Facebook and Xiaomi smart Glass
Xiaomi and Facebook launch his smart Glasses
ஹைலைட்ஸ்
பேஸ்புக் மற்றும் கண்ணாடி தயாரிப்பில் உள்ள ரே-பான் என்ற நிறுவனத்துடன் இணைந்து தனது முதல் ஸ்மார்ட் கிளாஸ் ஒன்றை உருவாகி உள்ளது இதன் மூலம் நம்மால் 30 வினாடிகள் வரை வீடியோ ரெக்கார்ட் செய்ய முடியும் இது போன்ற பல வசதிகளுடன் இந்த ஸ்மார்ட் கிளாசஸ்களுக்கு “ரே-பான் ஸ்டோரீஸ்” என்று பெயரிட்டுள்ளது.
இதே நேரத்தில் பிரபல ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான Xiaomi தனது தயாரிப்பான ஸ்மார்ட் கண்ணாடியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது இதில் பேஸ்புக்கில் உள்ள அம்சங்களை விட அதிக டெக்னாலஜி கொண்டதாகவும், வசதிகள் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே தற்போது பேஸ்புக் மற்றும் சியோமி நிறுவனங்களுக்கு இடையே ஸ்மார்ட் கிளாஸ் தயாரிப்பதில் பெரும் போட்டி நிலவுவதுபோல அனைவராலும் பார்க்கப்படுகிறது. இந்த பதிவில் இந்த இரண்டு ஸ்மார்ட் கண்ணாடிகளின் வசதிகள் அதனைப் பற்றிய நிறைய தகவல்களை பார்க்கலாம்
பேஸ்புக் தயாரிப்பு உள்ள ஸ்மார்ட் கிளாஸ் “ரே-பான் ஸ்டோரீஸ்”
இந்தக் கண்ணாடிகளின் விற்பனையை பேஸ்புக் நிறுவனம் முதல் கட்டமாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இத்தாலி, அயர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளது . இதனை அடுத்து வருகின்ற நாட்களில் உலகம் முழுவதும் விற்பனை செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரு புள்ளி விவரம் என்ன சொல்கின்றது என்றால் வருடாந்திர விற்பனை 2030-க்குள் 22 மில்லியன் யூனிட்களை மக்கள் வாங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
கால் செய்வது, மெசேஜ் மற்றும் நோட்டிபிகேஷன் வந்துள்ளது, வீடியோ மற்றும் போட்டோ பதிவு செய்வது போன்ற வசதிகளை ரே-பான் ஸ்டோரீஸ் கிளாஸ்-ஐ பயன்படுத்தி எடுத்துக் கொள்ளலாம் என்றும், விர்ச்சுவல் அசிஸ்டன்ட் பயன்படுத்தி “ஏய் பேஸ்புக்” என்ற வார்த்தையை சொல்வதன் மூலம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்கும் வசதியை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது.
எடுக்கப்பட்ட புகைப்படங்களும் அல்லது வீடியோக்களையும் சமூக ஊடங்களில் ஷேர் செய்ய வேண்டும் என்றால் ஃபேஸ்புக் வியூ ஆப்-ஐ உங்களது மொபைலில் இன்ஸ்டால் செய்து இதன் மூலம் நீங்கள் பகிர முடியும். இந்த ஸ்மார்ட் கிளாஸ் இன் விலை அமெரிக்க ரூபாயில் அதாவது $299 டாலருக்கு விற்கப்படுகிறது இதனை இந்திய ரூபாய்க்கு மாற்றினால் ரூ21,975 இருக்கும் என்று கூறப்படுகிறது.
சியோமி தனது சொந்த ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்துகிறது
இந்த ஸ்மார்ட் பிளாசா பற்றிய விவரங்களை சியோமி தனது யூடியூப் சேனல் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட் கண்ணாடியை பயன்படுத்துவதன் மூலம் நம்மால் என்ன வசதிகளை பார்க்க முடியும் என்று முழு விபரங்களையும் சொல்லப்பட்டுள்ளது.
சியோமியின் ஸ்மார்ட் கிளாஸ்கள் குவாட் கோர் ARM பிராசஸர் மூலம் ஆண்ட்ராய்டு பயன்படுத்தி இயங்குகிறது. இது OLED பேனல்-ஐ விட அதிக தெளிவான புகைப்படங்களையும் மற்றும் நீண்ட காலம் உழைக்கும் திறனையும் கொண்டுள்ளது. MicroLED imaging தொழில்நுட்பத்தையும் ஒரு புதுவிதமான யோசனையை கொண்டு வந்துள்ளது.
ஸ்மார்ட் கிளாஸ்-ஐ பயன்படுத்தி அலாரங்கள் மற்றும் முக்கியமான செய்திகள் உட்பட மிக முக்கியமான அறிவிப்புகளை பெறமுடியும். முக்கியமாக நீங்கள் வெளியே பயணிக்கும் போது இந்த கண்ணாடியை பயன்படுத்தினால்,
நீங்கள் ஒரு மேப் ஒன்றை உருவாக்க முடியும். அதாவது நீங்கள் அணிந்திருக்கும் கண்ணாடியில் நேவிகேஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டு உள்ளது, இதன் மூலம் நீங்கள் செல்லவேண்டிய இடத்தை குறித்து வைத்துக் கொண்டால் ஒரு கூகுள் மேப் போல இது உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்.
இந்த ஸ்மார்ட் கண்ணாடியில் ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால் மற்றவர்கள் பேசும் சொற்களை பதிவு செய்வது மற்றும் நீங்கள் பார்க்கக் கூடிய புகைப்படமோ அல்லது எழுத்துக்களையோ மொழிமாற்றம் செய்து கொடுப்பது இது போன்ற நிறைய விஷயங்களை சியோமி நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட் கிளாஸ்-ல் கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிறுவனம் இந்த ஸ்மார்ட் கிளாஸ் பற்றிய மேலும் விவரங்களை கூடிய விரைவில் வெளியிடப்படும் என்றும் இந்த ஸ்மார்ட் கிளாஸ் எப்போது சந்தைக்கு வர போகிறது இதுபோன்ற செய்திகளை சீக்கிரமாக அப்டேட் செய்யப்படலாம் என்று நம்பலாம்.