இந்திய அரசியல் அமைப்பு பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை

0
382

இந்திய அரசியல் அமைப்பு பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை!

நமது இந்திய அரசியல் அமைப்பை உருவாக்குவதில் அன்றைய கால கட்டத்தில் பல்வேறு இடையூறுகள் இருந்தன. அவற்றை எல்லாம் கடந்து தான் இது இயற்றப்பட்டது. இதன் வரலாறையும், இதன் சிறப்பம்சங்களையும் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்

பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு தனக்கான அரசியல் அமைப்பை வடிவமைக்க முற்பட்டது. அதன் விளைவாக ஜனவரி 26, 1950 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு என்று தனியான அரசியல் அமைப்பு உருவானது. இதை ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறும் வகையில் குடியரசு தினத்தை கொண்டாடி வருகிறோம். நமது இந்திய அரசியல் அமைப்பை உருவாக்குவதில் அன்றைய கால கட்டத்தில் பல்வேறு இடையூறுகள் இருந்தன. அவற்றை எல்லாம் கடந்து தான் இது இயற்றப்பட்டது.

1935 ஆம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சட்டத்திற்குப் பதிலாக, ஐக்கிய ராஜ்ஜியத்தின் நாடாளுமன்றத்தைத் தழுவி, இந்திய அரசியலமைப்ப்பானது அப்போது நிறுவப்பட்டது. அதன் பிறகு 1947-இல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றதும், இந்திய அரசியலமைப்பை உருவாக்க இந்திய அரசியலமைப்பு குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. இது நவம்பர் 26, 1949 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்திய அரசியல் அமைப்பை உருவாக்கும் வரைவுக் குழுவிற்கு டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் தலைமை தாங்கினார். இவர் ஒரு சட்ட நிபுணர், பொருளாதார வல்லுநர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்த பெரும் பாடுபட்டவர். கே.எம். முன்ஷி, ஆலடி கிருஷ்ணசுவாமி ஐயர், முகமது சாதுல்லா, என் மாதவ ராவ் மற்றும் கோபால சுவாமி அய்யங்கார் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்ற மற்ற ஆறு உறுப்பினர்கள் ஆவர். இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத், இந்த வரைவுக் குழுவின் தலைவராக இருந்தார்.

இந்திய அரசியல் அமைப்பானது உலகிலேயே மிக நீளமான அரசியல் அமைப்பாகும். மற்றும் செயலில் உள்ள இரண்டாவது பெரிய அரசியலமைப்பாகும். இது 25 பகுதிகளாகவும், 25 பகுதிகளில் 470 கட்டுரைகளையும், 5 பின்னிணைப்புகளில் 12 அட்டவணைகளையும் கொண்டுள்ளது. இது முதலில் 22 பகுதிகளிலும் 8 அட்டவணைகளிலும் 395 கட்டுரைகளைக் கொண்டிருந்தது. அரசியலமைப்பில் திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் மூலம் கூடுதல் அமைப்புகள் சேர்க்கப்படும்.

இந்திய அரசியலமைப்பானது அரசியல் அதிகார அமைப்பில், மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை வகுத்துள்ளது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் மொத்த அதிகாரமும் குவிவதைத் தடுக்க, நீதித்துறை, செயலாக்கத்துறை மற்றும் சட்டமன்றம் ஆகியவற்றை கொண்டுள்ளது. அரசாங்கத்தின் மற்ற கிளைகளுக்கு சமநிலைகளை இது வழங்குகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையில், இந்தியாவை ‘இறையாண்மை கொண்ட சோசலிச மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சமத்துவத்திற்கான உரிமை, சுதந்திரம், சுரண்டலுக்கு எதிரான உரிமை, மத சுதந்திரம், கலாச்சார மற்றும் கல்வி உரிமைகள், அரசியலமைப்பு தீர்வுகளுக்கான உரிமை ஆகிய ஆறு அடிப்படை உரிமைகள் இந்திய அரசியல் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்புச் சட்டத்தின் வழியில் இந்திய சுதந்திரம்

1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி, சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்படுகிறார். இந்த வழக்கில், அந்த ஆண்டு ஜூன் 11-ம் தேதி பேரறிவாளன் கைது செய்யப்படுகிறார். முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. பின்னர், மேல்முறையீட்டு தூக்குதண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுகிறது. 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்துவரும் பேரறிவாளன் சார்பில், விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுகிறது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை 2022-ம் ஆண்டு மே 22-ம் தேதி விடுதலை செய்தது. இந்த தீர்ப்பு வெளியானபோது, அரசியலமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவு குறித்து பரவலாக பேசப்பட்டது. இதேபோல், விஜய் நடித்து வெளிவந்த சர்க்கார் திரைப்படத்திற்கு பின்னர், 49 “ஓ” என்பது விவாதப்பொருளானது. இப்படி அவ்வப்போது சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் பல்வேறு ஷரத்துக்களை சமத்தாக கொண்டதுதான் நமது அரசியலமைப்புச் சட்டம்.

300 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் வெளியறியபின், சுதந்திர இந்தியாவுக்கான சட்டங்கள், ஆட்சியாளர்களின் அதிகாரங்கள் என்ன, குடிமக்களுக்கான கடமையும் அதிகாரங்களும் என்ன என்பது வரையறுக்கப்பட வேண்டிய தேவை எழுந்தது. நள்ளிரவில் கிடைத்த அந்த சுதந்திரம்தான், இந்தியாவுக்கான தனிவொரு அரசியலமைப்புச் சட்ட உருவாக்கத்திற்கு வித்திட்டது. இதனைத்தொடர்ந்து, 1947 ஆகஸ்ட் 29-ல் இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் அமைக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பை உருவாக்க 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாட்கள் தேவைப்பட்டது. இந்திய அரசியல் அமைப்பு குழு உறுப்பினர்கள் 284 பேர் ஒப்புதலுடன் 1949 நவம்பர் 26-ல் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

உலகின் மிக நீண்ட எழுத்துபூர்வ வடிவிலான அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்டது இந்தியா. அரசியலமைப்புச் சட்டத்தின் ஆன்மாவாக முகப்புரை பார்க்கப்படுகிறது. நாடு சுதந்திரம் பெற்றபின், அடைய விரும்பிய அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்கள் யாவை என்பது பற்றிய குறிப்பே அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை.

இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை ஒரு இறையாண்மை மிக்க, சமத்துவம் சார்ந்த, மதச்சார்பற்ற மக்களாட்சி, குடியரசு அமைக்கவும், அதன் குடிமக்கள் அனைவருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் நீதி கிடைக்கவும், சிந்தனையில் சிந்தனையை வெளிபடுத்துவதில், நம்பிக்கையில் பற்றுறுதியில் மற்றும் வழிபாட்டில் சுதந்திரமும், தகுதி நிலையில் மற்றும் வாய்ப்பில் சமத்துவம், உறுதியாக அனைவருக்கும் கிடைக்கச் செய்யவும், தனி ஒருவரின் மாண்புக்கும், சகோதரத்துவத்தை அனைவரிடத்தில் வளர்க்கவும், நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் உறுதியளிக்கும் என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரை அதன் நோக்கத்தை தெளிவாக விளக்குகிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து, அயர்லாந்து, கனடா, தென் ஆப்பிரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, ஜப்பான் உள்பட பல்வேறு நாடுகளின் அரசியல் அமைப்பு மூலங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் நம் அரசியலமைப்பு சட்டம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை அரசியலமைப்பு சட்டம் உறுதி செய்கிறது.

இந்தியா பல்வேறு மதம், மொழி, இனங்களைச் சேர்ந்த மக்களைக் கொண்ட நாடு. இவர்கள் அனைவரையும உள்ளடக்கிய, உரிமைகளை வழங்கக்கூடியதாக அரசியலமைப்புச் சட்டம் இருந்து வருகிறது. குறிப்பாக, இமயம் முதல் குமரி வரை பரவிக்கிடக்கும் ஆட்சியாளர்களை தேர்வு செய்யும் உரிமை நாட்டில் 18 வயது நிரம்பியவர்களுக்கு வழங்குவதை அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்கிறது. அதேபோல், இந்தியாவில் நீங்கள் யாராக இருந்தாலும், ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற நடைமுறை, சட்டத்தின் முன் அனைவரும் சமம்தான் என்பதை உணர மிக சிறந்த உதாரணம்.

எளியவர்களுக்கான நீதியை உறுதி செய்வதில், இந்திய அரசியலமைப்புச் சட்டமும், நீதிமன்றங்களும் தங்களுக்கான பணிகளைச் செவ்வனே செய்து வருகின்றன. தமிழகத்தில் அரசு, உள்ளாட்சி மற்றும் நிதி உதவிபெறும் பள்ளிகளிலும் அமைக்கப்பட்ட சத்துணவு மையங்களிலும் சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர் உட்பட 3 பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. இதற்கான 1997-ல் அரசாணை வெளியிடப்பட்டது. சத்துணவு மையங்களுக்காக சுமார் 1 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்பட்டாலும், அதில் பட்டியிலனப் பெண்களுக்காக எந்தவிதமான இடஒதுக்கீடும் வழங்கப்படவில்லை. இதனை நியாயப்படுத்த தமிழக அரசு 2003-ம் ஆண்டு மத்திய அரசு அனுப்பியிருந்த சுற்றறிக்கையை பயன்படுத்திக் கொண்டது.

இதனை எதிர்த்து திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த போத்துமல்லி என்ற பெண் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகத்திலுள்ள அனைத்து சத்துணவு மையங்களில் உள்ள பணியிடங்களை நிரப்ப கட்டாயமாக இடஒதுக்கீடு சுழற்சி முறையை பின்பற்ற வேண்டுமன உத்தரவிட்டது. இத்தீர்ப்பை பயன்படுத்தி அப்போதைய முதல்வர் கருணாநிதி, 6.7.2010 அன்று அரசாணை 142-ஐ சமூக நலத்துறை மூலம் வெளியிட்டார். இதன்மூலம் 25 ஆயிரம் தலித் பெண்களுக்கு சத்துணவு மையங்களில் வேலை கிடைத்தது.

இதுபோல் இந்தியா முழுவதும் ஏராளமான நிகழ்வுகள் நடந்துள்ளன.

சமூக மாற்றங்களை நிகழ்த்தி, சமூக நீதி நிலைக்க, இந்திய அரசியலமைப்புச் சட்டம் பேருதவியாக இருந்து வருகிறது. இதனால்தான், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் அடிப்படையிலான அரசியலமைப்புச் சட்டத்தின் வழியில் இந்திய சுதந்திரம் கொண்டாடப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் என்பது ஒரு எழுதப்பட்ட சட்டம் ஆகும். அதாவது எவ்விதமான சட்டங்கள் கொண்டு வரலாம் என்று ஒரு குழு அமைத்து எழுதப்பட்டதாகும். அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளது. இந்தியாவில் மொத்தம் 12 அட்டவணைகள் மற்றும் 395 கட்டுரைகள் 25 பாகங்களை கொண்டுள்ளது. நாம் இந்த பதிவில் இந்திய அரசியலமைப்பில் உள்ள அட்டவணைகள் மற்றும் அவற்றின் சட்டங்கள் என்ன?

1950-ம் ஆண்டு ஜனவரி 26 வரை அட்டவணைகள் 8, பாகங்கள் 22 மற்றும் 395 கட்டுரைகள் தான் வழக்கில் இருந்து வந்தன. பின் வந்த சட்ட திருத்தம் மூலமாக 4 சட்டங்கள் இயற்றப்பட்டு 12 அட்டவணைகள் 25 பாகங்கள் உருவானது.

அட்டவணை 1

யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களின் எல்லையை பற்றி கூறுகிறது. இந்தியாவில் மொத்தம் 8 யூனியன் பிரதேசங்களும், 28 மாநிலங்களும் உள்ளது

அட்டவணை 2

அரசியலில் உள்ள குடியரசு தலைவர், ஆளுநர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், துணை சபாநாயகர், சபாநாயகர் போன்றவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் மற்றும் சலுகைகள் பற்றி விவரிக்கிறது.

அட்டவணை 3

பதவிப்பிரமாணம் அதாவது பிரதமர், மக்களவை தலைவர், மாநிலங்களவை தலைவர் போன்றவர்களை யார் நியமனம் செய்ய வேண்டும் என்பதை விவரிக்கிறது.

அட்டவணை 4

ராஜ்ய சபா ஒதுக்கீடு.
Rajya Sabha seats மொத்தம் 250.
ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கும் எத்தனை Rajya Sabha MP-க்கள் இருக்க வேண்டும் என்பதை விவரிக்கிறது.
உத்திரபிரதேசத்தில் 31 MP-களும் தமிழ்நாட்டில் 18 MP-களும் உள்ளன.

அட்டவணை 5

பழங்குடியினர் வசிக்க வேண்டிய இடம் மற்றும் அனைத்து விதிகளையும் ஜனாதிபதி அறிவிக்க வேண்டும் என்ற விதிகளை விவரிக்கிறது.

அட்டவணை 6:

அசாம், திரிபுரா, மேகாலயா, மிசோரம் போன்ற மாநிலங்களில் பழங்குடியினர் பகுதிகளில் நிர்வாகம் பற்றி விவரிக்கிறது.

அட்டவணை 7

இந்த அட்டவணையில் மத்திய பட்டியல், மாநில பட்டியல், மற்றும் பொதுப்பட்டியல் என 3 பட்டியல்கள் உள்ளன
மத்திய பட்டியல் மொத்தம் 100 துறைகள் உள்ளன. இந்த பட்டியலில் மத்திய அரசு சட்டம் இயற்றும்.
மாநில பட்டியல் இதில் 61 துறைகள் உள்ளன. இந்த பட்டியலில் மாநில அரசு சட்டம் இயற்றும்.
பொதுப்பட்டியல் இதில் 52 துறைகள் உள்ளன. இந்த பட்டியலில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு இரண்டு அரசுகளும் சட்டம் இயற்றும்.

அட்டவணை 8

இந்த அட்டவணை மொழிகள் பற்றி கூறுகிறது. இந்தியாவில் பல மொழிகள் பேசப்பட்டாலும் அதில் இந்திய அரசால் 22 மொழிகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

அட்டவணை 9

இந்த அட்டவணையில் ஜமீன்தார் மற்றும் நில சட்டம் அதாவது நிலம் சம்மந்தமான பல்வேறு வகை சட்டங்கள் கொண்டு வரப்பட்டது.

அட்டவணை 10

இந்த அட்டவணையில் கட்சித்தாவல் தடை சட்டம் கொண்டு வரப்பட்டது.
ஒரு கட்சியில் இருந்து கொண்டு மற்ற கட்சிக்கு சென்றால் அவைத்தலைவர் அந்த பதவியை நீக்கம் செய்யும் உரிமை கொண்டு வரப்பட்டது. இது 1952-ம் ஆண்டு 52-வது சட்ட சீர்திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது.

அட்டவணை 11

இந்த அட்டவணையில் பஞ்சாயத்துகளின் அதிகாரம், நிர்வாகம் மற்றும் பொறுப்புகளை உள்ளடக்கியது.
1992 ஆம் ஆண்டு 73 ஆவது சட்ட திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது.

அட்டவணை 12

நகராட்சிகளின் அதிகாரம் மற்றும் பொறுப்புகளை உள்ளடக்கியது.
1992-ஆம் ஆண்டு 24-ஆவது சட்ட திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது.