தமிழ்நாட்டில் Dream 11 விளையாட்டிற்கு தடை

0
687

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட மோகத்தால் தமிழக மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் உயிர் பலியும் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடைவிதிக்கும் விதமாக நவம்பர் மாதம் 20ஆம் தேதி சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது.மேலும் பிப்ரவரி 4ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அந்த தடை மசோதாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தாக்கல் செய்தார் இந்த தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் அபராதமும் 6 மாத சிறை தண்டனை வழங்கும் மேலும் சூதாட்டத்தை நடத்துபவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்படும் எனவும் சட்டத்திருத்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சமீபத்தில் 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு ஸ்பான்சர் செய்த ஆன்லைன் சூதாட்ட தளமான dream 11க்குதமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து நேற்று சட்டம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தில் Dream 11க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது Dream 11 அப்ளிகேஷனை ஓப்பன் செய்தால் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட செய்தி நோட்டிபிகேஷன்ஆக தெரிகிறது.