வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

0
487

வெள்ளரிக்காய் சிறுநீர்ப்பிரிவைத் தூண்டச் செய்வது, இரைப்பையில் ஏற்படும் புண்ணையும் மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது. இக்காய் பித்த நீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது.

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், வறண்ட தோல், பருக்கள் முதலியவை குணமாக வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூச வேண்டும். பதினைந்து நிமிடங்கள் முகத்தில் இந்தப் பூச்சு இருக்க வேண்டும். தொடர்ந்து இந்த முறையில் பூசினால் முகம் அழகு பெறும். பெண்கள் இந்த முறையைத் தினசரி பின்பற்றலாம்.

வறண்ட தோல், காய்ந்துவிட்ட முகம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய் கிடைக்கும் காலத்தில் தினமும் வெள்ளரிக்காய்ச்சாறு சாப்பிட்டு வறட்சித் தன்மையைப் போக்கலாம்.