மார்ச்.23:
இன்று
உலக வானிலை தினம்!
👉ஓர் இடத்தின் வானிலை மற்றோரிடத்தின் வானிலையைத் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.
👉அதனால் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களுடைய காலநிலை இடைவேளையைச் சரியாகப் பகிர்தல் அவசியமாகக் கருதப்பட்டது.
👉இவ்வாறான பகிர்தலின் நோக்கோடு தொடங்கப்பட்டதே World Meteorological Organization (WMO) எனப்படும் உலக வானிலை அமைப்பு.
👉1950-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ந்தேதி ஜெனிவாவில் இந்தியா உள்பட 193 நாடுகள் இணைந்து உலக வானிலையியல் அமைப்பு (WORLD METEOROLOGICAL ORGANIZATION) தொடங்கப்பட்டது.
👉உலக வானிலை அமைப்பு தொடங்கப்பட்ட இந்த தினம், ஒவ்வோர் ஆண்டும் உலக வானிலையியல் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
👉அதன்படி, உலக வானிலை தினம், ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு கருப்பொருளைக் கொண்டுள்ளது.
👉2023 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் “வானிலை, காலநிலை மற்றும் நீரின் எதிர்காலம் – தலைமுறைகள் முழுவதும்…” (“The Future of Weather, Climate, and Water Across Generations”).