12 ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு – ஒரே கிளிக்கில் தெரிந்துகொள்ளலாம்! | 12th class Mark calculation online

0
1164


12 ஆம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்கும் முறை-விளக்க எடுத்துக்காட்டு:

10 ஆம் வகுப்பு


உயர் மதிப்பெண் பெற்ற மூன்று பாடங்களின் மதிப்பெண் 70,80,90 எனக்கொண்டால் இவற்றின் சராசரி, அதாவது மூன்றையும் கூட்டி மூன்றால் வகுக்க கிடைப்பது 80 ஆகும். இந்த 80 இல் 50 சதவீதம் 40 ஆகும். இந்த 40 மதிப்பெண்ணை 12 ஆம் வகுப்பில் ஒவ்வொரு பாட மதிப்பெண்ணுக்கும் கூட்டிக்கொள்ள வேண்டும்.

11ஆம் வகுப்பு

தமிழில் பெற்ற மொத்த மதிப்பெண் 90 எனில் அக மதிப்பீட்டு மதிப்பெண் 10 போக மீதம் உள்ளது 80 ஆகும். இதில் 20 சதவீதம் எடுத்துக்கொள்ள வேண்டும். 80 ஐ 20 ஆல் பெருக்கி 90 ஆல் வகுத்துக்கொள்ள வேண்டும். அப்படியெனில் 17.77 =18 ஆகும். அதாவது 12 ஆம் வகுப்புக்கு தமிழ் பாடத்தில் சேர்க்க வேண்டிய மதிப்பெண் 18 ஆகும். இதுவே இயற்பியல் பாடத்தில் ஒருவரது மொத்த மதிப்பெண் 90 எனில் செய்முறைதேர்வு மதிப்பெண் 20 அகமதிப்பீட்டு மதிப்பெண் 10 போக மீதம் இருப்பது 60 ஆகும். இதற்கு 20 சதவீதம் என்பது 60 ஐ 20 ஆல் பெருக்கி 70 ஆல் வகுக்க வேண்டும். எனவே இயற்பியல் மதிப்பெண் ஆனது 17.14 =17 ஆகும். அதாவது 12 ஆம் வகுப்பில் இயற்பியல் பாடத்தில் சேர்க்க வேண்டிய மதிப்பெண் 17 ஆகும். இதே போன்று ஒவ்வொரு பாடத்திற்கும் கணக்கிட வேண்டும்.

12 ஆம் வகுப்பு

இதில் செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களுக்கு செய்முறைத் தேர்வுக்கு 20 + அக மதிப்பீட்டு மதிப்பெண்ணுக்கு 10 என மொத்தம் 30 மதிப்பெண் எடுத்துக்கொள்ள வேண்டும். செய்முறைத் தேர்வு இல்லாத படங்களுக்கு அந்தந்த பாடத்திற்கு வழங்கப்பட்ட அக மதிப்பீட்டு மதிப்பெண்ணை மூன்றால் பெருக்கிக் கொள்ள வேண்டும். உதாரணமாக ஒருவருக்கு தமிழ் பாடத்தில் அக மதிப்பீட்டு மதிப்பெண் 8 வழங்கப்பட்டது எனில் அவருக்கு 12 ஆம் வகுப்பில் தமிழ் பாடத்திற்கு 8×3=24 என எடுத்துக்கொள்ள வேண்டும்.

12 ஆம் வகுப்பிற்கு மதிப்பெண் வழங்கும் முறை

உதாரணமாக தமிழ் பாடத்திற்கு எடுத்துக்கொள்வோம்.
பத்தாம் வகுப்பில் கணக்கிட்ட மதிப்பெண் 40, பதினோன்றாம் வகுப்பில் கணக்கிட்ட மதிப்பெண் 18, பண்ணிரண்டாம் வகுப்பில் கணக்கிட்ட மதிப்பெண் 24 ஆகிய அனைத்தையும் கூட்ட கிடைப்பது 40+18+24=82. எனவே 12 ஆம் வகுப்பிற்கு அவருக்கு தமிழ் பாடத்தில் 80 மதிப்பெண் வழங்கப்படும். இதே முறையை அனைத்து பாடங்களுக்கும் பின்பற்றவும்.

உங்கள் மதிப்பெண்ணை ஒரே கிளிக்கில் கணக்கிட வேண்டுமா…!

(கீழே உள்ள CLICK HERE பட்டனை அழுத்தி உங்கள் மதிப்பெண்ணை துல்லியமாக நீங்களே கணக்கிட்டு கொள்ளலாம்)

Click here

12ஆம் வகுப்பு மதிப்பெண் வழங்குவது பற்றிய அரசின் அறிவிப்பு -முழு விபரங்கள்

(கீழே உள்ள click here பட்டனை அழுத்தி pdf டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்)

Click here