கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள Co-Win இணையதளத்தில் பதிவு செய்வது எப்படி?

0
190

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள இணையதளத்தில் தினமும் காலை 9 மணியிலிருந்து மாலை 3 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். ஒருவரே தங்களுடன் சேர்த்து நான்கு நபர்கள் வரை பதிவு செய்யலாம்.

கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கான அடுத்த கட்டம் (March 1) தொடங்குகிறது. தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்காகப் பதிவு செய்வதற்கு அரசின் (Co-Win) அதிகாரப்பூர்வ இணையதளம் ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், இந்த இணையதளத்தின் வாயிலாகவோ அல்லது ஆரோக்கிய சேது செயலியில் இதற்கெனக் கொடுக்கப்பட்டுள்ள பக்கத்திலோ சென்று பதிவு செய்து கொள்ளலாம். மருத்துவப் பணியாளர்களைத் தொடர்ந்து தற்போது, 60 வயதிற்கு மேற்பட்டவர்களும், வேறு நோய்களுக்காக மருத்துவக் கண்காணிப்பில் இருக்கும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களும் கொரோனா தடுப்பூசி பெற தற்போது பதிவு செய்து கொள்ளலாம்.

Co-Win இணையதளம்

இதற்காகப் பதிவு செய்வதற்கான இணையதளத்தில் தினமும் காலை 9 மணியிலிருந்து மாலை 3 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். இணையதள முகவரிக்கு இங்கே கிளிக் செய்யவும். இந்த இணையதளத்தில் அல்லது ஆரோக்கிய சேது செயலியில் பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்வது எப்படி?

www.cowin.gov.in இணையதள முகவரியில் வலது மேற்புறத்தில் VACCINATOR என்ற இடத்தில் கிளிக் செய்யவும்.

* உங்கள் மொபைல் எண்ணைக் கொடுத்துப்பின், அதற்கு வரும் OTP எண்ணையும் கொடுத்து உள்நுழையவும்.

* நீங்கள் தடுப்பூசி பெறப் பதிவு செய்யும் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கே உங்கள் அடையாள அட்டையாக ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் (ஆதார், ஓட்டுநர் உரிமம் அல்லது ஏதேனும் ஒன்று)

* அடுத்து உங்கள் பெயர், வயது ஆகியவற்றைப் பூர்த்தி செய்து அடையாள அட்டையைப் பதிவேற்றம் செய்யவும்.

* 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னரே ஏதேனும் உடல் பிரச்னைகள் இருந்தால், அதற்கான மருத்துவச் சான்றிதழையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

* அதன் பின்னர் REGISTER பட்டனை கிளிக் செய்யவும்.

* ஒருவரே தங்களுடன் சேர்த்து நான்கு நபர்கள்வரை பதிவு செய்யலாம்.

Co-Win Website

* அதன் பின்னர் SCHEDULE APPOINTMENT பட்டனை கிளிக் செய்யவும்.

* அதில் உங்கள் மாநிலம், மாவட்டம், பின் கோடு ஆகியவற்றைக் கொடுத்து, உங்களுக்கான மையத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

* அதன் பின்னர் உங்களுக்கான தேதி மற்றும் நேரம் ஆகியவற்றையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

* பின்னர் BOOK பட்டனைக் கிளிக் செய்யவும்.

* நீங்கள் பதிவு செய்த பின்னர், அனைத்துத் தகவல்களும் அடங்கிய குறுஞ்செய்தி பதிவு செய்த எண்ணிற்கு வரும். அதனைத் தடுப்பூசி மையத்தில் காட்டி தடுப்பூசி பெற்றுக் கொள்ளலாம்.

* மேலும் பதிவு செய்த நேரத்திற்குத் தடுப்பூசி பெற முடியாது எனில் அந்த நேரத்தை இதே இணையதளத்தின் மூலம் மாற்றியமைத்துக் கொள்ளலாம்.

இதனைத் தவிர அருகில் இருக்கும் தடுப்பூசி மையங்களைத் தெரிந்து கொள்ளவும் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தலாம்.