270 நாட்கள் மகப்பேறு விடுப்பு முடிந்து பணியேற்றிருந்தாலும் 365 நாட்கள் விடுப்பை எடுக்கலாம் | புதிய அரசாணை

0
909

270 நாட்கள் மகப்பேறு விடுப்பு முடிந்து பணியேற்றிருந்தாலும் மீதமுள்ள நாட்களுக்கு மகப்பேறு விடுப்பினை வழங்கலாம். ஆனால் மொத்த மகப்பேறு விடுப்பின் காலம் 365 நாட்களுக்கு மிகையாகக்கூடாது என்பதற்கான தெளிவுரை.

செப் 18, 2021. அண்மையில் ஏற்கனவே இருந்த 270 நாட்கள் மகப்பேறு விடுப்பை 365 நாட்களாக மாற்றி தமிழக அரசு 23-08-2021 அன்று ஆணை வெளியிட்டது. அப்போது வெளியான மகப்பேறு விடுப்பை குறித்த ஆணையில் 01.07.2021 முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவித்தது.

இதன்படி 01.07.2021 அன்று மற்றும் அதற்கு பின் விடுப்பைத் தொடங்கியவர்கள் இந்த 365 நாள் விடுப்பை பெறுவதோடு 01.07.2021 க்கு முன்னால் மகப்பேறு விடுப்பை தொடங்கி 01.07.2021 அன்று விடுப்பில் இருந்தவர்களும், 01.07.2021 தேதிக்கு பின் விடுப்பை முடித்து பணியில் இணைந்தவர்களும் மீண்டும் மீதமுள்ள விடுமுறை நாட்களை எடுத்துக்கொள்ளலாம்.

இது ஏற்கனவே முதல் அரசாணையில் தெளிவு பெற்றிருந்தாலும் , கூடுதல் தெளிவுடன் தற்போது அரசாணை வெளியாகியுள்ளது. இதன் படி இரண்டு விதமான குழப்பங்களை அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

  1. புதிய அரசாணை வருவதற்கு முன்பே 270 நாட்கள் விடுப்பை முடித்து பணியில் இணைந்தவர்கள்
  2. புதிய அரசாணை வருவதற்கு முன்பே 270 நாட்கள் விடுப்பை முடித்து தொடர்ந்து தங்கள் விடுப்பை ஈட்டிய விடுப்பு/ஈட்டாத விடுப்பு (Earned/Unearned Leave), மருத்துவ விடுப்பு(Medical Leave), Extradionary Leave போன்ற விடுப்பாக எடுத்தவர்கள்.

முதலாவதாக 01.07.2021 அன்று விடுப்பில் இருந்து அதன் பின்பு புதிய அரசானை 23-08-2021 அன்று வருவதற்கு முன்பே தனது 270 நாட்கள் விடுப்பை முடித்து பணியில் இணைந்தவர்கள் மீதமுள்ள விடுப்பு நாட்களை எடுக்க தகுதியுள்ளவர்கள். 270 நாட்கள் முடிந்து பணியில் இணைந்து பணி செய்த நாட்கள், வேலை நாட்களாகவே கருதப்படும். எனவே அந்த நாட்களை தவிர்த்து மொத்தமாக உள்ள 365 நாட்கள் விடுப்பில் 270 நாட்கள் போக மீதமுள்ள நாட்களை விடுப்பாக எடுத்துக்கொள்ளலாம்.

இரண்டாவதாக 01-07-2021 அன்று விடுப்பில் இருந்தவர்கள் தங்கள் 270 நாட்களை முடித்தும் கூடுதல் விடுப்பு வேண்டி தங்கள் விடுப்பை ஈட்டிய விடுப்பு/ஈட்டாத விடுப்பு (Earned/Unearned Leave), மருத்துவ விடுப்பு(Medical Leave), Extraordinary Leave போன்ற விடுப்பாக தொடர்ந்து அதிக விடுப்பை எடுத்திருப்பார்கள்.
இவர்கள் 270 நாட்கள் போக மீதம் எடுத்த மற்ற வகை விடுப்பை இந்த அரசாணையை பயன்படுத்தி மகப்பேறு விடுப்பாக மாற்றிக்கொள்ளலாம். அதுபோக 365 நாட்களில் மீதம் உள்ள விடுப்பையும் தொடர்ந்து எடுக்க அனுமதிக்கப்படுவர்.

இந்த புதிய அரசாணையை பதிவிறக்கம் செய்ய கீழே இருக்கும் Download பட்டனை கிளிக் செய்யவும்

Download New G.O 17-09-2021

Download August Maternity Leave Go 23-08-2021