வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம்? கல்வி அமைச்சர் பதில்

0
170

பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக பரிசீலித்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.நாட்டின் 72ஆவது குடியரசு தினத்தையொட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சாரண சாரணியர் இயக்க தலைமையகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம் கொண்டு வருவது குறித்து, பரிசீலித்து வருவதாக தெரிவித்தார். குறைவான காலத்தில் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராவதால், வினாத்தாள் வடிவமைப்பில் எளிமை மற்றும் மாற்றம் கொண்டு வருவது குறித்து பெற்றோர்களின் கருத்துகளை கேட்ட பின்னர், முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.