TET PAPER-02 FREE TEST BATCH SOCIAL SCIENCE TEST-22(9TH & 10TH SOCIAL SCIENCE FULL)

0
1393

TET PAPER-02 FREE TEST BATCH SOCIAL SCIENCE TEST-22(9TH & 10TH SOCIAL SCIENCE FULL)

TET PAPER-02 தேர்வர்கள் பயன்பெறும் விதத்தில் நமது தமிழ் மடல் இணையதளம் இலவச ஆன்லைன் தேர்வு தொகுப்பினை வழங்குகிறது.48 தேர்வுகள் கொண்ட இத்தேர்வு தொகுப்பானது அக்டோபர் 18 முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும். முழு மாதிரி தேர்வில் 150 வினாக்களும் மற்ற தேர்வுகளில் 50 வினாக்களும் கேட்கப்பட்டிருக்கும் .  தினமும் இரண்டு தேர்வுகள் நடைபெறும் . காலை 7 மணி மற்றும் இரவு 8 மணிக்கு தேர்விற்கான லிங்க் வழங்கப்படும்.தேர்விற்கான  லிங்க் நமது தமிழ் மடல் வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் பகிரப்படும்.

இந்த தேர்வு தொகுப்பில் பங்கு பெற்று பயன் பெறுங்கள்.உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

TEST BATCH SCHEDULECLICK HERE

JOIN OUR WHATSAPP GROUPCLICK HERE

JOIN OUR TELEGRAM-CLICK HERE

TET PAPER-02 FREE TEST BATCH SOCIAL SCIENCE TEST-22(9TH & 10TH SOCIAL SCIENCE FULL)

Welcome to your 9th & 10th SOCIAL FULL TEST (NEW)

1. i) செல்ட் எனப்பட்ட மெருகேற்றப்பட்ட கற்கோடரிகளைப் புதிய கற்கால மக்கள் பயன்படுத்தினார்கள் ii) புதிய கற்காலக் கிராமம் குறித்த சான்று சென்னை மாவட்டத்தில் உள்ள பையம்பள்ளியில் காணப்படுகிறது. iii) புதிய கற்காலத்தைத் தொடர்ந்து வந்த பண்பாட்டுக்காலம் பழங்கற் காலம் எனப்படுகிறது. iv) விலங்குகளை வளர்த்தல், பயிர் செய்தல் ஆகியவை நடந்த காலகட்டம் இடைக்கற்காலம் எனப்படுகிறது.

2. கூற்று:- மெசபடோமிய நாகரிகத்தின் அஸிரியர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் சமகாலத்தவர் ஆவர். காரணம் :- அஸிரிய ஆட்சியாளரின் ஆவணம் ஒன்று மெலுஹாவிலிருந்து வந்த கப்பல்கள் பற்றி கூறுகின்றது.

3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

4. அசோகரை புத்தப்பற்றாளராக மாற்றியவர் யார்?

5. i) யூகிளிட் கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் எவ்வாறு நகர்கின்றன என்பது குறித்து ஒரு மாதிரியை உருவாக்கினார். ii) எட்ரூஸ்கர்களை முறியடித்து, ரோமானியர்கள் ஒரு குடியரசை நிறுவினர். iii) அக்ரோபொலிஸ் புகழ்பெற்ற அடிமைச் சந்தை ஆனது. iv) ரோமும் கார்த்தேஜும் கிரேக்கர்களைத் துரத்துவதற்கு ஒன்றிணைந்தன.

6. வெடி மருந்து _____ ஆண்டிலேயே பயன்பாட்டில் இருந்தது.

7. கூற்று (கூ) : கிழக்கே சீனா முதல் மேற்கே ஆப்பிரிக்கா வரை நீண்டிருந்த கடல் வணிகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்தியா இருந்தது. காரணம் (கா) : இந்தியாவின் நிலவியல் அமைப்பு இந்தியப் பெருங்கடலின் மையத்தில் அமைந்துள்ளது.

8. சரியான கூற்றினைக் கண்டுபிடி

9. ……………. ஆம் ஆண்டில் பாரிஸ் உடன்படிக்கையின்படி அமெரிக்க சுதந்திர அமைதிப் போர் முடிவுக்கு வந்தது.

10. கூற்று : சிலேட்டர் அமெரிக்கத் தொழிற்புரட்சியின் தந்தை என அழைக்கப்படுகிறார். காரணம் : அவருடைய நூற்பாலையின் நகலாகப் பல நூற்பாலைகள் உருவாயின. அவருடைய தொழில் நுட்பம் பிரபலமானது.

11. ஒப்பந்தக் கூலி முறையானது ஒரு வகை ……

12. கூற்று I : புவித்தட்டுகள் ஒன்றோடொன்று மோதுவதால் மலைத் தொடர்கள் தோற்றுவிக்கப் படுகின்றன. கூற்று II :கவசத்தின் வெப்பத்தின் காரணமாக புவித்தட்டுகள் நகருகின்றன.

13. 1. “I” வடிவ பள்ளத்தாக்கு ஆறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது. 2. “U” வடிவ பள்ளத்தாக்கு பனியாறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது. 3. “V” வடிவ பள்ளத்தாக்கு பனியாறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.

14. ………… செம்மறி ஆட்டு மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது.

15. ‘சுந்தா அகழி’ காணப்படும் பெருங்கடல் _____ எனப்படும்.

16. கூற்று : குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காணப்படக்கூடியதும் எளிதில் பாதிக்கப்படும் சூழலில் வாழும் பலவகையான தாவரங்களும் விலங்குகளும் கொண்ட பகுதியே வளமையம் ஆகும். காரணம் : இப்பகுதி சிறப்பான கவனம் கொண்டு பாதுகாக்கப்பட வேண்டும், ஆராய்ச்சியாளர்கள் இதனை அடையாளங் காண்பர்.

17. கூற்று (A) : மூன்றாம் நிலைத் தொழிலில், பொருள்கள் நேரடியாக உற்பத்தி செய்யப்படாமல் உற்பத்தி செய்வதற்கான செயல்முறைகளில் உறுதுணையாக உள்ளது. காரணம் (R) : மூன்றாம் நிலைத்தொழிலில் ஈடுபடும் மக்கள் முழுமையாக சுற்றுச் சூழலுக்குச் சாதகமாகச் செயல்படுகிறார்கள்.

18. மிகப்பறந்த நிலப்பரப்பில் குறைந்த விவரத்தை தரக்கூடிய நிலவரைபடம்…………….

19. கீழ்க்காணும் சொற்றொடர்களில் எது நிலநடுக்கத்தை எதிர் கொள்வதோடு தொடர்புடையது?

20. கூற்று (A) : இந்தியாவில் நாடாளுமன்ற அரசாங்க முறை பின்பற்றப்படுகிறது. காரணம் (R) : இந்திய நாடாளுமன்றம் இரு சபைகளை உள்ளடக்கியது.

21. கூற்று (A) : இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான அழுத்தக்குழுக்கள் காணப்படுகின்றன. காரணம் (R) : அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருப்பதை போல இந்தியாவில் அழுத்தக் குழுக்கள் வளர்ச்சியடையவில்லை.

22. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் _____ ஆண்டு இயற்றப் பட்டது.

23. 73 மற்றும் 74வது அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் இவ்வாண்டில் நடைமுறைக்கு வந்தன.

24. கூற்று (A) : நிகர தேசிய உற்பத்தி என்பது தேசிய உற்பத்தி அளவின் உண்மை மதிப்பீடாக கருதப்படுகிறது. காரணம் (R) : இது தேசிய வருமானம் என்று அழைக்கப்படுகிறது.

25. கூற்று (A) – ஒழுங்குபடுத்தப்படாத துறையின் பொருளாதார பண்பு என்பது வீட்டினுள் உற்பத்தி நடவடிக்கை மற்றும் சிறுதொழில் செய்வதாகும். காரணம் (R) – இங்கு குறைவான ஊதியமும் மற்றும் வேலைகள் முறையாக வழங்கப்படுவதில்லை.

26. உலக அளவில் மிக அதிகமான நன்னீர் பயன்பாட்டாளராக உள்ள நாடு………….

27. சரியான கூற்றினைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

28. மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?

29. i) முதல் உலகப்போரின்போது ஆஸ்திரியாவை தெற்கு முனைப் போரில் தொடர்ந்து முனைப்புடன் ஈடுபட வைப்பதே இத்தாலியின் முக்கியக் கடமையாக இருந்தது. ii) இத்தாலியைக் காட்டிலும் நீண்ட காலங்கழித்தே ஜெர்மனி பாசிசத்தைக் கைக்கொண்டது. iii) அமெரிக்காவில் மிகப்பெரும் பங்குச் சந்தை வீழ்ச்சி 1929ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் நாளில் ஏற்பட்டது. iv) ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் மீதானத் தடை 1966இல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

30. கூற்று : குடியரசுத்தலைவர் ரூஸ்வெல்ட் அமெரிக்கா தனது தனித்திருக்கும் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என்பதை உணர்ந்தார். காரணம் : அவர் 1941இல் கடன் குத்தகைத் திட்டத்தை தொடங்கினார்.

31. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் செயற்குழுவிற்கு 1969இல் தலைவராகப் பதவியேற்றவர் யார்?

32. யாருடைய பணியும் இயக்கமும், 1856ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது?

33. திருச்சிராப்பள்ளி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர் யார்? அ) மருது சகோதரர்கள்

34. 1916ஆம் ஆண்டு ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை முதலில் தொடங்கியவர் யார்?

35. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும். i) இந்திய பொதுவுடைமை கட்சி 1920ஆம் ஆண்டு தாஷ்கண்டில் தொடங்கப்பட்டது. ii) எம். சிங்காரவேலர் கான்பூர் சதித்திட்ட வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். iii) ஜெயப்பிரகாஷ் நாராயண், ஆச்சார்ய நரேந்திர தேவ், மினு மசானி ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் சமதர்ம கட்சி உருவானது. iv) வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் சமதர்மவாதிகள் பங்கேற்கவில்லை.

36. “அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது” எனக் கூறியவர் யார்?

37. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும். i) மிக முன்னதாகவே வெளியிடப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் 1812இல் வெளியிடப்பட்டது. ii) பனையோலைகளில் எழுதப்பெற்ற பல்வேறு தமிழ் இலக்கண இலக்கிய கையெழுத்துப் பிரதிகளை மறைமலையடிகள் சேகரித்துத் தொகுத்தார். iii) இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையில் இல்லாத ஒப்புமை திராவிட மொழிக்களுக்கிடையே நெருக்கமாக நிலவுவதை நிரூபித்தார். தமிழின் தொன்மையையும் நிரூபித்தார். iv) திரு.வி. கல்யாணசுந்தரம் தொழில் சங்க இயக்கத்தின் தொடக்ககால முன்னோடியாக இருந்தார்.

38. மத்திய தீர்க்க ரேகை …………. வழியே செல்கிறது.

39. யுனெஸ்கோவின் (UNESCO) உயிர்க்கோளப் பாதுகாப்பு பெட்டகத்தின் ஒரு அங்கமாக இல்லாதது …………………

40. உருளைக்கிழங்கால் ஏற்படும் புரட்சி ………………. புரட்சி.

41. இரும்பு தாது உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாநிலம் …………… ஆகும்.

42. நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு ………………. இடத்திலுள்ளது.

43. கூற்று : தமிழ்நாடு தென்மேற்கு பருவகாற்று காலங்களில் அதிக மழையைப் பெறுவதில்லை காரணம் : இது மேற்கு தொடர்ச்சி மலையின் மழை மறைவுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.

44. கூற்று : கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மண்டலம் தமிழ்நாட்டின் ஜவுளி பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது. காரணம் : இவைகள் நெசவாலைகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை அளிக்கிறது.

45. உயர்நீதிமன்றம், ஆவணங்களை நியாயமான பரிசீலனைக்கு உரிய அதிகாரிக்கு அனுப்பச் செய்ய கீழ்மன்றங்களுக்கு இடும் ஆணை ……………………

46. கீழ்க்கண்ட எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார்.

47. கூற்று : மாநில சட்டமன்றத்திற்கு சட்ட அதிகார வரம்பு உண்டு. காரணம் : குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மட்டுமே மாநிலப் பட்டியலிலுள்ள சில மசோதாக்களைச் சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யலாம்.

48. பின்வருவனவற்றை காலவரிசைப்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். i) பஞ்சசீலம் ii) சீனாவின் அணுவெடிப்புச் சோதனை iii) 20 ஆண்டுகள் ஒப்பந்தம் iv) இந்தியாவின் முதல் அணுவெடிப்புச் சோதனை

49. சுதந்திரமடைந்த பாகிஸ்தானுக்கான எல்லைகளை வகுத்தவர்…………………………

50. 2019இல் பணிகள் துறையில் …………….. லட்சம் கோடி நடப்பு விலையில் மொத்த மதிப்பு உள்ளது.