தமிழ்நாட்டின் வானிலை குறித்த தமிழக அரசின் எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல்கள் | 03.11.2021

0
366

நாள்‌:03.11.2021

தமிழ்நாட்டில்‌, வடகிழக்கு பருவமழை 1:10.2021 முதல்‌ 2.11.2021 வரை 261.7 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 190.9 மி.மீட்டரை விட 37 சதவீதம்‌ கூடுதல்‌.

அரியலூர்‌, கோயம்புத்தூர்‌, ஈரோடு, கரூர்‌, புதுக்கோட்டை, திருநெல்வேலி, திருவாரூர்‌, விழுப்புரம்‌ ஆகிய 8 மாவட்டங்களில்‌ இயல்பை விட 60 சதவீதத்திற்கு மேல்‌ மிக அதிகப்படியான மழை பெய்துள்ளது.

கடலூர்‌, கன்னியாகுமரி, திண்டுக்கல்‌, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌, நாமக்கல்‌, நீலகிரி, பெரம்பலூர்‌, இராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர்‌, தேனி, திருப்பூர்‌, திருவண்ணாமலை தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, வேலூர்‌ ஆகிய 19 மாவட்டங்களில்‌ இயல்பை விட 20சதவீதத்திற்கு மேல்‌ மழை பெய்துள்ளது.

செங்கல்பட்டு, சென்னை, தருமபுரி, காஞ்சிபுரம்‌, கிருஷ்ணகிரி, மதுரை, இராமநாதபுரம்‌, சேலம்‌, திருப்பத்தூர்‌, திருவள்ளூர்‌, விருதுநகர்‌ ஆகிய 11 மாவட்டங்களில்‌ இயல்பான மழை பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில்‌, இந்த ஆண்டு ஜனவரி முதல்‌ 02.11.2021 வரை இயல்பான மழையளவை (680.1 மி.மீ.) விட 36 சதவீதம்‌ (926.1 மி.மீ.) அதிக மழை பெய்துள்ளது.

தமிழ்நாட்டில்‌ உள்ள மொத்தம்‌ 90 அணைகளில்‌, 58 அணைகள்‌, 50 விழுக்காட்டிற்கு மேல்‌ நிரம்பியுள்ளது.

கடந்த 24.09.2021 மற்றும்‌ 26.10.2021 ஆகிய நாட்களில்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌, வடகிழக்கு பருவமழை காலத்தில்‌ மேற்கொள்ள வேண்டிய பணிகள்‌ குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ நடத்தி விரிவான அறிவுரைகள்‌ வழங்கியுள்ளார்கள்‌. மேலும்‌,

தலைமைச்‌ செயலாளர்‌ தலைமையில்‌ 11.09.2021 அன்று ஒன்றிய மற்றும்‌ மாநில அரசு அலுவலர்களுடன்‌ கூட்டம்‌ நடத்தப்பட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ குறித்து அறிவுறுத்தப்பட்‌டது.

25.10.2021 தேதியிலிருந்து குமரிக்‌ கடல்‌ பகுதியில்‌ குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில்‌ இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிக்கு நகரக்கூடும்‌ என்றும்‌, இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியிலிருந்து தெற்கு ஆந்திரா வரை நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில்‌ பெரும்பாலான மாவட்டங்களில்‌ கன மழை முதல்‌ மிக கன மழை பெய்யக்கூடும்‌ என்று இந்திய வானிலை ஆய்வு மையம்‌ தெரிவித்துள்ளது. இதனைத்‌ தொடர்ந்து வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்‌ துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சென்னையில்‌ மாநில அவசரக்‌ கட்டுப்பாட்டு மையம்‌, மாவட்டங்களில்‌ மாவட்ட அவசரக்‌ கட்டுப்பாட்டு மையங்களும்‌ முறையே 1070 மற்றும்‌ 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியுடன்‌, கூடுதலான அலுவலர்களுடன்‌ 24 மணி நேரமும்‌ இயங்கி வருகிறது.

பொதுமக்கள்‌ TNSMART இணையதளத்திலும்‌, வாட்ஸ்‌ அப்‌ எண்‌ 9445869848 மூலமாகவும்‌ புகார்களை தெரிவிக்கலாம்‌.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களது ஆணையின்படி மாநகராட்‌சி, நகராட்‌சி, பேரூராட்சி மற்றும்‌ ஊரகப்‌ பகுதிகளில்‌ 14754.63 கிலோ மீட்டர்‌ நீளம்‌ கொண்ட 83,319 மழைநீர்‌ வடிகால்கள்‌ சுத்தம்‌ செய்யப்பட்டு மழை நீர்‌ வடிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பேரிடர்‌ மேலாண்மையில்‌ தன்னார்வலர்களது பங்களிப்பை உறுதிசெய்யும்‌ பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும்‌ தன்னார்வலர்‌ ஒருங்கிணைப்பு மையம்‌ ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முதல்‌ நிலை மீட்பாளர்களை மீட்பு மற்றும்‌ நிவாரணப்‌ பணிகளில்‌ ஈடுபடுத்தும்‌ பொருட்டு தயார்‌ நிலையில்‌ வைக்கப்பட்டுள்ளனர்‌.

3915 மரம்‌ அறுக்கும்‌ இயந்திரங்கள்‌, 2897 208 கள்‌, 2115 ஜெனரேட்டர்கள்‌, 483 இராட்சத பம்புகள்‌ உள்ளிட்ட தேடல்‌ மற்றும்‌ உபகரணங்கள்‌ தயார்‌ நிலையில்‌ வைக்கப்பட்டுள்ளன.

வானிலை முன்னறிவிப்புகளை மீனவர்களுக்கு உடனுக்குடன்‌ தெரிவிக்க 21000 உயர்‌ VHF கருவிகளும்‌, 600 செயற்கைகோள்‌ தொலைபேசிகளும்‌, 296 NAVTEX and NAVI உபகரணங்களும்‌ மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும்‌, 5106 நிவாரண முகாம்களும்‌ தயார்‌ நிலையில்‌ உள்ளன.

பேரிடர்‌ காலங்களில்‌ ஹெலிகாப்டர்கள்‌ இறங்குவதற்கு ஹெலிபேட்‌ தயார்‌ நிலையில்‌ வைக்கப்பட்டுள்ளது.

பாதிப்பிற்குள்ளாகும்‌ இடங்களுக்கு உடனடியாக அனுப்பும்‌ பொருட்டு, தேசிய பேரிடர்‌ மீட்பு படை மற்றும்‌ தமிழ்நாடு பேரிடர்‌ மீட்பு படை தயார்‌ நிலையில்‌ வைக்கப்பட்டுள்ளது.

மழையால்‌ பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை தாமதமின்றி வழங்கவும்‌, நிவாரண முகாம்களில்‌ தங்கவைக்கப்படும்‌ பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள்‌ செய்து தரவும்‌, அத்தியாவசிய பொருட்கள்‌ தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்திடவும்‌, நிவாரண முகாம்களில்‌ கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவும்‌, குழந்தைகள்‌, வயதானவர்கள்‌ மற்றும்‌ பொதுமக்களுக்கு தேவைப்படும்‌ பால்‌, ரொட்டி, உணவு, மருந்துகள்‌ தடையின்றி கிடைப்பதை உறுதி செய்திடவும்‌, மழைக்காலங்களில்‌ தொற்று வியாதிகள்‌ / டெங்குபோன்றவை பரவாமல்‌ இருக்கவும்‌, தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காலத்தில்‌ ஏற்படும்‌ பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்‌ மேற்கொள்ளப்பட்டு மாநிலம்‌ எவ்வகையான பேரிடரையும்‌ எதிர்கொள்ளும்‌ வகையில்‌ தயார்‌ நிலையில்‌ உள்ளது. இந்நிகழ்வில்‌, கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌/ வருவாய்‌ நிருவாக ஆணையர்‌ திரு.க.பணீந்திர ரெட்டி இ.ஆ.ப, வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌ திரு.குமார்‌ ஜெயந்த்‌, இ.ஆ.ப. பேரிடர்‌ மேலாண்மைத்‌ துறை இயக்குனர்‌ திரு. சுப்பையன்‌, இ.ஆ.ப., மற்றும்‌ உயர்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.  

வானிலை முன்னெச்சரிக்கை 03.11.2027: (ஆரஞ்சு எச்சரிக்கை)

திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, சென்னை, விழுப்புரம்‌, கடலூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்‌, திருநெல்வேலி, தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

04.11.2027:

செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, கடலூர், காஞ்சிபுரம்‌, சேலம்‌, டெல்டா மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

05.11.2021, 06.11.2021:

திருவள்ளூர்‌, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, கடலூர்‌  வட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய உள்‌ மாவட்டங்களில்‌, அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

மாவட்ட வாரியான விவரங்கள்

சென்னை மாவட்டம்‌

வடகிழக்கு பருவமழைக்‌ காலத்தில்‌ 277.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவை (298.9 மி.மீ.) விட 7% குறைவு.

பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌

மிக அதிக பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌ -37

அதிக பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌ -88

திருவள்ளூர்‌ மாவட்டம்‌

வடகிழக்கு பருவமழைக்‌ காலத்தில்‌ 240.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது  இயல்பான மழையளவை (243.9 மி.மீ.) விட 1% குறைவு.

அணைகளின்‌ நீர்‌ இருப்பு விவரம்‌:

திருவள்ளூர்‌ மாவட்டத்தில்‌ 4 அணைகள்‌ 5௦ விழுக்காட்டிற்கு மேல்‌ நிரம்பியுள்ளது.

பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌

மிக அதிக பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌ -8

அதிக பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌ -6௦

செங்கல்பட்டு மாவட்டம்‌

வடகிழக்கு பருவமழைக்‌ காலத்தில்‌ 301.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது

இயல்பான மழையளவை (265.2 மி.மீ.) விட 14% கூடுதல்‌.

பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌

மிக அதிக பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌ – 71

அதிக பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌ -12௦0

காஞ்சிபுரம்‌ மாவட்டம்‌

 வடகிழக்கு பருவமழைக்‌ காலத்தில்‌ 257.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவை (221.3 மி.மீ.) விட 16% கூடுதல்‌.

அணைகளின்‌ நீர்‌ இருப்பு விவரம்‌:

காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌ 1 அணை 5௦ விழுக்காட்டிற்கு மேல்‌ நிரம்பியுள்ளது.

பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌

மிக அதிக பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌ 13

அதிக பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌ -29

கடலூர்‌ மாவட்டம்‌

வடகிழக்கு பருவமழைக்‌ காலத்தில்‌ 334.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவை (231.7 மி.மீ.) விட 44% கூடுதல்‌.

அணைகளின்‌ நீர்‌ இருப்பு விவரம்‌:

கடலூர்‌ மாவட்டத்தில்‌ 1 அணை மட்டும்‌ 5௦ விழுக்காட்டிற்கு மேல்‌ நிரம்பியுள்ளது.

பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌

மிக அதிக பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌ -தர7

அதிக பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌ -5௦

விழுப்புரம்‌ வட்டம்‌

வடகிழக்கு பருவமழைக்‌ காலத்தில்‌ 370.0 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவை (2031 மி.மீ.) விட 82% கூடுதல்‌.

பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌

அதிக பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌ – 8

நாகப்பட்டினம்‌ வட்டம்‌

வடகிழக்கு பருவமழைக்‌ காலத்தில்‌ 370.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவை (259.9 மி.மீ.) விட 43% கூடுதல்‌.

பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌

மிக அதிக பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌ -12

அதிக பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌ -26

மயிலாடுதுறை மாவட்டம்‌

வடகிழக்கு பருவமழைக்‌ காலத்தில்‌ 373.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இது இயல்பான மழையளவை (254.5 மி.மீ.) விட 47% கூடுதல்‌.

பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌

மிக அதிக பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌ -12

அதிக பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌ -33

திருவாரூர்‌ மாவட்டம்‌

வடகிழக்கு பருவமழைக்‌ காலத்தில்‌ 430.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவை (211.1 மி.மீ.) விட 104% கூடுதல்‌.

பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌

மிக அதிக பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌ 1

அதிக பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌ – 56

தஞ்சாவூர்‌ மாவட்டம்‌

வடகிழக்கு பருவமழைக்‌ காலத்தில்‌ 301.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவை (193.5 மி.மீ.) விட 56% கூடுதல்‌.

பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌

மிக அதிக பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌ -3

அதிக பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌ -5௦

புதுக்கோட்டை மாவட்டம்‌

வடகிழக்கு பருவமழைக்‌ காலத்தில்‌ 262.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவை (156.3 மி.மீ.) விட 68% கூடுதல்‌.

பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌

மிக அதிக பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌ -3

இராமநாதபுரம்‌ மாவட்டம்‌

வடகிழக்கு பருவமழைக்‌ காலத்தில்‌ 234.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இது இயல்பான மழையளவை (208.1 மி.மீ.) விட 13% கூடுதல்‌.

தூத்துக்குடி மாவட்டம்‌

வடகிழக்கு பருவமழைக்‌ காலத்தில்‌ 209.0 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது

இயல்பான மழையளவை (161.4 மி.மீ.) விட 29% கூடுதல்‌.

பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌

மிக அதிக பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌ -4

அதிக பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌ – 9

திருநெல்வேலி மாவட்டம்‌

வடகிழக்கு பருவமழைக்‌ காலத்தில்‌ 299.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவை (166.8 மி.மீ.) விட 80% கூடுதல்‌.

அணைகளின்‌ நீர்‌ இருப்பு விவரம்‌:

திருநெல்வேலி மாவட்டத்தில்‌ 1 அணை மட்டும்‌ 5௦ விழுக்காட்டிற்கு மேல்‌ நிரம்பியுள்ளது.

பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌

மிக அதிக பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள் – ‌ 13

அதிக பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌ -33

கன்னியாகுமரி மாவட்டம்‌

வடகிழக்கு பருவமழைக்‌ காலத்தில்‌ 421.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது  இயல்பான மழையளவை (271.5 மி.மீ.) விட 55% கூடுதல்‌.

கன்னியாகுமரி மாவட்டத்தில்‌ 6 அணைகள்‌ 5௦ விழுக்காட்டிற்கு மேல் நிரம்பியுள்ளது.

பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌

மிக அதிக பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌ -21

அதிக பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌ 13

நீலகிரி மாவட்டம்‌

 வடகிழக்கு பருவமழைக்‌ காலத்தில்‌ 356.0 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இது இயல்பான மழையளவை (237.2 மி.மீ.) விட 50% கூடுதல்‌.

பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌

மிக அதிக பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌ -68

அதிக பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகள்‌ -89

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

PDF பதிவிறக்கம் செய்ய கீழே இருக்கும் DOWNLOAD பட்டனை கிளிக் செய்யவும்.