1. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை (✓) செய்க. 1. கவர்னர் நினோ-டி-குன்கா போர்ச்சுக்கீசிய தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றினார். 2. போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவிலிருந்து கடைசியாக வெளியேறினர். 3. டச்சுக்காரர்கள், சூரத்தில் தங்கள் முதல் வணிக மையத்தை நிறுவினர். 4. இங்கிலாந்தின் மன்னர் முதலாம் ஜேம்ஸ், ஜஹாங்கீர் அவைக்கு சர் தாமஸ் ரோவை அனுப்பினார்.
2. கூற்று 1: வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடம் ஆவணக்காப்பகம் என்று அழைக்கப்படுகிறது. கூற்று 2: இந்திய தேசிய ஆவணக்காப்பகம் ஆசியாவில் உள்ள ஆவணக் காப்பகங்களிலேயே மிகவும் பெரியதாகும்.
3. கூற்று 1: 1498 ஆம் ஆண்டு போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த மாலுமி வாஸ்கோடகாமா ஐரோப்பாவிலிருந்து இந்தியா வருவதற்கான புதிய கடல் வழியை கண்டுபிடித்தார். கூற்று 2: வங்காளத்தின் வெற்றிக்குப் பின் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் வலுவடைந்தது.
4. __________ ஆண்டு ஆங்கிலேயரின் வில்லியம்கோட்டை வங்காள நவாப் சிராஜ்-உத்-தெளலாவிடம் சரணடைந்தது.
5. இராபர்ட் கிளைவ் ___________ ஆண்டு வங்காளம், பிகார் மற்றும் ஒரிசா ஆகிய பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமையை பெற்றார்.
6. காரன் வாலிஸ் பிரபு ஓராண்டு நிலவருவாய் திட்டத்தை பத்தாண்டு நிலவருவாய் திட்டமாக மாற்றிய ஆண்டு………….
7. கிழக்கு பாளையங்களில் இருந்த நாயக்கர்கள் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தனர்?
8. வேலுநாச்சியார் தனது மகள் வெள்ளச்சி நாச்சியாருடன் கோபால நாயக்கரின் பாதுகாப்பில் எங்கு வாழ்ந்தார்?
9. சரியான கூற்றைத் தேர்ந்தெடு. 1. குவார்ட்சைட் மற்றும் சலவைக்கற்கள் பொதுவாக கட்டுமானம் மற்றும் சிற்ப வேலைபாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. 2. சலவைக் கற்கள் பரவலாக அழகான சிலைகள், அலங்கார பொருள்கள் குவளை, சிறிய பரிசு பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன. 3. சலவைக்கற்களின் துகள்களிலிருந்து நெகிழி, காகிதம் போன்ற பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
10. கீழ்க்கண்ட மண்ணின் பயன்களில் சரியானதை தேர்ந்தெடு. 1. மண் புவியில் உயிரினங்கள் வாழ்வதற்கும் தாவரங்கள் வளர்வதற்கும் அடிப்படையாக உள்ளது. 2. மண்ணில் உள்ள கனிமங்கள், பயிர்கள் மற்றும் தாவரங்களை ஊட்டமாக வளரச் செய்கின்றன. 3. மண், பீங்கான்கள் மற்றும் மண் பொருள்கள் தயாரிக்க பயன்படுகிறது. 4. மண், இயற்கை முறையில் நீரை வடிகட்டவும் சுத்திகரிக்கவும் பயன்படுகிறது. 5. கைவினைப் பொருள்கள் மற்றும் கட்டுமான வேலைப்பாடுகளுக்கு மண் ஆதாரமாக உள்ளது.
11. காலநிலை என்பது வளிமண்டலத்தின் வானிலை கூறுகளின் சராசரி தன்மையினை சுமார்………………… கணக்கிட்டு கூறுவதாகும்.
12. கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரி? I. வளிமண்டலத்தில் காற்றழுத்தம் குறைவாக இருக்கும். II. வளிமண்டலத்தில் சில இடங்களில் காற்றழுத்தம் இருக்காது. III. புவிக்கு அருகில் காற்றழுத்தம் அதிகமாக இருக்கும்.
13. நீர் உட்கசிந்து வெளியிடுதல் என்னும் நிகழ்வில் பங்கு பெறும் நீர் எது?
14. வளிமண்டலத்தில் காணப்படும், குறைந்த எடை கொண்ட மிக நுண்ணிய நீர்துளிகளையும், பனிப்படிகங்களையும் கொண்டிருப்பது?
15. 2020ஆம் ஆண்டின்படி இந்தியாவில் எத்தனை மாநில அரசாங்கங்கள் செயல்படுகின்றன?
16. சட்டப்பேரவைக்கான தேர்தல் குறித்த தவறான செய்தி எது?
18. வெளிநாடுவாழ் இந்தியர் தினமாக ஜனவரி 9 ஆம் நாளை எந்த ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது?
19. கூற்று 1: பணவீக்கம் என்பது விலைகள் குறைந்து பணத்தின் மதிப்பு உயர்வதைக் குறிக்கும். கூற்று 2: பணவாட்டம் என்பது விலைகள் உயர்ந்து, பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைவதை குறிக்கும்.
20. _________’காலவைப்பு’ எனவும் அழைக்கப்படுகிறது.
21. கூற்று 1: 15 முதல் 16 வயதுக்குட்பட்ட இளம் மாணவர்களுக்கு தரமான, எளிதில் கிடைக்கக்கூடிய, எளிய அணுகுமுறையுடன், அனைவருக்கும் வாய்ப்புகளை உருவாக்கும் இடைநிலைக் கல்வியை அளிப்பதே RMSA வின் நோக்கமாகும். கூற்று 2: RMSA திட்டத்தின் மூலம் அறிவியல் ஆய்வகம், நூலகங்கள், ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி, கணினி வழிக் கல்வி, பள்ளி இணைச் செயல்பாடுகள் மற்றும் கற்றல் – கற்பித்தல் உபகரணங்கள் ஆகியவற்றை இந்திய அரசு பள்ளிகளுக்கு வழங்குகிறது.
22. அனைத்து குழந்தைகளும் தொடக்கக் கல்வியை பெறுவதற்கு வகை செய்யும் “அனைவருக்கும் கல்வி இயக்கம்" திட்டம்_________ ஆண்டு தொடங்கப்பட்டது.
23. கூற்று 1: முகலாய பேரரசர் ஷாஜஹான் ஆட்சியின்போது இந்தியாவிற்கு வருகை தந்த பெர்னியர் என்பவர் இந்தியாவில் நம்பமுடியாத எண்ணிக்கையில் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டதைக் கண்டு வியப்படைந்தார். கூற்று 2: பிரெஞ்சு நாட்டு பயணி டவேர்னியர் இந்தியாவில் உள்ள மயிலாசனம், பட்டு மற்றும் தங்கத்தினாலான தரை விரிப்புகள், சிறிய அளவிலான சிற்ப வேலைப்பாடுகளையும் கண்டு வியப்படைந்தார்.
24. சூயஸ் கால்வாய் திறப்பு ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமான தூரத்தை ________ கிலோ மீட்டர் தூரமாக குறைத்தது.
25. காலனி ஆதிக்கம், போர்கள் போன்றவை எந்த வகை இடப் பெயர்வுகளின் காரணமாகும்?
26. சர்வதேச அளவில் புலம் பெயர்வோர் எண்ணிக்கையை பொருத்துக: I. இந்தியா – a) 258 மில்லியன் II. 2000ஆம் ஆண்டு – b) 220 மில்லியன் III. 2010ஆம் ஆண்டு – c) 173 மில்லியன் IV. 2017ஆம் ஆண்டு – d) 17 மில்லியன்
A.I-d, II-c, III-b, IV-a
B. I-d, II-a, III-c, IV-b
C. I-a, II-c, III-d, IV-b
D. I-d, II-b, III-a, IV-c
None 27. இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் சுமார் 22, 000 பேர் பெரும் சுற்றுச்சூழல் பேரழிவு காரணமாக உயிரிழந்துள்ளனர், என்னும் அறிக்கை யாரால் வெளியிடப்பட்டது?
28. 2016ஆம் ஆண்டு கதிர் இயக்கவியல் சார் மற்றும் சுற்றுச்சூழல் உயிர்கோள பெட்டகம் என அறிவித்துக்கொண்ட நாடு எது?
29. யார் தன்னுடைய கல்லறையில் இந்து சமயம், இஸ்லாம் உள்ளிட்ட பல்வேறு சமயங்களை சார்ந்த கூறுகள் இடம் பெற வேண்டும் என்று விரும்பினார்?
31. உலக மனித உரிமைகள் அறிவிப்பு ஐ.நா.வின் பொதுச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு……………
32. கீழ்க்கண்டவற்றில் சரியான கூற்றைத் தேர்ந்தெடு. (1) மனித உரிமைகள் 6 முதன்மை பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. (2) மனித உரிமைகள் பிரகடனத்தில் 27 சட்டப்பிரிவுகள் உள்ளன. (3) உலக மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10
33. ABS என்பதனை விரிவாக்கம் செய்க.
34. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் ________ வரையிலான பத்தாண்டுகள் சாலை பாதுகாப்பு நடவடிக்கைக்கான பதிற்றாண்டாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
35. கூற்று: ஆங்கிலேயர்கள் தங்கள் மாற்று தலைநகரங்களை மலைப்பாங்கான பகுதிகளில் அமைத்தனர். காரணம்: அவர்கள் இந்தியாவில் கோடைக்காலத்தில் வாழ்வது கடினம் என உணர்ந்தனர்.
36. ____________ ஆண்டு மதராஸ் அதிகாரப்பூர்வமாக சென்னை என மறுபெயரிடப்பட்டது.
37. கூற்று 1: பண்டைய இந்தியாவின் சிந்துவெளி நாகரிகத்தில் தாய் கடவுளை வணங்கியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. கூற்று 2: பிரிட்டிஷ் ஆட்சியின் போது ராஜா ராம்மோகன் ராய், தயானந்த சரஸ்வதி, கேசவ சந்திர சென், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், பண்டித ரமாபாய், டாக்டர். முத்துலட்சுமி அம்மையார், ஜோதிராவ் பூலே, பெரியார், டாக்டர் தர்மாம்பாள் போன்ற சமூக சமய சீர்திருத்தவாதிகள் பெண்களின் மேம்பாட்டிற்காக போராடினர்.
38. __________ ஆண்டில் இந்தியக் கல்விக் (ஹண்டர்) குழு சிறுமிகளுக்கான தொடக்கப் பள்ளியையும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களையும் தொடங்க பரிந்துரைத்தது.
39. உணவு பதப்படுத்துதல், தாவர எண்ணெய் உற்பத்தி, பால் உற்பத்தி போன்றவை எந்த வகை தொழிலகங்கள் ஆகும்?
40. உலக பாரம்பரிய வாகன தொழில் மையமாக அறியப்படும் டெட்ராய்ட் எந்த நாட்டில் அமைந்துள்ளது?
41. இந்தியாவில் முப்படைகளுக்கான தலைமைத் தளபதி பதவி எந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது?
42. BBIN என்னும் கூட்டமைப்பில் கையெழுத்து இடாத நாடு எது?
43. யாருடைய ஆட்சிக்காலத்தில் உரிமையியல் நடைமுறை சட்டங்கள் தொகுக்கப்பட்டது?
44. உச்சநீதிமன்றம் அமைய வழி வகுத்த சட்டம் எது?
45. ____________மற்றும்_________ ஆண்டுகளில் மதராஸ் மற்றும் பம்பாய் ஆகிய இடங்களில் உச்சநீதிமன்றத்தில் நிறுவப்பட்டன A
46. கல்கத்தா, மதராஸ், பம்பாய் ஆகிய இடங்களில் நிறுவப்பட்ட உச்சநீதிமன்றங்கள் எந்த ஆண்டு வரை உச்சநீதிமன்றங்களாகவே செயல்பட்டன?
47. கலப்புப் பொருளாதாரத்தை ஆதரித்த இந்திய பிரதமர் யார்?
48. இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார்?
49. இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் உருவாக்கத்திற்கு கருவியாக செயல்பட்டவர் யார்?
50. பொதுத்துறை நிறுவனங்களின் நோக்கங்களுள் தவறானது எது?