TRB EXAM -ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

0
510

TRB EXAM -ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ மூலம்‌ 2020-21ஆம்‌ கல்வி ஆண்டிற்கான முதுகலை
ஆசிரியர்‌, உடற்கல்வி இயக்குநர்‌ நிலை – 1 மற்றும்‌ கணினி பயிற்றுநர்‌ நிலை – 1 ஆகிய
காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு வாயிலாக நேரடி நியமனம்‌ செய்வதற்கு அறிவிக்கை
எண்‌:01/2021 நாள்‌ 09.09.2021 அன்று வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள்‌ இணைய வழி
வாயிலாக 18.09.2021 முதல்‌ பெறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்‌ அரசாணை நிலை எண்‌. 144, பள்ளிக்‌ கல்வி (ப.க.2(1) துறை, நாள்‌
18.10,2021ன்படி, ஆசிரியர்களின்‌ நேரடி நியமனத்திற்கு பணிநாடுநர்களுக்கான உச்ச வயது.
வரம்பினை உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. எனவே மேற்காணும்‌ அரசாணையின்படி உச்ச
வயது வரம்பினை உயர்த்தியும்‌, உடற்கல்வி இயக்குநர்‌ நிலை – 1 பணியிடத்திற்கு
பணிநாடுநர்கள்‌ இணையவழியில்‌ விண்ணப்பிக்கும்‌ போது M.P.Ed கல்வித்‌ தகுதி ஒருவருடப்‌
பயிற்சி காலம்‌ முடித்தவர்கள்‌ (2002-ற்கு முன்பு முடித்தவர்கள்‌ மட்டும்‌) பதிவேற்றம்‌
செய்வதற்கும்‌, மேலும்‌, முதுகலைப்‌ பட்டப்படிப்பு முதல்‌ வருடம்‌ பயின்று பின்னர்‌ B.Ed, பட்டம்‌
முடித்து அதன்பின்னர்‌ முதுகலைப்‌ பட்டப்படிப்பு இரண்டாம்‌ ஆண்டு சேர்ந்து பட்டம்‌.
பெற்றவர்கள்‌ பதிவேற்றம்‌ செய்வதற்கு மென்பொருளில்‌ தேவையான மாற்றங்கள்‌ ஆசிரியர்‌
தேர்வு வாரியத்தால்‌ மேற்கொள்ளப்பட்டு பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளது என்பதை அனைத்து
விண்ணப்பதாரர்களுக்கும்‌ தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட அரசாணையை PDF வடிவில் டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள CLICK HERE பட்டனை அழுத்துங்கள்

CLICK HERE