ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான அரசுப்
பள்ளி மாணவர்களில் 10 பேருக்கு ஒரு ஆசிரியரைப் பொறுப்பாளராக
நியமித்து இணையவழி வகுப்பு நடத்த உத்தரவிடப் பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை தீவிரமாக உள்ளதால் தற்
போது முழு பொது முடக்கம் அமலில் உள்ளது. பள்ளிகள், கல்லூரிக
ளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கரோனா தீவிரம் குறைந்த பின்னர்
பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்
ளது.
இந்நிலையில் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தினமும் கற்றல் பயிற்சி வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தி உள்ளார்.
ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான, அரசுப் பள்ளி மாணவர்களில் 10 பேருக்கு ஒரு ஆசிரியர் என, பொறுப்பாளராக நியமித்து
இணையவழி கற்றல் பயிற்சி வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, தினசரி பாடப் பயிற்சிகள், செய்முறைகள் போன்றவற்றை வழங்கி, அவற்றை மதிப்பிட்டு, மாணவர்களை உற்சாகப்படுத்தவும், ஆசிரியர்கள் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளதாக அதிகாரிகள்
தெரிவித்தனர்.