ஒரு தன்னம்பிக்கை கதை – கழுகின் போராட்டம்…!

0
7011
       கழுகு, பறவை இனங்களிலே அதிகபட்சமாக 70 ஆண்டுகள் உயிர் வாழக்கூடியது. ஆனால் 70 ஆண்டுகள் வாழ்வதற்கு கழுகு, தனது 40 வயதில் மிகப்பெரிய ஒரு போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கிறது. 
         கழுகின் நாற்பதாவது வயதில், அதன் அலகு மற்றும் சிறகுகள் வலுவடைந்து, பறப்பதற்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கின்றது. இதே நிலை நீடித்தால் கழுகினால் பறக்கவோ இரை தேடவோ முடியாது. 
      இந்த நிலையில், கழுகு இரண்டு வழிகளில் ஏதாவது ஒரு வழியை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. ஒரு வழி மரணம் . மற்றொரு வழி, ஐந்து மாதங்கள் மரண வலியை தாங்க வேண்டிய துறவு வாழ்க்கை. 
        அதாவது ஒன்று, கழுகு இறக்க வேண்டும் இல்லையேல் ஐந்து மாதத்திற்கான போராட்டம் மிகுந்த ஒரு வாழ்வினை அது வாழ வேண்டும். முடிவில் கழுகு 5 மாத போராட்ட வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறது. 
        அதன்படி கழுகு உயரமான மலையில் சென்று தன் அலகினை பாறையில் உரசி முகப்பினை முறித்து விடுகிறது. மேலும் தன் இறக்கையில் இருக்கக்கூடிய, ஒவ்வொரு இறகுகளையும், வலியைத் தாங்கிக்கொண்டு உருவி போடுகின்றது. 
         பசியையும், தாகத்தையும், பயங்கரமான வழியையும் தாங்கிக் கொண்ட கழுகு, 5 மாதத்திற்கு பிறகு, புதிய சிறகுகளோடும், அழகோடும் இளமையாக தோன்றி, அடுத்த 30 வருடத்திற்கு ஆரோக்கியமான ஒரு வாழ்வினை வாழ்கின்றது. 
        ஐந்தறிவு ஜீவராசிகள் கூட தனது வாழ்விற்காக, மிகப்பெரிய போராட்டத்தை எதிர் கொண்டு வெற்றி அடையும் பொழுது, ஆறறிவு பெற்ற மனிதனால் போராட்டத்தை எதிர்கொண்டு வெற்றியடைய முடியாதா…? 
சிந்தித்து செயலாற்றுங்கள்….