TN TET-2022- ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது? -முழு விபரங்கள்

0
666

ஆசிரியர் தகுதி தேர்வு 2022 வரும் ஜூலை மாதம் நடத்த இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கட்டாயமாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது

தேசிய ஆசிரியர் பயிற்சி கவுன்சில் விதிமுறையின்படி ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதி தேர்வு வைக்கப்படவேண்டும். ஆனால் தமிழகத்தில் கடந்த 2020,2021 ஆகிய ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக நடத்தப்படவில்லை.

அதைத் தொடர்ந்து இந்த ஆண்டில் ஏப்ரல் மாதம் ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு வெளியாகி மே மாதம் வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. மேலும் தேர்வுக்கான தேதி உறுதிப்படுத்தப்படாத நிலையில் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை மாதம் இறுதியில் தேர்வு நடத்தப்பட இருப்பதாக அறிவித்துள்ளது

முழு விவரங்களுக்கு-CLICK HERE

தேர்வு தேதி பற்றிய நியூஸ் 18 செய்தி தொகுப்புCLICK HERE