Home TNPSC அறிவு சார் சொத்துரிமை என்றால் என்ன ?

அறிவு சார் சொத்துரிமை என்றால் என்ன ?

0

அறிவு சார் சொத்துரிமை என்றால் என்ன ?சொத்துகளை, பொதுவாகத் தொட்டுணரக் கூடிய சொத்துகள் (tangiable assets), தொட்டுணர முடியாத சொத்துகள் (intangiable assets) என இரண்டாகப் பிரிப்பார்கள். நிலம், கட்டடம், வாகனம் ஆகியவை தொட்டுணரக்கூடிய சொத்துகள். அறிவுசார் சொத்துகள் தொட்டுணர முடியாத சொத்துகள். வணிகக் குறிகள் (Trademark), பதிப்புரிமை (காப்புரிமை), புத்தாக்க உரிமைகள் அல்லது காப்பொருளுரிமை (Patent), வடிவமைப்புகள் (Design), நில இயல் குறியீடுகள் (Geographical Indications), தாவர வகைகள் மற்றும் உழவர்களின் உரிமைகள் பாதுகாப்பு (Plant Varieties and Plant Breeders Rights), ஒருங்கிணை மின்சுற்று (Integrated Circuits) ஆகியவை அறிவுசார் சொத்துகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. எப்படி தொட்டுணரக்கூடிய சொத்துகளுக்கு உரிமை கொண்டாட, பாதுகாக்க வழிமுறைகள் சட்டங்கள் உள்ளனவோ அது போன்று அறிவுசார் சொத்துகளையும் பாதுகாக்கச் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

error: Content is protected !!
Exit mobile version