ஆதார் நம்பரை மின் இணைப்புடன் இணைப்பது எப்படி?|how to link aadhar to eb account

0
1260

தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி ஒவ்வொருவரும் தங்கள் மின் இணைப்புடன் தங்கள் ஆதார் நம்பரை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மிகவும் எளிதாக ஓரிரு படிநிலைகளில் நம் ஆதார் நம்பருடன் மின் இணைப்பை கீழ் காணும் வழிமுறைகளில் இணைக்கலாம்.

மேலே இருக்கும் click to link பட்டணை கிளிக் செய்தால் கீழ் காணும் பக்கம் திறக்கும்.

மேற்கண்ட பக்கத்தில் Service Connection Number, Mobile Number மற்றும் படத்தில் வரும் Capcha Code ஆகியவற்றை உள்ளீடு செய்து Enter என்பதை கிளிக் செய்யவும்.

மேற்கண்ட தகவல்களை கொடுத்து Enter என்பதை கிளிக் செய்தவுடன் கீழ் கண்ட பக்கம் காணப்படும்.

அதில் நீங்கள் உள்ளீடு செய்த Service Number யாருடைய பெயரில் உள்ளதோ அவர்களுடைய பெயரின் கடைசி நான்கு இலக்கங்கள் திரையில் வரும்.

யாருடைய ஆதாரை இணைக்க வேண்டுமோ அவர்கள் வீட்டின் உரிமையாளரா(Owner), வாடகைதாரரா( Tenant), உரிமையாளராய் இருந்தும் மின் இணைப்பு வேறு நபரின் பெயரில் உள்ளதா(Owner but service connection name not transfered, வெளிநாட்டு வாழ் இந்தியரா (NRI-Relative) போன்ற நான்கு தெரிவுகள் கொடுக்கப்பட்டு இருக்கும். எடுத்துக்காட்டாக நீங்கள் வாடகைக்கு இருக்கும் நபர் எனில் Tenant என்பதை தெரிவு செய்து விட்டு இணைக்க வேண்டிய ஆதார் எண்ணை உள்ளீடு செய்து, I hereby give my consent to link my aadhaar to above service connection number என்ற உங்கள் ஆதாரை இணைக்க ஒப்புதல் தெரிவிக்கும் தெரிவில் டிக் செய்துவிட்டு Send OTP என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது நீங்கள் உள்ளீடு செய்த ஆதார் எண்ணோடு இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு 6 இலக்க otp நம்பர் குறுஞ்செய்தியாக வரும். மேலே காட்டப்பட்டது போல OTP-ஐ உள்ளீடு செய்து Submit என்பதை கிளிக் செய்யவும்.

Submit செய்தவுடன் மேலே காட்டப்பட்டது போல உங்கள் ஆதார் விபரங்கள் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது என்ற Acknowledgement செய்தி திரையில் வரும்.

இதன் பின்பு சில மணி நேரங்களில் உங்கள் மொபைல் எண்ணிற்க்கும் உங்கள் கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டது என்ற SMS வந்துசேரும்.

அவ்வளவுதான் நீங்கள் உங்கள் ஆதார் எண்ணை உங்கள் மின் இணைப்புடன் இணைத்து விட்டீர்கள்.