TNTET PAPER II ONLINE TEST | PSYCOLOGY TEST 1 [PAID BATCH]

0
2032

TNTET PAPER -2 ONLINE PAID TEST BATCH -2022

ONLINE TEST | PSYCOLOGY TEST 1

Welcome to your TN TET Psychology unit 1

1. " மனிதனின் புற செயல்களை உற்றுநோக்கி முறையாக ஆராய்ந்து அதன்மூலம் அவை, எங்கனம் அகத்தே நிகழும் சிந்தனை ஓட்டங்களுடன் தொடர்பு கொண்டுள்ளன என்றும், சுற்றுச்சூழலில் ஏற்படும் நிகழ்வுகளால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்று விளக்குவதே"………..

2. மனிதனோ விலங்கோ தனது நடத்தையை வெளிப்படுத்தும் போது உள்நோக்கங்கள் புலப்படுகின்றன என்னும் ஹார்மிக் கொள்கையை கூறியவர்……

3. மன இயக்கத்தின் வடிவமைப்பையும் தன்மையையும் அறிய உதவுவது…..

4. 'மரபு கொள்கை' மற்றும் 'சிந்தனை என்பது உள்ளத்தின் செயல்' என்பதை மறுக்கும் உளவியல் அறிஞர்…..

5. சூழ்நிலையே ஒருவனுடைய நடத்தை மாற்றத்திற்கு பெரும் காரணம் ஆகின்றது. மனிதரின் நடத்தையை………. வாயிலாக தெரியலாம்

6. நடத்தை கோட்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் முழுமை காட்சி கோட்பாடு என்ற புதிய கொள்கை உளவியலில் உதயமான ஆண்டு……

7. ஒரு சைக்கிளை பார்க்கும்போது சக்கரம், மணி, ஹாண்டில் பார் என்று பிரித்து, பல பாகங்களில் தொகுப்பாக பார்க்காது, ஒரு முழு வடிவமாக, இயங்கும் பொருளாக பார்க்கிறோம். இது……. எனப்படும்.

8. ஆளுமை பிறழ்வு, நடத்தை கோளாறு போன்ற பிரச்சனைக்கு அறிதுயில் நிலைக்கு ஆட்படுத்தி அவர்களுடைய நனவிலி மனதின் மூலம் வெளிப்படுவனவற்றை கொண்டு குணப்படுத்தியவர்……..

9. உலகியற்பியல் என்ற நூலை இயற்றியவர்……

10. சரியான இணையை கண்டுபிடி :

11. ஒருவர் தனது அனுபவங்களை தானே உள்நோக்கி பார்த்து விவரித்தலும், அவ்வாறு விவரிக்கப்பட்டவற்றை பகுத்தாய்ந்து வகைப்படுத்துதலும் அகநோக்கு முறையாகும் என்று கூறியவர்……

12. ஒரு திரைப்படத்தை மனதால் எண்ணி பார்த்து அதனை 'சிறந்த படம்', 'மிக மோசமான படம்' அல்லது 'சுமாரான படம்' என்று கருத்து சொல்வதற்கு ……. ஆகும்

13. ஒருவனது புலன் உணர்ச்சிகள், அவற்றுள் தோன்றும் மன பிம்பங்கள், பின் பிம்பங்கள் சிந்தனை முதலியவற்றை ஆராய உதவும் முறை……

14. மாணவர்களது இயல்புகளை அறிவதற்கும், திறல் பதிவிற்கான விவரங்களை திரட்டுவதற்கும் ஆசிரியர் பயன்படுத்தும் முறை…..

15. உற்றுநோக்கல் முறையைப் பயன்படுத்தும் போது எவ்வித செயல் நிலைகள் இடம்பெறுகின்றன?

16. 1. வாழ்க்கை நிகழ்ச்சிகளை தொகுத்து வைத்தல் வாழ்க்கை துணுக்கு முறை எனப்படும். 2. ஒரு நிகழ்ச்சியை, அது நிகழும் இயற்கையான சூழ்நிலையில் உற்றுநோக்கி ஆராய்தல் ஆராய்ச்சி முறை எனப்படும். இவற்றுள் சரியானவை எது?

17. ஒரு தொழிற்சாலையில் எழுந்த வேலை நிறுத்தத்தை, அங்குசென்று உற்றுநோக்கி ஆராய்தல் இம்முறைக்கு எடுத்துக்காட்டாகும்…

18. முதன்முதலில் ஜெர்மனியின் லீப்சிக் நகரில் உளவியல் ஆய்வு கூடம் உண்ட்டு என்பவரால் தொடங்கப்பட்ட ஆண்டு…….

19. 1. பரிசோதனை என்பது கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்றுநோக்கல் எனக்கூறலாம். 2. ஒரு கோட்பாடு அல்லது கருதுகோளினை சரிபார்த்தலுக்காக ஓர் ஆராய்ச்சியாளன் ஆல் முயன்று திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நிலைமை பரிசோதனையாகும்.

20. 1. குழந்தைப் பருவம் தொடங்கி, ஒருவன் முதிர்ச்சி அடைய அவனுடைய பண்புகளும் நடத்தைக் கோலங்களும் எப்படி வளர்ச்சி அடைகின்றன, எவ்விதங்களில் மாறுபாடு அடைகின்றன என்பனவற்றைக் அறிய வளர்ச்சி முறை உதவுகிறது. 2. வளர்ச்சி முறை மூன்று வகைப்படும். இவற்றுள் தவறானவை?

21. தனியாள் ஆய்வு முறை க்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்….

22. தனியாள் ஆய்வில் இடம் பெறும் படிநிலைகள்…….

23. வினா வரிசை முறையை உளவியல் ஆராய்ச்சிக்கு முதல் முதலில் பயன்படுத்தியவர்…..

24. வினா வரிசை முறையின் ஒரு வகை…

25. ஆராயப்படும் பிரச்சினையில் நமது குறுக்கீடு இன்றி இயற்கையாகவே காணப்படும் இரு மாறுபட்ட அல்லது வேறுபட்ட நிலைகளை ஒப்பிட்டு நோக்கி முடிவெடுத்தல்…….. எனப்படும்.

26. நரம்பு மண்டலம், புலன்கள், சுரப்பிகள் போன்றவற்றின் அமைப்பு, செயல்பாடு ஆகியன இடம் பெரும் பிரிவு……..

27. தொழில் உளவியலின் வளர்ச்சிக்கு உதவி உள்ளவர்களில் ஒருவர்…..

28. கற்றல் கற்பித்தல் செயல்பாட்டினை உளவியல் ரீதியாக ஆராய்ந்து, மாணவர்களது கற்றலை மேம்படுத்த உதவும் வழிமுறைகளை கண்டறியும் உளவியல் பிரிவு……

29. கல்வியில் மேற்கொள்ளப்படும் செயல்முறைகளும், பின்பற்றப்படும் வழிமுறைகளிலும், உளவியல் கோட்பாடுகளையும், விதிகளையும் புகுத்தி, கற்றல் கற்பித்தலை மேம்படுத்துதல் கல்வி உளவியல் ஆகும் என்று கூறியவர்…….

30. 1. கோலஸ்னிக் என்பவரின் கருத்துப்படி கல்வி உளவியலின் உட்கூறுகள் – 7, 2. லிண்ட்கிரேன் என்பவரின் கருத்துப்படி கல்வி உளவியலின் செயல்பாட்டின் முக்கிய கூறுகள் – 5, இவற்றுள் சரியானவை?

31. கல்வி உளவியல் என்பது கற்றலின் தன்மை, மனித ஆளுமை வளர்ச்சி, தனியாள் வேற்றுமைகள், மனித நடத்தையை சமூகச் சூழலின் அடிப்படையில் ஆராய்தல் ஆகியவற்றை ஆராய்கின்றது என்று கூறியவர்…..

32. 1. மனித நடத்தையில் அனைத்து கூறுகளைப் பற்றியும் ஒரு பரந்த ஆய்வினை மேற்கொள்வது கல்வி உளவியல் ஆகும். 2. கல்வி உளவியல் என்பது கற்றல் சூழ்நிலைகளில் கற்பவரின் நடத்தை கூறுகள் கற்கும் முறைகள் எவ்வாறு செம்மைப்படுத்தபடுகின்றன என்பதை முதன்மைப்படுத்தி ஆராய்வதாகும். இவற்றுள் தவறானவை எது?

33. வகுப்பறைச் சூழல் என்பது வகுப்பறையில் கொடுக்கப்படும் பிற வசதிகள், சமூக சூழல்கள், ஆசிரியரது மனப்பான்மை, நடத்தை, வகுப்பறை இடைவினைகள் ஆகியவை இடம் பெறுகின்றன.

34. கல்வி அடைவை மேம்படுத்தும் செயல்பாட்டினை பின்வருவனவற்றுள் எந்த முறையின் கீழ் வகைப்படுத்தலாம்?

35. 'கல்வியில் உளவியல்' நடத்தையை அறிவியல்பூர்வமாக விளக்குவது……

36. தனியாள் மனித உறவு முறைகள் பற்றிய உளவியல் பிரிவு…….

37. மனசோர்வு, களைப்பு, மயக்கம், போதைப் பொருள்கள் ஆகியவற்றால் ஒருவரின் நடத்தையில் நிகழும் மாற்றங்கள் ……. ஆகாது.

38. ……… ஆசிரியர் நன்கு புரிந்து கொண்டால் வகுப்பறையில் கற்றல் செயலும் கற்பித்தல் செயலும் செம்மையாக நடைபெறும்.

39. கற்கும் குழந்தையின் உடல் உள்ளம் மனவெழுச்சி சமூக மனப்பான்மை ஆகியவற்றில் வளர்ச்சியைப் பற்றி……. அறிந்து கொள்ள வேண்டும்.

40. மனம் மற்றும் நடத்தை பற்றிய அறிவியல்……

41. கல்வி உளவியல் வலியுறுத்தும் முக்கிய கருத்து…

42. …….. என்பவர் உளவியல் பிரிவுகளை 9 பிரிவுகளில் விளக்கியுள்ளார்.

43. நடத்தையை புரிந்து கொள்ளுதல், கணித்தல், கட்டுப்படுத்தும் என்ற மூன்று குறிக்கோளை கல்வி உளவியலுக்கு குறிப்பிடுபவர்…..

44. உளவியலில் ஒருவர் தன் மனநிலையை தானே உள்நோக்கி அறிந்து கூறும் முறை……

45. சமூக அறவியல் உத்தியில் மாணவன் தேர்ந்தெடுத்த தெரிவுகளின் அடிப்படையில் வைத்து குழுவின்………. வரைவது சமூக வரைபடம் ஆகும்.

46. தனித்தியங்கும் மாறிகள், சார்ந்து இயங்கும் மாறிகள் மீது ஏற்படும் மாற்றங்கள்……. எனப்படும்.

47. ஒருவரின் நடத்தையை அவர் இருக்கும் சூழலை கட்டுப்படுத்துவதால் மாற்ற முடியும் எனக் கூறும் உளவியல் அறிஞர்…….

48. தோலின் தொடும் உணர்வு என்பது வெப்பம் குளிர் வலி அழுத்தம் எனும் கூறுகளாக பிரித்துக் கூறும் கோட்பாடு…….

49. நடத்தையியல் உளவியல் கோட்பாட்டினை 1930 இல் வழங்கிய அமெரிக்க நாட்டு உளவியல் அறிஞர்……

50. அமைப்பியல் சார் உளவியல் அறிஞர்கள் ஒருவரின் அனுபவங்களை ஆராய…….. உலவியல் முறைகளை பயன்படுத்துகின்றனர்.