ஆசிரியர் தகுதித் தேர்வு – விடைத்தாள் நகல் வெளியீடு

1
636

ஆசிரியர் தகுதித் தேர்வு – விடைத்தாள் நகல் வெளியீடுஆசிரியா் தகுதித் தேர்வு (தாள் 2) எழுதியவா்கள் விடைத்தாள் நகல்களை இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியா் தேர்வு வாரியம் (டிஆா்பி) தெரிவித்துள்ளது. ஆசிரியா் தகுதித் தேர்வு (தாள் 2) எழுதியவா்கள் விடைத்தாள் நகல்களை இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியா் தேர்வு வாரியம் (டிஆா்பி) தெரிவித்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்துவித பள்ளிகளிலும் ஆசிரியா் பணியில் சேர தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். டெட் தேர்வு 2 தாள்களை கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவா்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ஆம் தாளில் தேர்ச்சி அடைபவா்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணியாற்றலாம். தமிழகத்தில் ஆசிரியா் தேர்வு வாரியம் (டிஆா்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்படுகிறது.அதன்படி, 2022-ஆம் ஆண்டுக்கான டெட் முதல் தாள் தேர்வு கடந்த அக்டோபரில் நடைபெற்றது. இந்த தேர்வை 1 லட்சத்து 53 ஆயிரத்து 23 போ எழுதினா். அதன் முடிவுகள் டிச.7-இல் வெளியிடப்பட்டன. அதில் 21,543 போ (14%) மட்டுமே தேர்ச்சி பெற்றனா்.அதைத் தொடா்ந்து, டெட் 2-ஆம் தாள் தேர்வு கடந்த பிப்.3 முதல் 15-ஆம் தேதி வரை கணினிவழியில் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் சுமாா் 4 லட்சம் பட்டதாரிகள் பங்கேற்ாக கூறப்படுகிறது. இந்த நிலையில், டெட் 2-ஆம் தாள் தேர்வெழுதிய பட்டதாரிகளின் விடைத்தாள் நகல்களை டிஆா்பி தற்போது வெளியிட்டுள்ளது. இது தொடா்பாக டிஆா்பி வெளியிட்ட அறிவிப்பு: கணினி வழியில் நடத்தப்பட்ட டெட் 2-ஆம் தாள் தேர்வில் பங்கேற்ற தேர்வா்களின் வினாத்தாள்-விடைத்தாள் நகல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை தேர்வா்கள் வலைதளத்தில் https://trb.tn.nic.in/ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான வழிமுறைகளை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.