TET PAPER-02 FREE TEST BATCH SOCIAL SCIENCE TEST-18(10TH HISTORY FULL)

0
3805

TET PAPER-02 FREE TEST BATCH SOCIAL SCIENCE TEST-18(10TH HISTORY FULL)

TET PAPER-02 தேர்வர்கள் பயன்பெறும் விதத்தில் நமது தமிழ் மடல் இணையதளம் இலவச ஆன்லைன் தேர்வு தொகுப்பினை வழங்குகிறது.48 தேர்வுகள் கொண்ட இத்தேர்வு தொகுப்பானது அக்டோபர் 18 முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும். முழு மாதிரி தேர்வில் 150 வினாக்களும் மற்ற தேர்வுகளில் 50 வினாக்களும் கேட்கப்பட்டிருக்கும் .  தினமும் இரண்டு தேர்வுகள் நடைபெறும் . காலை 7 மணி மற்றும் இரவு 8 மணிக்கு தேர்விற்கான லிங்க் வழங்கப்படும்.தேர்விற்கான  லிங்க் நமது தமிழ் மடல் வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் பகிரப்படும்.

இந்த தேர்வு தொகுப்பில் பங்கு பெற்று பயன் பெறுங்கள்.உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

TEST BATCH SCHEDULECLICK HERE

JOIN OUR WHATSAPP GROUPCLICK HERE

JOIN OUR TELEGRAM-CLICK HERE

TET PAPER-02 FREE TEST BATCH SOCIAL SCIENCE TEST-18(10TH HISTORY FULL)

Welcome to your 10th HISTORY NEW

1. ஜெர்மனியோடு 1918 மார்ச் 3ம் நாள் பிரெஸ்ட் லிட்டோவஸ்க் உடன்படிக்கையில் கையெழுத்திட்டது …………….. ஆகும்.

2. கூற்று : பன்னாட்டு சங்கம் 5 உறுப்புகளைக் கொண்டது. காரணம் : பொதுச்சபை, பாதுகாப்பு சபை, நிர்வாகம் பன்னாட்டு நீதிமன்றம், தொழிலாளர் அமைப்பு என்பவையாகும்.

3. “ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்” எனக் கூறியவர் யார்?

4. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும். i) துருக்கியப் பேரரசு, பால்கனில் துருக்கியரல்லாத பல இனமக்களைக் கொண்டிருந்தது. ii) துருக்கி மையநாடுகள் பக்கம் நின்று போரிட்டது. iii) பிரிட்டன் துருக்கியைத் தாக்கி கான்ஸ்டான்டிநோபிளைக் கைப்பற்றியது. iv) சூயஸ் கால்வாயைத் தாக்க துருக்கி மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.

5. கூற்று : ஜெர்மனியும் அமெரிக்காவும் மலிவான தொழிற்சாலைப் பொருட்களை உற்பத்தி செய்து இங்கிலாந்தின் சந்தையைக் கைப்பற்றின. காரணம் : இருநாடுகளும் தங்கள் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்களை உற்பத்தி செய்தன.

6. லத்தீன் அமெரிக்காவுடன் ‘அண்டை நாட்டுடன் நட்புறவு’ எனும் கொள்கையைக் கடைப்பிடித்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்?

7. ரோமாபுரி நோக்கி அணிவகுப்பை ………………… முசோலினி மேற்கொண்டார்.

8. ஸ்மட்ஸ் தலைமையில் ……………… இடங்கள் தென்னாப்பிரிக்க கட்சி வெற்றி பெற்றது.

9. 1830ல் ஒட்டுமொத்த அமெரிக்காவும் ஐரோப்பிய மேலாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது. ii) நாசிசம் தீவிர ஆதிக்க மனப்பான்மை கொண்ட தேசியவாதத்தின் ஒரு வடிவமாகும். iii) பாசிசம் 1919ல் தொடங்கப்பட்டது. iv) ஹிட்லர் 1922ல் ரோமாபுரி நோக்கி அணிவகுப்பை நடத்தினார்.

10. கூற்று : 1884-85இல் நடைபெற்ற பெர்லின் காலனிய மாநாடு காலனியாதிக்க சக்திகள் ஆப்பிரிக்காவைத் தங்களின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரித்துக் கொள்ளலாம் எனத் தீர்மானித்தது. காரணம் : ஆங்கிலேயருக்கும், போயர்களுக்கும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போர் இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பானதாகும்.

11. ஹிட்லரின் ‘மின்னல் வேகத் தாக்குதல் ‘…………………… எனப்பட்டது.

12. கூற்று : இத்தாலி முசோலினியின் சர்வாதிகார ஆட்சி 1933ல் தூக்கியெறியப்பட்டது. காரணம் : ஜெர்மனி வடக்கே ஒரு பொம்மை அரசை நிறுவி அதில் முசோலினியை அமரவைத்தது.

13. ஹிட்லர் ……………… ஏப்ரலில் தற்கொலை செய்து கொண்டார்.

14. 1919 ஜீன்-ல் ……………… உடன்படிக்கையோடு முதல் உலகப் போர் முடிவுற்றது.

15. கூற்று : குடியரசுத்தலைவர் ரூஸ்வெல்ட் அமெரிக்கா தனது தனித்திருக்கும் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என்பதை உணர்ந்தார். காரணம் : அவர் 1941இல் கடன் குத்தகைத் திட்டத்தை தொடங்கினார்.

16. சரியான வாக்கியம் வாக்கியங்களைத் தெரிவு செய்க. i) கற்றறிந்த சிறுபான்மையினரின் தாக்கத்தில் சீனாவின் (1898) இளம் பேரரசர் துவக்கிய சீர்த்திருத்தங்கள் நூறு நாள் சீர்திருத்தம் என்று அறியப்படுகிறது. ii) கோமிங்டாங் கட்சி தொழிலாளர்களையும் விவசாயிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தியது. iii) மஞ்சூரியா மீதும் ஷாண்டுங் மீதும் ஜப்பான் பொருளாதாரக் கட்டுப்பாட்டை விதிக்க யுவான் ஷி-கே உடன்பட்டதால் தேசியவாதிகள் பார்வையில் அவர் செல்வாக்கு இழந்தார். iv) சோவியத் நாடு இருபது ஆண்டு காலத்திற்கும் மேலாக சீன மக்கள் குடியரசை அங்கீகரிக்க மறுத்தது.

17. சரியான வாக்கியம் வாக்கியங்களைத் தெரிவு செய்க. i) ஒற்றை ஐரோப்பிய சட்டம் 1992 பிப்ரவரி 7ல் கையெழுத்தானது. ii) ஒற்றை ஐரோப்பியா வெளியுறவுக் கொள்கையின் ஒத்துழைப்பை நாடியது. iii) ஐரோப்பிய ஒன்றியத்தில் 29 நாடுகள் உள்ளது. iv) மாஸ்டிரிக்ட் ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்தால் உருவானது.

18. கூற்று : இஸ்ரேல் என்ற தேசம் 1948ல் உருவானது. காரணம் : பாலஸ்தீன விடுதலை அமைப்பின் முக்கிய தலைவர் “யாசர் அராபத்” ஆவார்.

19. i) கிழக்கு ஐரோப்பாவில் 1948இல் சோவியத்நாடு நிறுவிய இடதுசாரி அரசுகளை சோவியத் இராணுவம் விடுதலை செய்தது. ii) வடக்கு அட்லாண்டிக் பகுதியில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யவே நேட்டோ உருவாக்கப்பட்டது. iii) சிட்டோவின் உறுப்பு நாடுகள் அப்பகுதியில் மக்களாட்சி பரவுவதைத் தடுக்கும் நோக்கோடு செயல்பட்டார்கள். iv) ஜப்பானுக்கெதிராக பிரிட்டன் அணுகுண்டைப் பயன்படுத்தியதின் மூலம் அது ரஷ்யாவுக்கு தன்னுடைய அழிக்கும் திறனை எடுத்துக்காட்ட விரும்பியது.

20. கூற்று : அமெரிக்காவின் மார்ஷல் திட்டம் போரில் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் மறு நிர்மானத்திற்காக முன்வைக்கப்பட்டது. காரணம் : அமெரிக்க நாடு அத்திட்டத்தின் மூலம் மேற்கு ஐரோப்பிய நாடுகளைத் தன் செல்வாக்கின் கீழ் கொண்டுவர நினைத்தது.

21. நவீன இந்தியாவின் முன்னோடி …………

22. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். Question 1. i) அய்யன்காளி 1863ல் பிறந்தார். ii) “ஜீவன்” என்பதே “சிவன்” என பரமஹம்சர் கூறினார். iii) பரமஹம்சரின் சீடர் ஜோதிபா பூலே. iv) 1999ல் பிரம்மஞான சபை தொடங்கப்பட்டது.

23. கூற்று : சர்சையது அஹமது கான், ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியை நிறுவினார். காரணம் : இஸ்லாமியர்கள் மேலை நாட்டு அறிவியலை கற்க வேண்டும் என்பதற்காக.

24. கூற்று : ஜோதிபா பூலே ஆதரவற்றோருக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான விடுதிகளையும் திறந்தார். காரணம் : ஜோதிபா பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார்.

25. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். i) இராமகிருஷ்ணா மிஷன் கல்வி, உடல் நலம், பேரிடர்களின்போது நிவாரணப் பணி செய்தல் போன்ற சமூகப்பணிகளில் செயலூக்கத்துடன் ஈடுபட்டது. ii) பேரின்பநிலை எய்தும் பழக்கங்களின் மூலம் ஆன்ம ரீதியாக இறைவனோடு இணைவதை இராமகிருஷ்ணர் வலியுறுத்தினார். iii) இராமகிருஷ்ணர் இராமகிருஷ்ணா மிஷனை ஏற்படுத்தினார். iv) இராமகிருஷ்ணர் வங்கப்பிரிவினையை எதிர்த்தார்.

26. கூற்று : பூலித்தேவர், ஹைதர் அலி மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியைப் பெற முயன்றார். காரணம் : மராத்தியர்களோடு ஏற்கனவே தொடர் போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் ஹைதர் அலியால் பூலித்தேவருக்கு உதவ முடியாமல் போனது.

27. வேலூர் கோட்டையில் புதிய இராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்தக் காரணமாயிருந்த தலைமை தளபதி யார்?

28. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும். Question 1. (i) பாளையக்காரர் முறை காகதீயப் பேரரசின் நடைமுறையில் இருந்தது. (ii) கான் சாகிப்பின் இறப்பிற்குப்பின் பூலித்தேவர் நெற்கட்டும் செவலை 1764இல் மீண்டும் கைப்பற்றினார். (iii) கம்பெனி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்காமல் பாளையக்காரர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் யூசுப் கான் துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764இல் தூக்கிலிடப்பட்டார். (iv) ஒண்டிவீரன் கட்டபொம்மனின் படைப்பிரிவுகளில் ஒன்றைத் தலைமையேற்று வழி நடத்தினார்.

29. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்: (i) கர்னல் கேம்ப்பெல் தலைமையின் கீழ் ஆங்கிலேயப் படைகள் மாபூஸ்கானின் படைகளோடு இணைந்து சென்றன. (ii) காளையார்கோவில் போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டப் பின் வேலுநாச்சியார் மீண்டும் அரியணையைப் பெறுவதற்கு மருது சகோதரர்கள் துணைபுரிந்தனர். (iii) திண்டுக்கல் கூட்டமைப்புக்கு கோபால நாயக்கர் தலைமையேற்று வழி நடத்தினார். (iv) காரன்வாலிஸ் மே 1799ல் கம்பெனிப் படைகளை திருநெல்வேலி நோக்கிச் செல்ல உத்தரவிட்டார்.

30. எந்த ஆண்டில் பூலித்தேவரின் மூன்று முக்கியக் கோட்டைகள் யூசுப்கானின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன?

31. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும். கூற்று : ஹாஜி ஷரீயத்துல்லா என்பவரால் 1819ஆம் ஆண்டு பராசி இயக்கம் தொடங்கப்பட்டது. காரணம் : ஃஷரீயத்துல்லாவிற்கு பிறகு டுடுமியான் தலைமை ஏற்றார்.

32. கூற்று : வஹாபி கிளர்ச்சி என்பது ஆங்கிலேய ஆட்சிக்கும், நிலப்பிரபுக்களுக்கும் ஏகிராகத் துவங்கப்பட்டது. காரணம் : டிடு மீர் விவசாயிகள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த நபராகத் திகழ்ந்தார்.

33. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவராக 1885இல் ………………. இருந்தார்.

34. இண்டிகோ கிளர்ச்சி தொடங்கப்பட்ட ஆண்டு ………………….

35. இந்தியா கிழக்கிந்திய கம்பெனியால் கொள்ளையடிக்கப்படும் செயலானது ………………………. ஆண்டுகளுக்கு நீடித்தது.

36. ……………. நூற்றாண்டின் கடைசியில் ஜெர்மானிய செயற்கை சாயங்களால் இண்டிகோ எனப்படும் நீலச்சாயம் சந்தையில் விற்கப்படுவது குறைந்தது.

37. ஜாலியன் வாலாபாக்கில் நடந்த படுகொலையில் அதிகாரப்பூர்வ அரசு தகவல்களின் படி 379 பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர் மற்றும் ……………… க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

38. ……………… ஆம் ஆண்டு லண்டனில் முதலாவது வட்ட மேசை மாநாடு நடந்தது.

39. கூற்று : ஜாலியன் வாலா பாக் படுகொலை 1919 ஏப்ரல் 13ல் நடந்தது. காரணம் : ஜெனரல் டயரின் தலைமையில் நடந்தது.

40. கூற்று : காந்தியடிகள் தனது 61வது வயதில் 24 நாட்களில் 241 மைல் கடந்து தண்டியை அடைந்தார். காரணம் : ஏப்ரல் 4ஆம் நாள் தண்டி கடற்கரையை சென்றடைந்தார்.

41. “அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது” எனக் கூறியவர் யார்?

42. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும். i) சென்னைவாசிகள் சங்கம் 1852இல் நிறுவப்பட்டது. ii) தமிழில் வெளிவந்த தேசியப் பருவ இதழான சுதேசமித்திரன் 1891இல் தொடங்கப்பட்டது. iii) குடிமைப்பணித் தேர்வுகள் இந்தியாவில் மட்டுமே நடத்தப்பட வேண்டுமென சென்னை மகாஜன சபை கோரியது. iv) V.S சீனிவாசனார் ஒரு தீவிர தேசியவாதியாவார்.

43. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும். i) ஒத்துழையாமை இயக்கத்தில் பெரியார் பங்கேற்கவில்லை. ii) முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த யாகூப் ஹசனுடன் இராஜாஜி நெருக்கமாகப் பணியாற்றினார். iii) ஒத்துழையாமை இயக்கத்தில் தொழிலாளர்கள் கலந்து கொள்ளவில்லை. iv) தமிழ்நாட்டில் கள்ளுக் கடைகளுக்கு முன்பாக மறியல் செய்யப்படவில்லை.

44. தமிழ்நாட்டில் …………….. இல் மௌலானா சௌகத் அலி தலைமையேற்ற ஒரு பொதுக்கூட்டத்துடன் கிலாபத் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

45. கூற்று: வங்கப்பிரிவினை சுதேசி இயக்கத்திற்கு இட்டுச் சென்றது. காரணம்: வங்கப் பிரிவினை 1905ஆம் ஆண்டு நடந்தது.

46. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும். i) மிக முன்னதாகவே வெளியிடப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் 1812இல் வெளியிடப்பட்டது. ii) பனையோலைகளில் எழுதப்பெற்ற பல்வேறு தமிழ் இலக்கண இலக்கிய கையெழுத்துப் பிரதிகளை மறைமலையடிகள் சேகரித்துத் தொகுத்தார். iii) இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையில் இல்லாத ஒப்புமை திராவிட மொழிக்களுக்கிடையே நெருக்கமாக நிலவுவதை நிரூபித்தார். தமிழின் தொன்மையையும் நிரூபித்தார். iv) திரு.வி. கல்யாணசுந்தரம் தொழில் சங்க இயக்கத்தின் தொடக்ககால முன்னோடியாக இருந்தார்.

47. கூற்று : சென்னை மாகாணத்தில் 1920 முதல் 1937 வரை நீதிக்கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தது. காரணம் : இக்காலகட்டத்தில் இரட்டையாட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தைப் புறக்கணித்தது.

48. தூய தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும் ………………. செல்வாக்கு தமிழ் மொழியிலிருந்து அகற்றப்படுவதையும் மறைமலை அடிகள் ஊக்குவித்தார்.

49. கூற்று : மொழி என்பது அடையாளத்தின் வலிமையான குறியீடாகும். காரணம் : பண்பாடு மற்றும் உணர்வுகளோடு இயைந்திருப்பதால்.

50. கூற்று : டாக்டர். முத்துலெட்சுமி அம்மையார். ‘மதராஸ் தேவதாசி’ சட்டத்தை இயற்றினார். காரணம் : 1949ல் இச்சட்டம் இயற்றப்பட்டது.