தேசிய சின்னங்கள் மற்றும் தமிழக கட்டிட கலைகள் பற்றிய குறிப்புகள்-TNPSC NOTES

0
539

தேசிய சின்னங்கள்

  • தேசிய சின்னம் – நான்முக சிங்கம் 26 ஜனவரி 1950ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.‌ சாரநாத் அசோக் தூணில் உள்ள நான்முக சிங்கம். (தற்போது சாரநாத் தூண் டெல்லி அருங்காட்சியகத்தில் உள்ளது)
  • தேசிய கீதம் – ஜனகனமண 24 ஜனவரி 1950ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முதன்முதலாக 27 டிசம்பர் 1911ல் கொல்கத்தாவில் பிஎன் தார் தலைமையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது. இரவீந்திரநாத் தாகூரால் வங்க மொழியில் பாடப்பெற்றது.
  • தேசிய பாடல் – வந்தே மாதரம் 24 ஜனவரி 1950ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1870 பக்கிம் சந்திர சாட்டர்ஜியால் ஆனந்த மடம் என்ற கவிதை நூலில் எழுதப்பட்டது.‌ சமஸ்கிருத மொழியில் பாடப்பட்டது. 1937ல் காங்கிரஸ் உழைப்புக் குழு முதலில் உள்ள இரு பாடல்களை மட்டுமே ஏற்றுகொண்டது.
  • தேசிய உறுதிமொழி – இந்தியா எனது தாய்நாடு – 26 ஜனவரி 1965ல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1962ல் தெலுங்கு மொழியில் பிதிமாரி வெங்கட சுப்பாராவால் எழுதப்பட்டது.
  • தேசிய நாணயம் – 15 ஜூலை 2010ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.‌ இந்த சின்னத்தை வடிவமைத்தவர் தமிழகத்தைச் சேர்ந்த டி.உதயகுமார். இந்த குறியீடு தேவநாகரி மெய் எழுத்திலுள்ள ‘ரா‌’ மற்றும் லத்தின் எழுத்தான ‘R’ ஆகியவற்றில் இருந்து பெறப்பட்டது.‌
  • தேசிய நாட்காட்டி – சகா வருடம் (கனிஷ்கர் ஆண்டு கிபி 78) 22 மார்ச் 1957ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • தேசிய விழாக்கள் – ஆகஸ்ட் 15, ஜனவரி 26, அக்டோபர் 2, நவம்பர் 14, ஜனவரி 12 தேசிய இளைஞர் தினம் (சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள்).

தமிழர்களின் கட்டடக்கலை
கலைகள்

  • கலைகள் ஒரு நாட்டின் பன்முக பண்பாட்டு அடையாளமாக திகழ்கிறது.
  • மணிமேகலை காப்பியம் கலைகளை 64 என குறிப்பிடப்படுகிறது.
  • தமிழகத்தில் இருந்த 64 முதன்மை கலைகளை என் அம்மை என்று கம்பர் தெரிவிக்கிறார்.
  • பொதுக் கலைகள், அழகுக் கலைகள் என இருவகைப்படும்.
  • காட்சி இன்பம், கேள்வி இன்பம் தருபவை அழகுக் கலைகள்.
  • கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, காவியக்கலை என அழகுக் கலைகளை ஐந்தாக வகைப்படுத்தி கவின் கலைகள் என தமிழறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி கூறியுள்ளார்.

கட்டடக்கலை

  • தமிழகத்தில் உள்ள வீடு, மாளிகை, அரண்மனை மற்றும் கோவில்கள் போன்றவை கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
  • கோவில்கள் காலத்தைக் கடந்து தமிழரின் கட்டடக்கலைக்கு சான்றுகளாக திகழ்கின்றன.
  • சங்ககாலத்தில் முறையாக கட்டடங்களை அழகுற அமைப்பதற்கு மனை நூல்கள் இருந்தன.
  • “நூலோர் சிறப்பின் முகில் தோய் மாடம்” என்று இளங்கோவடிகள் கூறுகிறார்.‌

மரக்கட்டடங்கள்

  • சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சபாநாயகர் மண்டபம்.‌
  • மரக் கட்டடங்கள் செம்பு, வெள்ளி, பொன் ஆகிய தகடுகளால் வேயப்பட்டவை.
  • அந்த காலத்தில் மரக் கட்டடங்களோடு களிமண் கட்டடங்களும் தோன்றின.
  • தமிழ்நாட்டில் ஐந்து சபைகள்
  1. சித்திர சபை (சித்திர வேலைப்பாடுகள் உள்ளது) – குற்றால நாதர் ஆலயம் – தென்காசி மாவட்டம்
  2. தாமிர சபை (முழுவதும் தாமிர தகடுகளால் வேயப்பட்டிருக்கும்) – நெல்லையப்பர் காந்திமதி அம்மன் ஆலயம் – திருநெல்வேலி மாவட்டம்.
  3. வெள்ளி சபை (வெள்ளித் தகடுகளால் வேயப்பட்டிருக்கும்) – மீனாட்சி அம்மன் கோவில் மதுரை
  4. பொற்சபை (தங்க முலாம் பூசப்பட்ட தகடுகளால் வேயப்பட்ட தகடுகள்) – தில்லை நடராஜர் கோவில் – சிதம்பரம்.
  5. இரத்தின சபை – திருவாலங்காடு திருவள்ளூர் மாவட்டம்.

செங்கல் கட்டடங்கள்

  • சங்க காலத்தில் இருந்தே செங்கற்களால் ஆன கட்டிடங்கள் தமிழ்நாட்டில் அதிகம் உள்ளன.
  • மரத்தாலான கட்டிடங்களை விட இவை உறுதியானவை.
  • கிபி 6ம் நூற்றாண்டிற்கு முற்பட்ட கோவில்கள் அனைத்தும் செங்கல் கட்டடங்களாகவே இருந்துள்ளன.
  • அப்போதிலிருந்த மன்னர்களால் புனரமைப்பு செய்யப்பட்டது.

கோபுரங்கள்

  • கோவில் உறுப்புக்களில் மிக முக்கியமானது கோபுரம்.
  • இந்த கோபுரம் சுற்றுப்புற சுவரில் ஊடறுத்து செல்லும் நுழைவாயின் மேல் கட்டப்பட்டது.
  • கோபுரத்தின் உச்சியில் ஒன்றிற்கும் மேற்பட்ட கலசங்கள் இடம் பெற்றிருக்கும்.
  • கோவில்களில் கோபுரம் அமைத்தல் பல்லவர் காலத்தில் தொடங்கி விஜயநகர பேரரசு காலத்தில் மிகவும் உன்னத நிலையை அடைந்தது.
  • கோவில் நகரம் – மதுரை. ஆயிரம் கோவில்களின் தலைநகர் – காஞ்சிபுரம். ஐந்து கோபுரங்களின் நகரம் – விருத்தாசலம்.
  • இராஜ சிம்மன் (இரண்டாம் நரசிம்ம வர்ம பல்லவன்) காலத்தில் கட்டப்பட்ட காஞ்சி கைலாசநாதர் கோவிலில் தான் முதன்முதலாக சிறு கோபுரம் அமைக்கப்பட்டது.
  • பல்லவர்களும் சோழர்களும் கோவில் விமானத்திற்கு முக்கியத்துவம் அளித்தனர்.
  • விஜயநகர மற்றும் நாயக்கர் காலத்தில் விமானங்களை சிறியதாகவும் கோபுரங்களை பெரியதாகவும் அமைத்தனர்.
  • கிருஷ்ண தேவராயர் ஆட்சி காலத்தில் தான் மிக உயர்ந்த கோபுரங்கள் கட்டத் தொடங்கினர்.
  • கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்ட கோபுரங்கள் – காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சிதம்பரம் போன்ற இடங்களில் உள்ள பெரிய கோபுரங்கள். இவையே இராஜ கோபுரம் என பிற்காலத்தில் அழைக்கப்பட்டன.