ஆசிரியர் தகுதி தேர்வு தேதி அறிவிப்பு செய்தி | TET PAPER I-2022

0
584

மேற்கண்ட செய்தி இணையத்தில் வைரலாக பரவி பல்வேறு வாட்சப் குழுக்களிலும் பரவி வருகிறது. ஆனால் இதன் உண்மைத்தன்மை பற்றி தெரியவில்லை. TRB இணையத்தில் இது போன்று ஒரு செய்தி வெளியாகவில்லை என்பதால் இது புரளியாக இருக்க வாய்ப்புள்ளது. அதனால் Official Notification வரும் வரை உறுதியாக எந்த தகவலும் நம்பத்தகுந்தது அல்ல.

அந்த வைரல் செய்தியில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வ வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது . இணையவழி வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள் 14.03.2022 முதல் பதிவேற்றம் செய்திடலாம் என தெரிவிக்கப்பட்டது.

 மேலும் , விண்ணப்பதாரர் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய 26.04.2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதில் கணினி வழித் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

தற்பொழுது ஆகஸ்டு மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- 1 ற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு ( Admit card ) வழங்கும் விவரம் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் அறிவிக்கப்படும்.

Official PDF இல்லாததால் மேற்கண்ட செய்தியை அனைவரும் பரிசோதித்து உறுதி செய்துகொள்ளுங்கள்.