TNTET Paper I and II 2022 |Maths Test-1 [paid Batch]

0
2932

TN TET MATHS PAPER-1 AND 2 | Revision Test 1

Welcome to your 6th maths test 1 paid batch

1. தமிழ்நாட்டில் இருபத்தி ஆறாயிரத்து முன்னூற்று நாற்பத்து ஐந்து சதுர கிலோமீட்டர் பரப்பளவு காடுகள் உள்ளன என்பதை இந்திய எண் முறையில் எழுதுக.

2. அஞ்சலக குறியீட்டு எண் 6 இலக்கங்களை கொண்டது. இதன் முதல் மூன்று இலக்க எண்கள் 6,3,1. மேலும் 0,3,6 இன்று மூன்று இலக்கங்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி மிகப்பெரிய அஞ்சலக குறியீட்டு என்னை காண்க.

3. கடந்த ஐந்து மாதங்களில் ஒரு குறிப்பிட்ட பொது நூலகத்திற்கு வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கை முறையே 1200, 2000, 2450, 3060, 3200. ஐந்து மாதங்களில் அந்த நூலகத்திற்கு வருகை புரிந்தவர்கள் மொத்தம் எத்தனை பேர்?

4. ஒரு நகரத்தில் 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை 43,43,645 ஆகவும், 2011 ஆம் ஆண்டில் 46,81,087 ஆகவும் இருந்தது. அதிகரித்துள்ள மக்கள்தொகையின் உத்தேச மதிப்பை ஆயிரங்களில் முழுமையாக்குக.

5. ஒரு பூஜ்ஜியம் மற்ற முழு எண் மற்றும் அதனுடைய தொடரின் தொகை எப்போதும்………

6. முல்லைக்கொடி, ஒவ்வொரு பையிலும் 9 ஆப்பிள்கள் கொண்ட 25 பைகள் வைத்திருந்தாள். அவளுடைய ஆறு நண்பர்களுக்கு அவற்றை சமமாக பங்கிட்டு கொடுத்தாள். ஒவ்வொரு நண்பரும் எத்தனை ஆப்பிள்களை பெற்று இருப்பர்?

7. சீதாவின் தற்போதைய வயது Y. 5 ஆண்டுகளுக்கு முன் அவளுடைய வயது….

8. சுரேஷ், ரமேஷ் விட 8 வயது இளையவன். அவர்களின் வயதுகளின் கூடுதல் 30 எனில், ரமேஷின் வயது என்ன?

9. முருகனின் வயது 50 மற்றும் அவரது மகனின் வயது 10 எனில் முருகன் மற்றும் அவரது மகனின் வயதுக்கான வீதத்தினை எளிய வடிவில் எழுதுக…..

10. ஒரு வகுப்பில் உள்ள நூறு மாணாக்கர்களில் 30 பேர் மாணவர்கள் எனில் மாணவிகளின் எண்ணிக்கைக்கும் மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை க்கும் இடையே உள்ள விகிதம்…..

11. முகிலன் ஒரு மணி நேரத்தில் 15 கிலோ மீட்டர் நடக்கிறான். தமிழ்செல்வி ஒரு மணி நேரத்தில் 9 கிலோமீட்டர் நடக்கிறாள். எனில் முகிலன் மற்றும் தமிழ்செல்வி நடந்த தொலைவுக்கு உள்ள விகிதத்தை சுருக்கிய வடிவில் எழுதுக

12. 4:3 என்ற விகிதத்தில் 63 சென்டிமீட்டர் நீளமுள்ள ஒரு கோட்டுத்துண்டு இரண்டாக பிரிக்கப்பட்டால் கோட்டுத்துண்டு களின் நிலங்களை காண்க?

13. RS. 1600 ஐ A மற்றும் B என்ற இரு நபர்களுக்கு 3:5 என்ற விகிதத்தில் பிரித்துக் கொடுத்தால், B இக்கு கிடைக்கும் தொகை……..

14. ஒரு குடும்பத்தில் மாதச் செலவுகளில் மளிகைக்கும் காய்கறிக்கும் ஆகும் செலவுகளின் விகிதம் 3:2. இவை இரண்டிற்கும் ஒரு மாதத்திற்கு ஒதுக்கப்பட்ட மளிகைக்கு ஆகும் செலவு……

15. அமெரிக்காவின் பிரபலமான தங்க நுழைவுவாயில் பாலம் 6480 அடி நீளமும் 756 அடி உயரமும் கொண்ட கோபுரங்களைக் கொண்டது. ஒரு கண்காட்சியில் பயன்படுத்தப்பட்ட அதன் மாதிரி பாலத்தின் நீளம் 60 அடி மற்றும் உயரம் 7 அடி ஆகும் பயன்படுத்தப்பட்ட பாலத்தின் மாதிரி ஆனது உண்மை பாலத்திற்கு விகிதம் சமமாக உள்ளதா என்பதைக் காண்க.

16. ராமன் 3 மணி நேரத்தில் 30 பக்கங்களை படிக்கிறார் எனில் அதே வேகத்தில் 9 மணி நேரத்தில் அவரால் எத்தனை பக்கங்கள் படிக்க முடியும்?

17. ஒரு வினாடி வினா போட்டியில் கார்முகிலன் மற்றும் கவிதா வழங்கிய சரியான விடைகளின் எண்ணிக்கையை விகிதம் 10:11 அப்போட்டியில் அவர்கள் மொத்தமாக 84 புள்ளிகள் பெற்றனர் எனில் கவிதா பெற்ற பிள்ளைகள் எத்தனை?

18. 15 நாட்கள் களின் விலை 7500. இதுபோன்று 12000 இக்கு எத்தனை நாட்களில் வாங்க இயலும் எனக் காண்க.

19. 15 நாள்களில் கார்குழலி 1800 ரூபாய் வருமானமாக பெறுகிறார் எனில் 3,000 ரூபாயை வருமானமாக பெற எவ்வளவு நாள் ஆகும்?

20. ஒரு பள்ளியில் 1,500 மாணவர்கள் 50 ஆசிரியர்கள் மற்றும் 5 நிர்வாகிகள் என உள்ளனர் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 1800 ஆக உயர்ந்தால் மேற்கண்ட விதத்தில் எத்தனை ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் இருப்பார்

21. சஹானாவின் தாய் 35 சிவப்பு மணிகள் மற்றும் 30 நீல மணிகளைக் கொண்ட கை காப்பு அணிந்து இருக்கிறார். சகனா அதே விகிதத்தில் சிறிய கைகாப்பு அதே இரு வண்ணம் மணிகளைப் பயன்படுத்தி செய்ய விரும்பினால் அவளால் எத்தனை வெவ்வேறு வழிகளில் கைகாப்பு செய்ய இயலும்?

22. அணி A ஆனது ஐம்பத்தி இரண்டு போட்டிகளில் இருபத்தி ஆறு போட்டிகளை வெல்கிறது. அணி B ஐம்பத்தி இரண்டு போட்டிகளில் நான்கில் மூன்று போட்டிகளை வெல்கிறது எனில், எந்த அணியின் வெற்றி பதிவு சிறப்பானது?

23. ஒரு பையில் உள்ள பச்சை மஞ்சள் மற்றும் கருப்பு பந்துகளின் விகிதம் 4:3:5 எனில் கையிலெடுக்க அதிக வாய்ப்புடைய பந்து எது?

24. ………… என்பவர் முதலில் வடிவியல் கருத்துகளை பயன்படுத்தினார்.

25. கோட்டுத்துண்டு மற்றும் கோணங்கள் போன்ற வடிவியல் கருத்துகள்…………. விளையாட்டில் இடம் பெற்றுள்ளன.

26. 180⁰ இக்கும் கோண அளவு………. எனப்படும்.

27. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எது? 1. இரு கோணங்களின் கூட்டுத்தொகை 90⁰ எனில், அவ்விரு கோணங்கள் ஒன்றுக்கொன்று நிரப்பு கோணங்கள் ஆகும். 2. இரு கோணங்களின் கூட்டுத்தொகை 180⁰ எனில், அவ்விரு கோணங்கள் ஒன்றுக்கொன்று மிகை நிரப்பு கோணங்கள் ஆகும்.

28. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகள் ஒரு கோட்டின் மீது அமைந்தால், அவை………… என சிறப்பு பெயரிட்டு அழைக்கப்படும்.

29. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோடுகள் ஒரு புள்ளி வழி சென்றால் கோடுகள் ……….. எனப்படும்.

30. தரவு என்ற சொல் முதன் முதலில்…….. ஆண்டு பயன்படுத்தப்பட்டது.

31. தகவல் செயலாக்கம் என்ற சொல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு…….

32. மாணவர்களின் எழுதும் பழக்கங்களைப் பற்றி எழுதுகோல் தயாரிக்கும் ஒரு நிறுவனம் நடத்தும் கணக்கெடுப்பு………. எடுத்துக்காட்டாகும்.

33. கீழ்கண்ட கூற்றுகளில் தவறானவை? 1. ஒரு சொல் அல்லது சொற்றொடரை படம் வழியே குறிப்பிடுவது விளக்கப்படம் ஆகும். 2. படவிளக்க படமானது pictogram (பிக்டோகிரம்) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. 3. முற்காலத்தில் படவிளக்க படங்களே எழுத்து வடிவமாக பயன்படுத்தப்பட்டன.

34. ஓர் எண்ணின் அந்த எண்ணை தவிர்த்த மற்ற காரணிகளின் கூடுதலானது அதே என்னை தரும் எனில் அது…….. எனப்படும்.

35. ……….. என்பது கொடுக்கப்பட்ட எண் வரையில் உள்ள பகா எண்களை கண்டறிய உதவும் ஓர் எளிய நீக்கல் முறை ஆகும்.

36. மூன்று தொடர்ச்சியான பகா எண்களுக்கு இடையே உள்ள வேறுபாடு இரண்டு எனில், அந்த பகா எண்கள் ஒரு ………. அமைக்கும்.

37. பகா மூன்றன் தொகுதிக்கு எடுத்துக்காட்டு…..

38. 256795 என்ற எண் ஆனது 11 ஆல் வகுபடுமா?

39. 2 மற்றும் 3 என்ற எண்களை தவிர எல்லா பகா எண்களும் …….. இன் மடங்குகளைவிட 1 அதிகமாகவோ அல்லது 1 குறைவாகவோ இருக்கும்.

40. 87846 என்ற என் ஆனது……… வகுபடும்

41. இரண்டு எண்களுக்கான மீப்பெரு பொது காரணி 1 அவ்வெண்கள் ……. எனப்படும்.

42. மீ. சி. ம. ஆனது எப்போதும் மீ. பெ. கா வின் ……….. இருக்கும்.

43. இரு எண்களின் மீ சி ம 432 மற்றும் அவற்றின் மீ. பெ. கா 36. ஓர் எண் 108 எனில் மற்றொரு எண் என்ன?

44. இரு எண்களின் ஓர் எண்ணின் காரணிகளின் கூடுதலானது மற்றொரு எண்ணை தரும் எனில் அவை…….. எனப்படும்.

45. ஆண்டு சராசரி மழை அளவு 998 மி. மீ. இதனை சென்டி மீட்டரில் மாற்றுக.

46. காலத்தை அளக்கும் கடிகாரங்களை பற்றிய படிப்பிற்கு ……… என்று பெயர்.

47. தமிழர்கள் இரவு பொழுதினை கணக்கிட……… என்ற கருவியை பயன்படுத்தினர்.

48. பொழுது அளந்து அறியும் பொய்யா மக்கள் எனப்பட்டவர்…………..

49. நிலத்திற்கு மீட்டரும், எடைக்கு கிராமும், கொள்ளளவுக்கு லிட்டரும் அடிப்படை மெட்ரிக் அலகுகள் ஆகும்.

50. படத்தில் ∠AYZ=45° கதிரின் மீது அமைந்த புள்ளி A ஆனது B-க்கு நகர்கிறது எனில் கோண அளவு ∠BYZ _________