CURRENT AFFAIRS-22-03-2023

0
359

🔥 முக்கிய நடப்பு நிகழ்வுகள் 🔥1. டெல்லி, சென்னை, ஹைதராபாத் மற்றும் மும்பை உள்ளிட்ட ஏழு முக்கிய நகரங்களில் காடுகளின் பரப்பளவு கணிசமாக அதிகரித்துள்ளதாக இந்திய காடுகளின் அறிக்கை (ISFR) 2023 மார்ச் 20 அன்று வெளியிட்டுள்ளது.

2. பங்களாதேஷின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் தளமான ‘பிஎன்எஸ் ஷேக் ஹசீனா ‘ (BNS Sheikh Hasina’ )பிரதம மந்திரி ஷேக் ஹசீனாவால் பங்களாதேஷின் காக்ஸ் பஜாரில் திறந்து வைக்கப்பட்டது.தனது அரசாங்கம் தனது இராணுவப் படையை நவீன அமைப்பாக மாற்றுவதற்கு ‘படைகளின் இலக்கு 2030’ இல் பணியாற்றி வருவதாக அவர் கூறினார்.

3. நேபாளத்தின் பிரத்நகர் பெருநகர நகரமும், இந்தியாவின் மீரட்டின் கிராந்திதாரா இலக்கிய அகாடமியும் இணைந்து நேபாளத்தின் பிரத் நகரில் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளது.

4. தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் 2023 – 2024 தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

5. ராம் சகாய பிரசாத் யாதவ் நேபாளத்தின் புதிய துணை ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.இவருக்கு குடியரசுத் தலைவர் ஷீத்தல் நிவாஸ் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு விழாவில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

6. உலக காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லக்ஷ்மன் நரசிம்மன் பொறுப்பேற்றுள்ளார். நரசிம்மன் புனே பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியராக பணியாற்றியுள்ளார். அமெரிக்கா, கனடா, லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் பணிபுரிந்துள்ளார்.

7. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி அருகே தோணுகால் என்ற கிராமத்தில் 16ம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர பேரரசு கால நடுகல் சிற்பத்தை கண்டெடுத்தனர்.இந்த சிற்பம் இரண்டரை அடி உயரம் மற்றும் இரண்டரை அடி அகலம் கொண்ட பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக உள்ளது.

8. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் SDSC-SHAR இல் உள்ள இரண்டாவது ஏவுதளத்திலிருந்து மார்ச் 26 அன்று எல்விஎம் -3 விண்ணில் ஏவப்பட உள்ளது என்று இஸ்ரோ கூறியுள்ளது.

9. இந்திய வீரர் பங்கஜ் அத்வானி ஆசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று உள்ளார்.தோஹாவில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய வீரர் பிரிஜேஷ் தமானியை 5க்கு 1 என்ற புள்ளியில் பங்கஜ் அத்வானி தோற்கடித்தார்.

10. அமெரிக்காவில் இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதி போட்டியில் கஜகஸ்தான் சேர்ந்த எலினா ரைபகினா, பெலாரஸ் சேர்ந்த அரினா சபலென்காவுடன் மோதினார்.இந்த போட்டியில் ரைபகினா 7-6 (13-11), 6-4 என்ற கணக்கில் சாம்பியன் பட்டம் வென்றார்.