TNPSC UPDATES ABOUT GROUP 4 RESULTS|09.03.23

0
1842

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – IV (தொகுதி – IV) இல் அடங்கிய பணிகளுக்கான தேர்வின் முடிவுகள் வெளியிடுதல் குறித்த தெளிவுரை தொடர்பான செய்தி வெளியீடு

09/03/2023 TNPSC UPDATES#

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது, எனவே மார்ச் மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் நிச்சயம் வெளியிடப்படும் என தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என கீழ் கண்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.