உங்கள் குழந்தை மண் அள்ளி தின்கிறதா..? அதற்கான காரணங்களும் தடுப்பு வழி முறைகளும்….

0
596
        குழந்தைகள் மண்ணள்ளி சாப்பிடுவதை நாம் பார்த்திருப்போம். எல்லா குழந்தைகளும் மண்ணை அள்ளி தின்பதில்லை. ஒருசில குழந்தைகள் மட்டுமே மண்ணள்ளி தின்கின்றன. எத்தனை முறை அடித்தாலும் சில குழந்தைகள் தொடர்ந்து மண்ணள்ளி தின்று கொண்டே இருக்கின்றன.
இதற்கான அறிவியல் காரணம் என்ன தெரியுமா? 
       ஊட்டச்சத்து குறைவு தான் காரணம். குழந்தைகளிடம் இரும்புச் சத்து குறையும் பொழுது குழந்தைகள் அந்த இரும்புச்சத்து உள்ள பொருளை இயற்கையாகவே நாடுகின்றது. மண், எழுதும் குச்சி, செங்கல் உள்ளிட்ட பொருட்கள், தன்னிடம் இல்லாத ஊட்டச்சத்தினை கொண்டிருப்பதாக (நொதிகளின் தூண்டுதலால்) குழந்தைகள் அப்பொருளை தின்ன ஆவல் கொள்கின்றது. 
       நீங்கள் டாக்டரிடம் உங்கள் குழந்தைகளை மண்ணள்ளி தின்கிறது என்று அழைத்துச் சென்றால் அவர் சிரித்துக்கொண்டே ஒரு சத்து டானிக் ஒன்றினை எழுதிக் கொடுப்பார். ஆதலால் இனி உங்கள் குழந்தை மண் அள்ளி தின்றால் அடிக்காமல் சத்தான ஊட்டச்சத்து மிக்க பொருளை கொடுத்து மண்ணை அள்ளி தின்பதை தடுக்கலாம். 
     குழந்தைகளுக்கு நவ தானியங்களை வாங்கி திரித்து பாலில் கலந்து கொடுக்கலாம். அதனுடன் பேரிச்சை பழம் டானிக் கலந்தும் வழங்கலாம். இதனால் தேவையான ஊட்டச்சத்து பெற்று குழந்தைகள் மண் அள்ளி தின்பதை தானாகவே நிறுத்தி விடுவார்கள்.