11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 2022 | +1 Result – Check Now

0
1147

தமிழகத்தில் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 27-ம் தேதி) வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 10 ஆம் தேதி தொடங்கியது. 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு 3119 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வை, 8,83,882 பேர் எழுதினர். இதில், மாணவர்கள் 4,33,684 பேரும், மாணவிகள் 4,50,198 பேரும் பொதுத் தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

11-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிவை மாணவர்கள் கீழே இருக்கும் லிங்கினை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை சமர்ப்பித்து முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

+1 பொதுத்தேர்வு முடிவுகள்

+1 RESULT DECLARED

மேனிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாத மற்றும் தேர்வு எழுதாத, தனித்தேர்வர்கள், மாணவர்கள் ஜூன் 29 முதல் ஜூலை 6ஆம் தேதி வரை துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஜூலை 1ஆம் தேதி முதல் மேனிலை முதலாமாண்டு மாணவர்கள், மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

-அரசு தேர்வுகள் இயக்ககம்


பதினோறாம் வகுப்பு அரியர் தேர்வு முடிவுகள்

+1 ARREAR RESULT – DECLARED

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

SSLC RESULT – DECLARED

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவியருக்கு வரும் 27. 06. 2022 (திங்கட்கிழமை) முதல் 04. 07. 2022 (திங்கட்கிழமை) வரையிலான நாட்களில் நீங்கள் படித்த பள்ளியிலேயே நேரில் சென்று துணைத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்

காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் அல்லது தான் படித்த பள்ளியில் விண்ணப்பிக்க வேண்டும்

பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்த மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் 125 ரூபாய், ஆன்லைன் பதிவு கட்டணம் 50 ரூபாய், மொத்த கட்டணம் 175 ரூபாய்

தேர்வு கட்டணத்தை சேவை மையங்களில் கட்டலாம் அல்லது பள்ளியிலேயே நேரடியாக பணமாக செலுத்தலாம்

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள் நடைபெறும் நாள்

02. 08. 2022. – தமிழ்
03. 08. 2022  – ஆங்கிலம்
04. 08. 2022  – கணிதம்
05. 08. 2022  – அறிவியல்
06. 08. 2022  – சமூகஅறிவியல்

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

HSC (+2 RESULT – DECLARED)