்று ஆள்கடத்தல்கள் பற்றிய ஐக்கிய நாடுகளின் இடை முகமைத் திட்டம் விளக்குகின்றது.
41. கூற்று : ஒழுங்குமுறை அடிப்படை சந்தையில் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் இல்லை. காரணம் : ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தையானது பொருத்தமான அரசாங்க அதிகாரிகளின் கீழ் நடைபெறுகின்றன.
42. கூற்று 1: பழங்கால முறைப்படி ஒரு சந்தை என்பது வாங்குபவர்களும் விற்பவர்களும் தங்கள் பொருள்கள் மற்றும் சேவைகளை பரிமாறிக்கொள்ளும் இடமாக அமைந்தது. கூற்று 2: பொருளாதாரத்தில் சந்தை என்பது இயற்கை இடம் சார்ந்தது எனக் கூறப்படவில்லை.
43. கூற்று 1: பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுகின்ற இரு தரப்பினரும் விற்பனையாளர் மற்றும் வாங்குபவர் என்று அழைக்கப்படுகிறார்கள். கூற்று 2: சந்தைப் போட்டித் தன்மையுடன் இருக்க ஒன்றுக்கும் மேற்பட்ட வாங்குபவர் மற்றும் விற்பவர் என இருக்க வேண்டும்.
44. __________ என்பது நிலம், மூலதனம் உழைப்பு போன்ற உற்பத்திக் காரணிகளை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்குமான சந்தை குறிப்பதாகும்.
44. கூற்று: உள்ளூர் சந்தையில் தினசரி பயன்பாட்டின் விரைவில் வீணாகிவிடும் / அழுகும் பொருள்கள் விற்கப்படுகின்றன. காரணம்: அத்தகைய பொருள்களின் போக்குவத்துச் செலவு மிக உயர்ந்ததாக இருக்கும்
45. கூற்று 1: தேசிய சந்தையில் பொருள்களின் தேவை ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு மட்டும் தேவையாக இருக்கலாம். கூற்று 2: தேசிய எல்லைகளுக்கு வெளியே இத்தகைய பொருள்களின் வர்த்தகத்தை அரசாங்கம் அனுமதிப்பதில்லை.
46. வாகனத்திற்கு வெளியே உடலின் பகுதிகளை நீட்டுவது, ஓட்டுநர்களுடன் பேசுவது, படிக்கட்டுகளில் பயணம் செய்வது, ஓடும் பேருந்தில் ஏறுவது போன்றவை யாருடைய தவறுகள்?
47. சாலை வழி மற்றும் போக்குவரத்து துறையால் மொத்தம் எத்தனை எச்சரிக்கை குறியீடுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன?
48. இந்தியாவில் சாலைப் பாதுகாப்பு வாரம் முதன்முதலாகக் கொண்டாடப்பட்ட வருடம்
49. கூற்று (A): போக்குவரத்து விளக்குகள் என்பது ஒரு சமிக்ஞை கருவி. காரணம்(R): இது சாலைகள் சந்திக்கும் இடங்களிலும், பாதசாரிகள் சாலையை கடக்கும் இடங்களிலும் அமைக்கப்பட்டிருக்கும்.
50. கூற்று : குழந்தைகள் காணொலி மற்றும் கணினியில் வாகனத்தை வேகமாக இயக்குவது போன்ற படக்காட்சிகள், விளையாட்டுகளை அரசு தடை செய்யவேண்டும். காரணம் : அது பிற்காலத்தில் வாகனங்களை வேகமாக இயக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்திவிடும்.