UG TRB – TAMIL ELIGIBILITY MODEL TEST -2 KEY ANSWER

0
494

UGTRB தேர்வர்கள் பயன்பெறும் விதத்தில், நமது தமிழ் மடல் இணையதளம் UGTRB தமிழ் தகுதி தேர்வுக்கான மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதுவரை ஐந்து மாதிரி தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பதிவில் இரண்டாவது தமிழ் மாதிரி தேர்வுக்கான லிங்க் மற்றும் அதன் விடை pdf வடிவில் பெற்றுக்கொள்ள தேவையான லிங் வழங்கப்பட்டுள்ளது. கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வில் பங்கு பெற்று உங்களை நீங்களே பரிசோதித்துக்கொள்ளலாம். மேலும் இத்தேர்வின் விடைகளை வினாவிடை தொகுப்பாக (Key Answer) பெற்றுக்கொள்ள கீழே லிங் கொடுக்கப்பட்டுள்ளாது.

UGTRB தமிழ் தகுதி தேர்வுக்கு தயாராகும் முறை: UGTRB தமிழ் தகுதி தேர்வில் 30 வினாக்கள் வழங்கப்பட்டிருக்கும் இதில் முதல் 20 வினாக்களுக்கு இரண்டு மதிப்பெண்களும் அடுத்த 10 வினாக்களுக்கு ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும். நீங்கள் 50 மதிப்பெண்களுக்கு 20 மதிப்பெண்கள் நிச்சயமாக எடுக்க வேண்டும், அப்படி எடுத்தால் மட்டுமே உங்களுக்கு முதன்மை தேர்வுக்கான விடைத்தாள் திருத்தப்படும்.

இந்த தேர்வுக்கான பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப்பகுதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் எட்டாம் வகுப்பு ஒன்பதாம் வகுப்பு 11ஆம் வகுப்பு பாடப் பகுதிகளையும் படித்தல் நலம். இலக்கணப் பகுதிகளையும் மொழி பயிற்சிக்கான பகுதிகளையும் அதிக கவனம் எடுத்து படிப்பது நலம் பயக்கும்.