பொதுத் தமிழ் -01- வினாக்கள்
1.அந்தந்த அடிகளில் உள்ள சொற்களை முன் பின்னாக மாற்றிக் கொள்வது ~ எவ்வகை பொருள்கோள்?
2 . அங்காப்பு என்பது _?
3.வினைமுற்று தேர்க.
அ. படி
ஆ. படித்த
இ. படித்து
ஈ. படித்தான்
4.தவறான ஒன்றை தேர்க.
அ. கிறு
ஆ. கிண்று
இ. ஆ நின்று
ஈ. இல
5.இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே என பாடியவர்?
6.இப்போதுள்ள கல்வெட்டுகளில் பழமையானது.
7.காந்தியடிகளை அரை நிர்வாண பக்கிரி என்று ஏளனம் செய்தவர் யார்?
8.ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே
எரிகின்றன இதனை பாடிய கவிஞர் யார்?
9.கலம்பகம் பாடுவதில் புகழ்பெற்றவர்கள் _ , _?
10.இந்திய அரசியலில் சாணக்கியர் _?
11.ஆன்ம ஈடேற்றம் விரும்பும் பயணம் குறித்த நூல் _?
12.எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற இந்த வையம் எனப் பொதுவுடமையை விரும்பியவர்?
13.திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம் என்று செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்?
14.ஐஞ்சிறு காப்பியங்கள் அணைத்தும் யாரால் இயற்றப்பட்டது.
15.பெர்சிவல் பாரதியார் வேண்டுகோளை ஏற்று பைபிளை தமிழில் மொழிபெயர்த்த அறிஞர் யார்?
பொதுத் தமிழ் -01
விடைகள்…
1.மொழிமாற்றுப் பொருள் கோள்
2.வாயைத் திறத்தல்
3.ஈ
4..ஈ
5.பாரதிதாசன்
6.திரு நாதர் குன்றம் கல்வெட்டு
7.சர்ச்சில்
8.வல்லிக்கண்ணன்
9.இரட்டையர்கள்
10.இராஜாஜி
11.இரட்சணிய யாத்திரிகம்
12.பாரதிதாசன்
13.பரிதிமாற் கலைஞர்
14.சமணரால் இயற்றப்பட்டது.
15.ஆறுமுக நாவலர்