பிப். 15: இன்று கலிலியோ கலிலி பிறந்த நாள்!

0
342

பிப். 15: இன்று கலிலியோ கலிலி பிறந்த நாள்!👉கணிதவியலாளர், பொறியாளர், வானியல் நிபுணர், தத்துவவாதி கலிலியோ கலிலி இத்தாலியின் பைசா நகரில் 1564 பிப்ரவரி 15-ல் பிறந்தார். 👉‘ஆண்களுக்கு 32 பற்கள், பெண்களுக்கு 28 பற்கள்’ என்று அரிஸ்டாட்டில் கூறியதாக பள்ளியில் சொல்லிக் கொடுக்கப்பட்டது. 👉பின்னர் தன் அம்மா, பக்கத்து வீட்டுப் பெண்களின் பற்களையும், சில ஆண்களின் பற்களையும் எண்ணிப் பார்த்து ‘அரிஸ்டாட்டில் சொன்னது தவறு, இருவருக்குமே 32 பற்கள்தான்’ என்றாராம்.👉மருத்துவம் படிக்க பைசா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். மருத்துவப் படிப்பை நிறுத்திவிட்டு கணிதம் பயின்றார். 👉கல்லூரியில் கணிதப் பேராசிரியராக 18 ஆண்டுகள் பணியாற்றினார்.👉கோள்களைச் சுற்றிக் காணப்படும் ஒளிவட்டம், சூரியனில் காணப்படும் புள்ளிகள் ஆகியவற்றை தான் கண்டறிந்த டெலஸ்கோப் மூலம் பார்த்து ஆராய்ந்தார்.👉கோள்களைப் பற்றிய முந்தைய காலத்து கோட்பாடுகளை இந்த ஆராய்ச்சி தகர்த்தது. 👉இந்த அனுபவங்களைத் திரட்டி ‘தி டயலாக் ஆஃப் தி டூ பிரின்சிபல் சிஸ்டம் ஆஃப் தி வேர்ல்டு’ என்ற புத்தகத்தை எழுதி பிரபலமானார். 👉கலிலியோ, நவீன இயற்பியலின் தந்தை என போற்றப்படுகிறார்.