12ஆம் வகுப்பு தேர்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் – எல்.முருகன்

0
264

தமிழக அரசு 12ஆம் வகுப்பு தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

சென்னை தரமணியில் உள்ள வி.எச்.எஸ். மருத்துவமனையில் பாஜக கிழக்கு மாவட்ட செயலாளர் சாய் சத்தியன் தலைமையில் பாஜக சார்பில் மத்திய அரசின் 8ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு சேவை வாரமாக கடைபிடிக்கபடுகிறது. இன்று இந்த மருத்துவமனையில் 125 பேர் ரத்ததானம் செய்தனர்.

இரத்ததான முகாமை பார்வையிட்ட பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிகள் குறித்து மருத்துவர்களிடம் நலம் விசாரித்து அவர்களுக்கு மதிய உணவு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், மத்திய அரசு சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்ததை நீதிமன்றம் வரவேற்றுள்ளது. தமிழகத்தல் 12ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய எவ்வளவு நாள் ஆலோசனை செய்வார்கள் தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்.


மத்திய அரசு போதிய தடுப்பூசி வழங்கவில்லை என திமுக குற்றச்சாட்டுவது குறித்து கேட்டபோது தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை போதிய அளவில் தேவைகேற்ப வழங்கப்பட்டு வருகிறது.

எல்.முருகன்

அப்போது, நேற்றைய தினம் அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியது தொடர்பா கேள்விக்கு, ‘திமுக இந்துக்களுக்கு ஆதரவாக இருப்பது போல் காட்டிக் கொள்கிறது. ஆனால் ஆதரவாக இல்லை’ என எல்.முருகன் கூறினார்.

இந்நிலையில், தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதா? அல்லது ரத்து செய்வதா? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து கல்வியாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் மாலை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ககர்லா உஷா, ஆணையர் நந்தக்குமார் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொள்ள உள்ளனர்.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி நிர்வாகம், கல்வியாளர்கள் என அனைவரின் கருத்தை கேட்டு முடிவு எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான கருத்துக்களை பெற மின்னஞ்சல் முகவரியும் தொலைபேசி எண்ணும் பக்ரப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் என தெரிவித்து இருந்த நிலையில் கடந்த இரு தினங்களாக கருத்துகள் பெறப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று மாலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் கல்வியாளர்கள் உடன் ஆலோசனை மேற்கொள்கிறார். அதன் பின்னர் அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் இறுதி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, இன்று மாலை முதலமைச்சரை சந்தித்து நேரில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.