இன்றைய ராசிபலன் (18/02/2021)

0
405

பன்னிரண்டு ராசிக்காரர்களுக்குமான இன்றைய பொதுப்பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளதுஇந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய தமிழ்மடல் வாழ்த்துகிறது.

1.மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அற்புதமாக இருக்கும். நீங்கள் எந்த செயல் செய்தாலும் அதில் நிதானமும் பொறுமையும் கடை பிடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் ஈட்டுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் அனுசரணையாக இருப்பீர்கள்.

2.ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு புகழ் அதிகரிக்கும் நாளாக அமையும். தேவைக்கேற்றவாறு செலவு செய்வது மிகவும் நல்லது. உங்களுடைய குடும்பத்தில் நீங்கள் முக்கியமான நபராக விளங்குவீர்கள். வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணவர்களின் படிப்பில் மிகுந்த அக்கறை தேவை.

3.மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெறும் நாளாக இன்று உங்களுக்கு இருக்கிறது. உங்களுக்கு எதிர்பார்த்த பண உதவி நண்பர்களால் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. எந்த ஒரு விஷயத்தை முயற்சி செய்தாலும் அதில் வெற்றி காண்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு நிறைந்து காணப்படும்.

4.கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு வியாபாரத்தில் புதிய புதிய முயற்சிகள் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில் அதிக லாபம் ஈட்டுவீர்கள். சக ஊழியர்களுடன் அனுசரணையாக செல்வது மிகவும் நல்லது.

5.சிம்மம் 

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு நீங்கள் செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி அடையும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வேலையில் பொறுமையுடன் நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளால் பெருமை உண்டாகும் பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது.

6.கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அடிப்படை வசதி வாய்ப்புகளை மேற்கொள்வதில் இன்று நீங்கள் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வளர்ச்சி உண்டாகும். இன்று உங்களுக்கு அனைவரிடமும் மதிப்பும் மரியாதையும் உயரும். நீண்ட நாளாக வாங்க நினைக்கும் வாகனம் வாங்குவீர்கள்.

7.துலாம் 

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும் நாளாக இன்று உங்களுக்கு அமைகிறது. வியாபாரத்தில் பணம் வரவு குறையும். உத்தியோகத்தில் வேலை நேரம் அதிகரிக்கும். அடுத்தவர்களை காயப்படும் படி பேசாதீர்கள். இன்று உங்களுக்கு பொறுமை தேவைப்படும் நாள். உங்கள் ராசி சாதகமற்று இருப்பதால் சோர்வு களைப்பு வந்து சேரும்.

8.விருச்சிகம் 

விருச்சிக ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு யோகமான நாளாக அமைய போகிறது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வந்தாலும் ஒற்றுமையுடன் இருப்பீர்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எடுக்கக்கூடிய முயற்சிகளுக்கு உறவினர்கள் உதவி செய்வார்கள்.

9.தனுசு 

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக அமைகிறது. நீங்கள் எடுக்கக் கூடிய புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். தந்தை வழி உறவினர்களில் மூலம் உதவிகள் கிடைக்கும்.தொழிலில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பு தருவதால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணை உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

10. மகரம் 

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு நீங்கள் எடுத்த காரியத்தை தைரியமாக முடிக்க கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உறவினர்கள் கேட்ட உதவிகளையும் செய்வீர்கள். மேலும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணங்களை கேட்டறிந்து அதன்படி செயல்படுவீர்கள்.

11.கும்பம் 

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு தெய்வீக அனுகிரகம் நிறைந்துள்ளது. குடும்பத்தில் குழந்தைகள் பிடிவாதமாக நடந்து கொள்வார்கள். கையில் எடுத்த காரியத்தை சிறு சிறு தடைகள் ஏற்பட்டாலும் அதை முடித்து விடுவீர்கள். பண வரவு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். அனைவரிடமும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

12.மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பணிபுரியும் இடத்தில் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பணத்தை செலவு செய்வதில் சிறிது கவனம் தேவை. நீண்ட நாளாக இருந்த மனக்கவலை நீங்கும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரணங்களில் அதிக செலவு செய்வீர்கள்.